என் மலர்
நீங்கள் தேடியது "Slokas"
- இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
- எதிரிகள் தொல்லை நீங்கும்.
விருத்தம் (த்யானம்):
மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
குருநாதனே துணை வருவாய் (2) வாயுபுத்ரனே வணங்கினேன் (2) ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே
ஜயஹனுமானே..ஞானகடலே,
உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1) ராமதூதனே..ஆற்றலின் வடிவமே, அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2) மஹா வீரனே..மாருதி தீரனே.. ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)
தங்க மேனியில் குண்டலம் மின்ன,
பொன்னிற ஆடையும்.. கேசமும் ஒளிர(4)
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய, இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5) சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே.. உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6) அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா, ராம சேவையே..சுவாசமானவா.. (7) உன் மனக் கோவிலில் ராமனின் வாசம், ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)
ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி
உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய், கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9) அரக்கரை அழித்த பராக்ரம சாலியே, ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10) ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி, லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11) உனது பெருமையை ராமன் புகழ்ந்தான், பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)
ஆயிரம் தலைக் கொண்ட சேஷனும் புகழ்ந்தான், அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான்(13) மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.
நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)
எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ..(15) சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)
ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி
இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும் உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17) கதிரவனை கண்ட கவி வேந்தனே கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18) முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய், கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19) உன்னருளால் முடியாதது உண்டோ மலையும் கடுகென மாறிவிடாதோ (20)
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே, ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21) சரண் அடைந்தாலே ஓடியே வருவாய், கண் இமை போல காத்தே அருள்வாய் (22) உனது வல்லமை சொல்லத் தகுமோ, மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23) உன் திருநாமம் ஒன்றே போதும் தீய சக்திகள் பறந்தே போகும். (24)
ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி
ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே.(25) மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,
ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)
அடியவர் நிறைவே கற்பகத் தருவே,
இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும் உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29) ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம் ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30) அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே அன்னை ஜானகி தந்தாள் வரமே (31) ராம பக்தியின் சாரம் நீயே எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)
ராம லக்ஷ்மண..ஜானகி… ஸ்ரீராம தரதனே மாருதி
ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான் பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33) ராம நாமமே வாழ்வில் உறுதுணை அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34) என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35) நினைப்பவர்துயரை நொடியில் தீர்ப்பாய் துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)
ஜெய ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37) "ஹனுமான் சாலீஸா" அனுதினம் பாடிட பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38) சிவபெருமானும் அருள் மழை பொழிவான் இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39) அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)
ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி
- குரு பகவான் பார்க்கும் இடமெல்லாம் விருத்தியாகும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
- குரு பகவான் நவக்கிரகங்களில் ஐந்தாவது இடத்தைப் பெறுகிறார்.
ஓம் அன்ன வாகனனே போற்றி!
ஓம் அங்கிரஸ புத்ரனே போற்றி!
ஓம் அபய கரத்தனே போற்றி!
ஓம் அரசு சமித்தனே போற்றி!
ஓம் அயன் அதிதேவதையனே போற்றி!
ஓம் அலைவாயில் அருள்பவனே போற்றி!
ஓம் அறிவனே போற்றி!
ஓம் அறிவுக்கதிபதியே போற்றி!
ஓம் அறக்காவலே போற்றி!
ஓம் அரவகுலம் காத்தவனே போற்றி!
ஓம் ஆண் கிரகமே போற்றி!
ஓம் ஆணவமழிப்பவனே போற்றி!
ஓம் இந்திரன் பிரத்யதிதேவதையனே போற்றி!
ஓம் இருவாகனனே போற்றி!
ஓம் ஈசனருள் பெற்றவனே போற்றி!
ஓம் ஈரெண்ணாண்டாள்பவனே போற்றி!
ஓம் உதித்தியன் சோதரனே போற்றி!
ஓம் உபகிரக முடையவனே போற்றி!
ஓம் எண்பரித் தேரனே போற்றி!
ஓம் எளியோர்க் காவலே போற்றி!
