search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நந்தி"

    • மேலும் தினசரி 9 முறை 12 நாட்களுக்கு தொடர்ந்து படிக்க எதிரிகள் அஞ்சுவார்கள்.
    • ஆணவங்களை அழிக்கும் பைரவர் உங்களுக்கு எதிராக ஏற்படும் இன்னல்களை நீக்குவார்.

    ஞாயிற்றுக்கிழமை ராகுகால வழிபாட்டு நேரத்தில் நெய் தீபம் முப்பது வாரங்கள் ஏற்றி வர திருமணம் முடிவுக்கு வரும்.

    ஏவல் பில்லி சூனியம் போன்ற

    துஷ்ட காரியங்களின் தாக்கம் குறைய வேண்டுமா?

    பைரவர் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் ஆலயங்கள் சென்று முறையாக அங்கு நடைபெறும் வழிபாடுகளை கடை பிடிப்பதால் இதுபோன்ற கஷ்டங்கள் விலகும். சிறப்பான பைரவர் தலங்களை இணைப்பில் காணவும்.

    சத்துரு உபாதைகள் நீங்கவும் வழக்குகளில்

    வெற்றி பெறவும் வேண்டுமா?

    பைரவருக்கு இரவு நேர பூஜையும் செவ்வாய், வெள்ளி நாட்களில் யாகமும் சிறந்த பலனைக் கொடுக்கும்.

    முழு மனதுடன் ஈடுபடும் பைரவர் பூஜை சத்ருக்களின் தொல்லை களை நீக்கிவிடும். தேன், உளுந்து வடை நிவேதனம் செய்ய வேண்டும்.

    ஆபத்துக்கள் விலக என்ன செய்யலாம்?

    கால பைரவ அஷ்டகத்தை தொடர்ந்து படிப்பதாலும், சிகப்பு அரளி மலரால் அர்ச்சிப்பதாலும், ஏற்பட இருக்கும் ஆபத்துகள் நிகழாமல் தடுக்கப்படும்.

    மேலும் தினசரி 9 முறை 12 நாட்களுக்கு தொடர்ந்து படிக்க எதிரிகள் அஞ்சுவார்கள்.

    ஆணவங்களை அழிக்கும் பைரவர் உங்களுக்கு எதிராக ஏற்படும் இன்னல்களை நீக்குவார்.

    12 நாள் முடிவில் முடிந்தால் ஒன்பது நபர்களுக்கு அன்னதானம் செய்யவும்.

    சனிக்கிழமைகளில் 6 எண்ணை தீபம் தொடர்ந்து 6 வாரங்கள் ஏற்றி சனீஸ்வரரை வணங்குவதால் எதிர்ப்புகள் நீங்கும்.

    • நெய் தீபம் தொடர்ந்து முப்பது தினங்கள் ஏற்றி வர முன்னேற்றம் காணும்.
    • ஏழு செவ்வாய் அல்லது ஏழு வெள்ளிக்கிழமைகளில் சிகப்பு மலரால் அர்ச்சித்து வர காரியம் கைகூடும்.

    தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி செல்வரளி கொண்டு அர்ச்சனை செய்து ஏழை குழந்தைகளுக்கு ஆடை தானம் செய்ய பலன் கிட்டும்.

    உத்தியோக உயர்வு, வியாபார உயர்வு கிடைக்க வேண்டுமா?

    வளர்பிறை அஷ்டமி தினத்தில் சுவர்ண ஆகார்ஷன மந்திரமும் தியான மந்திரமும் சொல்லி 108 காசுகளால் அர்ச்சித்த பின்னர் அந்த காசுகளை பணப்பெட்டியில் அல்லது அலுவலக அறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    நெய் தீபம் தொடர்ந்து முப்பது தினங்கள் ஏற்றி வர முன்னேற்றம் காணும்.

    இழந்துவிடும் நிலையில் உள்ள சொத்து மீண்டும் வரவேண்டுமா?