ஓம் ஐந்தாமவனே போற்றி!
ஓம் ஏடேந்தியவனே போற்றி!
ஓம் கருணை உருவே போற்றி!
ஓம் கற்பகத் தருவே போற்றி!
ஓம் கடலை விரும்பியே போற்றி!
ஓம் கமண்டலதாரியே போற்றி!
ஓம் களங்கமிலானே போற்றி!
ஓம் கசன் தந்தையே போற்றி!
ஓம் கந்தனருள் பெற்றவனே போற்றி!
ஓம் கடகராசி அதிபதியே போற்றி!
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி!
ஓம் காக்கும் சுவையனே போற்றி!
ஓம் கிரகாதீசனே போற்றி!
ஓம் கீர்த்தியருள்வோனே போற்றி!
ஓம் குருவே போற்றி!
ஓம் குருபரனே போற்றி!
ஓம் குணசீலனே போற்றி!
ஓம் குரு பகவானே போற்றி!
ஓம் சதுர பீடனே போற்றி!
ஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றி!
ஓம் சான்றோனே போற்றி!
ஓம் சாந்த மூர்த்தியே போற்றி!
ஓம் சிறுமையழிப்பவனே போற்றி!
ஓம் சின்முத்திரை ஹஸ்தனே போற்றி!
ஓம் கராச்சாரியனே போற்றி!
ஓம் சுப கிரகமே போற்றி!
ஓம் செல்வமளிப்பவனே போற்றி!
ஓம் செந்தூரில் உயர்ந்தவனே போற்றி!
ஓம் தங்கத் தேரனே போற்றி!
ஓம் தனுர்ராசி அதிபதியே போற்றி!
ஓம் தாரை மணாளனே போற்றி!
ஓம் திரிலோகேசனே போற்றி!
ஓம் திட்டைத் தேவனே போற்றி!
ஓம் தீதழிப்பவனே போற்றி!
ஓம் தூயவனே போற்றி!
ஓம் துயர் துடைப்பவனே போற்றி!
ஓம் தெளிவிப்பவனே போற்றி!
ஓம் தேவ குருவே போற்றி!
ஓம் தேவரமைச்சனே போற்றி!
ஓம் தேவர்குலக் காவலனே போற்றி!
ஓம் நற்குணனே போற்றி!
ஓம் நல்லாசானே போற்றி!
ஓம் நற்குரலோனே போற்றி!
ஓம் நல்வாக்கருள்பவனே போற்றி!
ஓம் நலமேயருள்பவனே போற்றி!
ஓம் நாற்சக்கரத் தேரனே போற்றி!
ஓம் நாற்கோணப் பீடனே போற்றி!
ஓம் நாற்கரனே போற்றி!
ஓம் நீதிகாரகனே போற்றி!
ஓம் நீதி நூல் தந்தவனே போற்றி!
ஓம் நேசனே போற்றி!
ஓம் நெடியோனே போற்றி!
ஓம் பரத்வாஜன் தந்தையே போற்றி!
ஓம் `பாடி'யில் அருள்பவனே போற்றி!
ஓம் பிரஹஸ்பதியே போற்றி!
ஓம் பிரமன் பெயரனே போற்றி!
ஓம் பீதாம்பரனே போற்றி!
ஓம் புத்ர காரகனே போற்றி!
ஓம் புணர்வசு நாதனே போற்றி!
ஓம் புஷ்பராகம் விரும்பியே போற்றி!
ஓம் பூரட்டாதிபதியே போற்றி!
ஓம் பொற்பிரியனே போற்றி!
ஓம் பொற்குடையனே போற்றி!
ஓம் பொன்னாடையனே போற்றி!
ஓம் பொன்மலர்ப் பிரியனே போற்றி!
ஓம் பொன்னிற த்வஜனே போற்றி!
ஓம் மணம் அருள்பவனே போற்றி!
ஓம் மகவளிப்பவனே போற்றி!
ஓம் மஞ்சள் வண்ணனே போற்றி!
ஓம் `மமதை' மணாளனே போற்றி!