    மிளகு சிறிதளவு எடுத்து மூட்டையாக வெள்ளைத் துணியில் கட்டி நல்லெண்ணை தீபம் ஏற்றி துரோகம் செய்பவரை எண்ணி பொருள்கிட்ட வேண்டிக் கொள்வதுடன் இரண்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

    ஏழு செவ்வாய் அல்லது ஏழு வெள்ளிக்கிழமைகளில் சிகப்பு மலரால் அர்ச்சித்து வர காரியம் கைகூடும்.

    • தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு ஏற்ற நாள்.
    • அந்த நாளில் விரதம் இருந்து இரவு நேரத்தில் அர்ச்சனைகள் செய்து விருப்பத்தை வேண்ட பலன் கிட்டும்.

    வறுமை நீங்க வேண்டுமா?

    பிரதி வெள்ளிக்கிழமைகளில் வாசனை மலர்களால் தொடர்ந்து எட்டு வாரங்கள் அர்ச்சனை செய்துவர வறுமை நீங்கும் வாய்ப்பு கூடும்.

    இல்லத்தில் பூஜை செய்பவரானால் வெல்லம் பருப்பு சேர்த்த பாயசம், உளுந்து வடை செய்து நிவேதிக்கலாம்.

    விருப்பங்கள் நிறைவேற வேண்டுமா?

    தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு ஏற்ற நாள். அந்த நாளில் விரதம் இருந்து இரவு நேரத்தில் அர்ச்சனைகள் செய்து விருப்பத்தை வேண்ட பலன் கிட்டும்.

    ஒரு அஷ்டமி பூஜை மட்டும் உன்னதத்தை கொடுக்காது என்பதை அறியவும்.

    பூர்வ ஜென்ம வினைப்பயன் குறைய வேண்டுமா?

    செவ்வாய்க்கிழமை வரும் அஷ்டமி நாளில் விரதம் அனுஷ்டித்து மாலை நேரத்தில் பூஜைகள் செய்து வடை மாலை சாற்றி வழிபட வேண்டும்.

    மறுநாள் காலை உணவு உட்கொண்டு விரதம் முடிக்க வேண்டும். நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுதல் கூடுதல் சுபம் கொடுக்கும்.

    கோள்களின் தாக்கம் குறைய வேண்டுமா?

    தயிர் அன்னம் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். தொடர்ந்து அஷ்டமி நாளில் இதை கடைப்பிடிக்க வேண்டும்.

    • எங்கிருந்தோ வற்றாத இந்த நீரோட்டம் இடபத்தின் வாயிலிருந்து வெளிப்படுகிறது.
    • புனிதம் மிகுந்த இந்த நீரை இறைவனின் திருமஞ்சனத்திற்கும், மக்களின் தாக சாந்திக்கும், புனித நீராடவுமே பயன்படுத்த வேண்டும்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எக்காலத்திலும் குறைவின்றி நீரை வாயிலிருந்து உமிழ்ந்து கொண்டிருக்கும் இந்த ரிஷப உருவத்தின் அருகே குளத்திற்கென ஒரு கைப்பிடிச் சுவரினை உருவாக்கியவர்கள் கல்வெட்டோடு கூடிய இடபத்தின் பெரும்பகுதியை சுவரினுள் மறையுமாறு செய்துவிட்டனர்.

    நூறாண்டுகளுக்குள் நடந்த இத்திருப்பணிகள் காரணமாக அரிய தகவலைத் தரும் தமிழ்க் கல்வெட்டு மறைக்கப்பட்டுள்ளது.

    ஆயினும் நற்பேறாக இந்திய தொல்லியல் துறையினர் 1904 ம் ஆண்டில் அதனைப் படி எடுத்துக் காப்பாற்றிவிட்டனர்.

    இந்த இடபத்தின் வாயில் திகழும் குழல்போன்ற பகுதிக்கு எங்கிருந்து நீர் வருகிறது என்பது யாருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது.

    எங்கிருந்தோ வற்றாத இந்த நீரோட்டம் இடபத்தின் வாயிலிருந்து வெளிப்படுகிறது.

    புனிதம் மிகுந்த இந்த நீரை இறைவனின் திருமஞ்சனத்திற்கும், மக்களின் தாக சாந்திக்கும், புனித நீராடவுமே பயன்படுத்த வேண்டும்.