ஓம் முல்லைப் பிரியனே போற்றி!
ஓம் மீனராசி அதிபதியே போற்றி!
ஓம் யானை வாகனனே போற்றி!
ஓம் யோகசித்தி சோதரனே போற்றி!
ஓம் ரவிக்கு உற்றவனே போற்றி!
ஓம் ருத்ராட்சதாரியே போற்றி!
ஓம் வடதிசையனே போற்றி!
ஓம் வடநோக்கனே போற்றி!
ஓம் வள்ளலே போற்றி!
ஓம் வல்லவனே போற்றி!
ஓம் வச்சிராயுதனே போற்றி!
ஓம் வாகீசனே போற்றி!
ஓம் விசாக நாதனே போற்றி!
ஓம் வேதியனே போற்றி!
ஓம் வேகச் சுழலோனே போற்றி!
ஓம் வேண்டுவன ஈவோனே போற்றி!
ஓம் `ஹ்ரீம்' பீஜ மந்திரனே போற்றி!
ஓம் வியாழனே போற்றி!
- ஐயப்பனை தர்ம சாஸ்தா என்று நம்முடைய புராணங்கள் கொண்டாடுகின்றன.
- இந்த மந்திரத்தைத் தினமும் 11 முறை சொல்லி வழிபாடு நடத்த வேண்டும்.
ஐயப்பனை வணங்கி காயத்ரி மந்திரத்தைத் தினமும் 11 முறை சொல்லி வந்தால் மன வலிமை அதிகரிக்கும். மனதிலிருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். ஐயப்ப மலைக்கு மாலை போட்டவர்கள் மட்டுமல்ல, எல்லோருமே இந்த மந்திரத்தை சொல்லலாம். தினமும் சொல்ல முடியாவிட்டாலும் புதன் கிழமைகளில் காலையும் மாலையும் இந்த மந்திரத்தைச் சொல்லி ஜெபிக்க வேண்டும். அப்படி செய்தால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம்முடன் துணையாக இருந்து நம்மை ஐயப்பன் காத்தருளுவார்.
தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்:
ஓம் பூதாதி பாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தைத் தினமும் 11 முறை சொல்லி வழிபாடு நடத்த வேண்டும்.
சபரிமலை நாதனை, சபரிகிரி வாசனை, ஐயன் ஐயப்ப சுவாமியை அவரின் மகா மந்திரத்தை ஜெபித்து வழிபட்டு வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். ஐயப்பன் அருளையும் ஆசியையும் வளத்தையும் அள்ளித் தருவார்.
மகா மந்திரம்:
பூதநாத ஸதானந்தா
சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
- இறைவனின் சிவதாண்டவத்தைக் கண்டு பிரமித்த ராவணன் சிவதாண்டவ ஸ்லோகத்தை இயற்றியுள்ளான்.
- சிவபெருமான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தன் திரு நடனத்தை ஆடிக் காண்பித்தார்.
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தான் சிவபெருமான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தன் திரு நடனத்தை ஆடிக் காண்பித்தார். எல்லையற்ற விண்வெளியைக் குறிக்கும் சிதம்பரத்தில் இந்நாள் பெரும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநடனம் உலகின் இயக்கத்தைச் சுட்டிக் காட்டும் அற்புத நடனம்.
இறைவனின் சிவதாண்டவத்தைக் கண்டு பிரமித்துப் போன சிவபக்தனான ராவணன் சிவதாண்டவ ஸ்லோகத்தை இயற்றியுள்ளான். இதைக் கேட்போர் எல்லையற்ற ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் மந்திரச் சொற்களினால் வரும் ஆனந்தத்தையும் அடைவர். ராவணனின் கூற்றுப்படி இதைக் கேட்போர் சிறந்த சிவபக்தியைப் பெற்று சிவனின் அருளும் பெற்று வாழ்வர்
இத்தகைய பெருமை கொண்ட ஆதிரை நாளை அப்பர் எப்படிப் பாடி விளக்குகிறார் என்று பாருங்கள்....
பாடல் எண் : 1
முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே
வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் எண் : 2
நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் எண் : 3
வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள்விட்டுச் சுடர்மாமணிகள் ஒளிதோன்றச்
சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதியாரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் எண் : 4
குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்
பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார்
வணங்கிநின்று வானவர்வந்து வைகலும்
அணங்கன் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் எண் : 5
நிலவெண்சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரும்இட்ட கல்லவடங்கள் பரந்தெங்கும்
கலவமஞ்ஞை கார்என்று எண்ணிக் களித்துவந்து
அலமர்ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் எண் : 6
விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
தம்மாண்பு இலராய்த் தரியார் தலையால் முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தையென் அப்பன் என்பார்கட்கு
அம்மான்ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் எண் : 7
செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர்கூடி மயங்குவார்
இந்திரனாதி வானவர்சித்தர் எடுத்தேத்தும் அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் எண் : 8
முடிகள் வணங்கி மூவாதார் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வானரமங்கையர் பின்செல்லப்
பொடிகள்பூசிப் பாடும்தொண்டர் புடைசூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் எண் : 9
துன்பநும்மைத் தொழாதநாள்கள் என்பாரும்
இன்பநும்மை ஏத்து நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழையப்பணியே என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
பாடல் எண் : 10
பாரூர்பௌவத் தானைபத்தர் பணிந்தேத்தச்
சீரூர்பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந்து
ஓரூர் ஒழியாது உலகமெங்கும் எடுத்தேத்தும்
ஆரூரன்றன் ஆதிரை நாளால் அது வண்ணம்.
அனைவருக்கும் பொருள் புரியும் வண்ணம் எளிதாக அமைந்துள்ளன இப்பாடல்கள்.
- யோகம் தரும் குருவைப் போற்றிக் கொண்டாடினால், பொன்னான எதிர்காலம் அமையும்.
- குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும்.
பொதுவாக, யோகம் தரும் குருவைப் போற்றிக் கொண்டாடினால், பொன்னான எதிர்காலம் அமையும். குருவை நாம் கோவிலுக்குச் சென்று வழிபடும் பொழுது, அதன் பார்வை நம்மீது பதியும் விதத்தில் நேராய் நின்று வழிபட வேண்டும்.
சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும்.
"வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!
காணா இன்பம் காண வைப்பவனே!
பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!
உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!
சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!
கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!
தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!
நிலையாய் தந்திட நேரினில் வருக!
"நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!
இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!
உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!
செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!
வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!
என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்.".
- இந்த அற்புத மந்திரத்தை எந்த நாளிலும் துதித்து வழிபடலாம்.
- இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் வாழ்வில் மன அமைதி கிடைக்கும்.
மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களில் முக்கியமானது இந்த விநாயகர் பீஜ மந்திரம். இந்த அற்புத மந்திரத்தை எந்த நாளிலும் துதித்து வழிபடலாம். இதனால் நம் வறுமை நீங்கி செல்வ பலம் அதிகரிக்கும்.
ஆவ்ம் ஸுமுகாய நமஹ
மிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் பீஜ மந்திரத்தை வாரத்தின் எந்த நாளும் உச்சரிக்கலாம் என்றாலும், ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி தினத்தண்டு மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வீட்டில் இருக்கும் பிள்ளையார் படத்திற்கு பூக்கள் சூடி, தீப, தூபம் காட்டி, லட்டு, கொழுக்கட்டை போன்ற இனிப்பு பதார்த்தங்களை நிவேதனம் செய்து, விநாயகருக்குரிய பீஜ மந்திரத்தை 108 அல்லது 1008 முறை உச்சரித்து வழிபட வேண்டும்.
இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் வாழ்வில் மன அமைதி கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். கணவன் மனைவிக்கிடையேயான ஒற்றுமை ஓங்கும். கண் திருஷ்டி நீங்கும். நோய்கள் அகலும். செல்வம் அதிகளவில் சேர துவங்கும்.
- இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து சொல்லி வரவேண்டும்.
- உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும்.