    சில அன்பர்கள், கை, கால்கள் கழுவுவதற்காக பயன்படுத்துவது மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது.

    தற்போது ஆந்திர மாநிலத்தில் இந்த அற்புதப் படைப்பு திகழ்ந்தாலும் ஒரு தமிழ்ச் சிற்பியின் அறிவியல் திறனோடு கூடிய அரிய சாதனை இது என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை, ஆனால் அதுதான் உண்மை!

    திருக்காரிக்கரையுடைய மகாதேவர் கோவில், திருவாலீசுரம் என முதன் முதலில் குறிக்கப் பெறுவது வீரகம்பண உடையாரின் கி.பி. 1365ம் ஆண்டு சாசனத்தில்தான்.

    அதே சாசனம் இத்தலத்து காலபைரவரை வைரவ நாயனார் என்று குறிப்பிடுகின்றது.

    பெரும்பாலான சாசனங்கள் திருவிளக்குகள் எரிப்பதற்காக அளிக்கப்பெற்ற கால்நடைப் பண்ணைகள் மற்றும் நிலதானங்கள் பற்றி குறிப்பிடுகின்றன.

    ஒரு சாசனத்தில் குலோத்துங்க சோழனின் ராஜகுருவான சுவாமி தேவர் பெயரில் திருக்காளத்தி தேவ சதுர்வேதி மங்கலத்தில் காணிவிட்ட செய்தி குறிக்கப் பெற்றுள்ளது.

    • நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர், எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை யாரும் கண்டறியாத ஒன்றாக இருக்கிறது.
    • ஒரு குளத்தைச் சுற்றிய நிலையில் இந்த ஆலயம் முழுமை அடைந்து விடும்.

    இந்தியாவில் பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளதோடு, வியக்க வைக்கும் பல கட்டிடக் கலை கொண்ட கோயில்கள் ஏராளம். அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள ஒரு நந்தி கோயிலில், நந்தியின் வாயிலிருந்து தொடர்ச்சியாக நீர் வடியும் அதிசயம் நிகழ்ந்து வருகின்றது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ளது. ஸ்ரீ தக்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயில்.

    இந்த கோயிலின் சிறப்பே அங்கு அமைந்துள்ள நந்தியின் வாயில் இருந்து எப்போதும் நீர் ஊற்றாக ஊறி கொட்டிக் கொண்டிருப்பது தான். அதே போல் எல்லா சிவாலயங்களிலும், நந்தி சிவபெருமானுக்கு எதிராக தான் அமைக்கப்பட்டிருப்பார். ஆனால் இந்த ஸ்ரீ தக்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயிலில், நந்தி பெருமானோ சிவ லிங்கத்திற்கு மேல் உள்ள தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


    அதோடு அந்த நந்தியிலிருந்து வடியும் தீர்த்தம், சிவ லிங்கத்தின் தலையில் விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிவனை அபிஷேகம் செய்வது போன்று அந்த தீர்த்தம் விழுந்து பின்னர் அந்த நீர், அங்குள்ள தெப்பக்குளத்தில் சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நதியின் வாயில் எப்படி நீர் ஊறுகின்றது என்பது இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. சேற்றில் புதைந்து கிடந்துள்ளது. அதனை, சில தன்னார்வலர்கள் 1997ம் ஆண்டு கண்டுபிடித்து கோயிலை மீட்டெடுத்துள்ளனர்.


    இந்த கோயில் அமைந்துள்ள இடம் அப்பகுதியிலேயே மிக தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால், அங்கிருந்து வரும் நீரூற்று, நந்தி வாயின் வழியே வெளியேறும் வண்ணம் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த நீர் கீழே உள்ள லிங்கத்தின் மீது விழுந்து, பின்னர் குளத்தில் கலப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிசயம் நிகழ்வாதாக கூறுகின்றனர்.

    நந்தி தீர்த்தம் விழும் சிவலிங்கத்திற்கு என்று தனி சன்னதியோடு, இந்த கோயிலில் விநாயகருக்கு என்று தனி சன்னதியும், நவகிரகத்திற்கு என்று சன்னதிகள் உண்டு.

    • சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.
    • நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர்.

    பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

    பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் "அனைவரும்" என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம்.

    எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.


    அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.

    நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

    மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.


    எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.

    எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.

    • கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கங்களைத் தவிர, சூரிய லிங்கம், சந்திர லிங்கம் உண்டு.
    • கோவிலை சுற்றி ஏராளமான சிறிய, பெரிய கோவில்களும் உண்டு.

    கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கங்களைத் தவிர, சூரிய லிங்கம், சந்திர லிங்கம் உண்டு.

    இன்னும் ஏராளமான சிறிய, பெரிய கோவில்களும் உண்டு. அவை வருமாறு:

    1. உண்ணாமுலை அம்மன் கோவில்

    2. காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் கோவில்

    3. திருமஞ்சன கோபுரம் (தெற்கு கோபுரம்)

    4. குமரபெருமான் கோவில் (அருணகிரிநாதரால் பாடப்பட்டது)

    5. காளியம்மன் கோவில்

    6. வனதுர்கை அம்மன் ஆலயம்

    7. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம்

    8. திரவுபதி அம்மன் ஆலயம்

    9. ஆறுமுக சுவாமி ஆலயம்

    10. பராசக்தி ஆலயம் (பிருங்கி மகரிஷிக்குக் காட்சி தந்த இடம்)

    11. மகா நந்தி கோவில்

    12. ஐஸ்வரேஸ்வரர் கோவில்

    13. துர்வாச மகரிஷி கோவில்

    14. புற்று படவேட்டு அம்மன் ஆலயம்

    15. மகாசக்தி மாரியம்மன் கோவில்

    16. திருநேர் அண்ணாமலை, உண்ணாமுலை திருக்கோவில்கள்

    17. வீர ஆஞ்சனேயர் திருக்கோவில்

    18. ராகவேந்திரர் பிருந்தாவனம்

    19. பழனி ஆண்டவர் திருக்கோவில்

    20. ராஜராஜேஸ்வரி திருக்கோவில்

    21. வேடியப்பன் ஆலயம்

    22. கவுதம மகரிஷி திருக்கோவில்

    23. ஆதி அண்ணாமலையார் திருக்கோவில்

    24. மாணிக்க வாசகர் திருக்கோவில் (திருவெம்பாவை அருளிச் செய்த திருத்தலம்)

    25. மூகாம்பிகை அம்மன் ஆலயம்

    26. குபேர விநாயகர் திருக்கோவில்

    27. இடுக்குப் பிள்ளையார் கோவில்

    28. முத்துமாரியம்மன் ஆலயம்

    29. அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்காதேவி திருக்கோவில்

    30. அம்மணி அம்மாள் திருக்கோவில்

    31. கெங்கையம்மன் திருக்கோவில்

    32. வடவீதி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

    33. துர்கை அம்மன் திருக்கோவில்

    34. பெரிய ஆஞ்சனேயர் ஆலயம்

    35. பூதநாராயணப் பெருமாள் ஆலயம்

    36. வீரபத்ரசுவாமி திருக்கோவில்

    37. இரட்டைப் பிள்ளையார் கோவில்.


    • மறுநாள் சபை கூடியது. அருணகிரிநாதர் பதிகங்கள் பாடினார்.
    • தமிழ்நாட்டில் வேறு எங்கும் விநாயகருக்கு இப்படி செந்தூரம் பூசப்படுவதில்லை.

    பொதுவாக, ஆஞ்சநேயருக்குத்தான் செந்தூரம் பூசுவார்கள்.

    ஆனால் திருவண்ணாமலை கோவிலில் விநாயகருக்கு செந்தூரம் பூசி வழிபடுகிறார்கள்.

    இதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்வு உள்ளது.

    திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் சுவாமிகள் வசித்து வந்த காலத்தில் சம்மந்தாண்டன் என்பவனும் வசித்து வந்தான்.

    இவன் காளி உபாசகராகத் திகழ்ந்தான். காளி அவனிடம் பணியாள் போல கட்டுப்பட்டுக் கிடந்தாள்.