ஓம் வெங்கட நாதாய வித்மஹே
ஸச் சித்தானந்தாய தீமஹி
தந்நோ ராகவேந்திரா ப்ரசோதயாத்
ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம்.
காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ராகவேந்திரர் ஸ்வாமியின் படமிருந்தால் அதற்கு முன்பு மஞ்சள் நிற பூக்களை வைத்து, தூபங்கள் கொளுத்தி, வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர நீங்கள் விரும்பியவற்றை நிறைவேற்றுவார் ஸ்ரீ ராகவேந்திரர்.
இம்மந்திரத்தை உண்மையான பக்தியுடன் உரு ஜெபித்து அவரை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும். இவர்களை நாம் எல்லோரும் தூய்மையான இதயத்துடன் சரணடையும் போது நமக்கு எல்லா வகையிலும் உதவுகின்றனர்.
- கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்தத்தில் உச்சரிப்பது மிகவும் நல்லது
- இந்த ஸ்லோகத்தை 27 தடவை வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்க வேண்டும்.
விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார். 'வி' என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.
விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.
கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
ராசிஸ் தாரா திதிர் யோக : வார :காரண அம்சக
லக்னோ ஹோரா காலசக்ரோ மேரு :சப்தர்ஷயோ த்ருவ:||
ராஹூர் மந்த:கவிர் ஜீவ :புதோ பௌம சசீ ரவிஹி
கால: ஸ்ருஷ்டி :ஸ்திதிர் விஸ்வ:ஸ்தாவரோ ஜங்கமோ ஜகத்||
- இந்த ஸ்லோகத்தை 27 தடவை வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர கிரகதோஷம் நீங்கும்.
- மாலையில் 6 மணிக்கு பிறகு 8 மணிக்குள் இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
- சிவராத்திரியான இன்று சிவனை நினைத்து மனதார உச்சரிக்க வேண்டிய மந்திரம் உங்களுக்காக இதோ.
சிவராத்திரியான இன்று சிவனை மனதார நினைத்து வழிபடும்போது அந்த ஈசனின் அருளைப் நம்மால் முழுமையாக பெற முடியும்.
விரத நாட்களில் என்ன வழிமுறைகளை நீங்கள் கடைபிடித்தீர்களா, அதேபோல் இந்த சிவராத்திரி அன்றும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு, உங்களால் என்ன நைவேத்தியம் செய்து, இறைவனுக்கு படைக்க முடியுமோ அதை படையல் இட்டு, பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றிவைத்து, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
மாதம்தோறும் வரும் சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் சித்திரை மாத சிவராத்திரி அன்று சிவபெருமானை மனதார வழிபடும்போது நோய் நொடியற்ற வாழ்க்கையையும், சுபிட்சமான வாழ்க்கையையும் பெற முடியும் என்று சொல்கிறது சாஸ்திரம். சிவராத்திரியான இன்று சிவனை நினைத்து மனதார உச்சரிக்க வேண்டிய மந்திரம் உங்களுக்காக இதோ.
'ஓம் சிவசிவ சங்கரா போற்றி!'
இந்த மந்திரத்தை உச்சரிப்பதில் எந்த ஒரு கஷ்டமும் இல்லை. காலையில் 108 முறை உச்சரிக்க வேண்டும். மாலையில் 6 மணிக்கு பிறகு 8 மணிக்குள் இந்த மந்திரத்தை மீண்டும் ஒரு முறை 108 முறை உச்சரித்து உங்களது சிவராத்திரி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
அந்த ஈசனின் அருளை முழுமையாகப் பெறுவதற்கு சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள சுலபமான மந்திரம் இது. நம்பிக்கையோடு உச்சரித்துப் பாருங்கள். வளமான வாழ்க்கையை பெறுங்கள்.
- தெரிந்த, தெரியாத எதிரிகளின் சதியில் இருந்து நம்மை காத்து ரட்சிக்கும் சக்தி அன்னை ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரியிடம் உள்ளது.
- இந்த மந்திரத்தை ஜபிக்க துவங்கும் முன்பு பிள்ளையாரை வணங்கிவிட்டு ஜெபிக்கவும்.
ஹரிஓம் பஹவதி
ஆதிபகவதி அனாதரட்சகி,
அகிலத்தையாண்ட ப்ரமாண்ட நாயகியே,
ஆனந்த தாண்டவி ரேணுகா பரமேஸ்வரி தாயே,
ஆதிமுதல்வியே ஹரியையும் அயனையும்
படைத்த அமுதவல்லித்தாயே,
அண்டசராசரம் யாவும் துதிக்கும்
ரேணுகா பரமேஸ்வரித்தாயே,
பண்ணிருகரனையும் பாசாங்குசதாசனையும்,
ஈன்ற ரேணுகா பரமேஸ்வரித்தாயே,
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் ரிவ்வும் மவ்வும்,
ஓங்காரி றீங்காரி, வாவா வாவா,
வந்தருள் புரிகுவாய் ஸ்வாஹ.
ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க ஆரமித்து பின் ஒரு மண்டல காலம் வரை இதை தினமும் ஜபிப்பது நல்லது. இந்த மந்திரத்தை ஜபிக்க துவங்கும் முன்பு பிள்ளையாரை வணங்கிவிட்டு ஜெபிக்கவும்.
- ஜோதிடத்தில் குரு பகவானை புத்திகாரகன் என்று சொல்வார்கள்.
- வியாழக்கிழமைகளில் இந்த குரு ஸ்லோகத்தை சொல்லி வந்தால் குருவின் அருள் கிடைக்கும்.
குரு சுலோகம்
குணமிகு வியாழ குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரக தோஷமின்றி காத்தருள்வாயே
குரு காயத்ரி மந்திரம்
ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.
- ஸ்ரீசாய் பாபாவின் 11 நாமாவளிகள் புகழ் பெற்றவை.
- தினமும் இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல உங்களுக்குள்ளும் மாற்றம் வருவது நிச்சயம்.
சமீப காலமாக சாய்பாபாவின் திருநாமத்தை மேம்படுத்தும் வகையில் எத்தனையோ மகத்தான மந்திரங்கள் வந்து விட்டன. நாடு முழுவதும் எண்ணற்றவர்கள் பாபா 108 போற்றி எழுதி புழக்கத்தில் விட்டுள்ளனர். அவை எல்லாமே பாபா பக்தர்களிடம் மிக சிறந்த மந்திரங்களாக பரவி உள்ளன.
அதுபோல ஸ்ரீசாய் பாபாவின் 11 நாமாவளிகள் புகழ் பெற்றவை.
1. ஓம் சமார்த்த சத்குரு ஸ்ரீ சாயிநாதாய நமஹ
2.ஓம் குருதேவ தத்தாத்ரேயாய சாயிநாதாய நமஹ
3. ஓம் விஷ்வப் பிரணாய சாயிநாதாய நமஹ
4. ஓம் விக்னநிவாராகாய சாயிநாதாய நமஹ
5. ஓம் ரோக நிவாராகாய சாயிநாதாய நமஹ
6. ஓம் மஹாபய நிவாராகாய சாயிநாதாய நமஹ
7. ஓம் சாபவிமோச்சகாய சாயிநாதாய நமஹ
8. ஓம் அபயப் பிரதாய சாயிநாதாய நமஹ
9. ஓம் சகல தேவத ஸ்வரூபாய சாயிநாதாய நமஹ
10. ஓம் சாரங்கதா வாத்சலாய சாயிநாதாய நமஹ
11. ஓம் ஆயுள் ஆரோக்ய ஐசுவரிய பிரதாய சாயிநாதாய நமஹ
இப்படி பல்வேறு மந்திரங்கள் இருந்தாலும் பாபாவின் மூல மந்திரமான ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் என்ற மந்திரம் நிகரற்ற மந்திரமாக உலகம் முழுக்க கோடிக்கணக்கான பக்தர்களின் மனதுக்குள் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. தினமும் பாபா படம் முன்பு அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல உங்களுக்குள்ளும் மாற்றம் வருவது நிச்சயம்.