    இதனால் அவன் செருக்குடன், யாரையும் மதிக்காமல் இருந்தான்.

    அருணகிரிநாதர் சுவாமிகள் மக்கள் மத்தியில் புகழ் பெற்று வந்ததால் அவர் மீது அவனுக்கு கடும் ஆத்திரமும் பொறாமையும் ஏற்பட்டது.

    இதனால், ராஜாவிடம் சென்று அருணகிரி பற்றி புகார் கூறினான்.

    அருணகிரி ஏமாற்று பேர் வழி. அவரால் முருகனை வரவழைக்க முடியுமா? என்னால் காளியை வரவழைக்க முடியும்'' என்று சவால் விட்டான்.

    அருணகிரியும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார்.

    மறுநாள் சபை கூடியது. அருணகிரிநாதர் பதிகங்கள் பாடினார்.

    ஆனால் முருகன் காட்சிக் கொடுக்கவில்லை.

    ஏன் என்று அவர் யோசித்த போது காளி தன் மகன் முருகனைப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதை ஞானத்திருஷ்டியால் அறிந்தார்.

    உடனே அருணகிரிநாதர், காளி மீது 4 பதிகங்களைப் பாடினார்.

    அதில் காளி மயங்கினாள். அவள் பிடி தளர்ந்தது.

    அவளிடம் இருந்து விடுபட்ட முருகப்பெருமான் கம்பத்தை உடைத்துக் கொண்டு வந்து காட்சி கொடுத்தார்.

    அதன்பிறகும் சம்மந்தாண்டான் அட்டூழியம் குறையவில்லை.

    இதையடுத்து விநாயகர் ஆவேசம் கொண்டு அவனை அழித்தார்.

    அப்போது சம்மந்தாண்டன் உடலில் இருந்து சிதறிய ரத்த துளிகளில் இருந்து அசுரர்கள் தோன்றினார்கள்.

    இதை தடுத்து நிறுத்த சம்மந்தாண்டனின் ரத்தம் முழுவதையும் அள்ளி விநாயகர் தன் உடலில் பூசிக் கொண்டார்.

    இதை பக்தர்களுக்கு உணர்த்தவே திருவண்ணாமலை தலத்தில் விநாயகருக்கு செந்தூரம் பூசப்படுகிறது.

    சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும்.

    தமிழ்நாட்டில் வேறு எங்கும் விநாயகருக்கு இப்படி செந்தூரம் பூசப்படுவதில்லை.

    • திருவண்ணாமலை கோவிலின் மொத்த பரப்பளவு 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுரடி.
    • ஒரு காலத்தில் வெண்கலத்தால் ஆன கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது.

    1. திருவண்ணாமலை கோவிலின் மொத்த பரப்பளவு 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுரடி.

    2. திருவண்ணாமலையில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கிரிவலம் செல்வதே மிகச்சிறப்பான கிரிவலமாகும்.

    3. திருவண்ணாமலை ஆலய சுற்றுச்சுவர் 30 அடி உயரம் கொண்டது.

    4. தல விருட்சமான மகிழ மரத்தின் அருகில் நின்று பார்த்தால் ஆலயத்தின் 9 கோபுரங்களையும் ஒரே சமயத்தில் பார்க்க முடியும்.

    5. மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சிறு மண்டபம் அருகில் அமர்ந்து தியானம் செய்தால் எவ்வளவு பதற்றமான மனமும் அமைதி பெறும்.

    6. அண்ணாமலையாருக்கு திருப்பணி செய்தவர்களில் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் முதன்மையானவராக கருதப்படுகிறார்.

    7. அண்ணாமலையார் ஜோதியாக இருந்ததை முழுமையாக உணர்ந்து திருமூலர் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.

    8. திருவண்ணாமலை ஆலய கருவறை வாசல் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சுமார் 10 அடி உயரத்துடன் உள்ளனர்.

    9. திருவண்ணாமலை பள்ளியறை சுவாமி, மேரு சக்கரம் என்றழைக்கப்படுகிறார்.

    10. இத்தலத்து அர்த்தநாரீஸ்வரர் ஆண்டுக்கு ஒரு தடவை வெளியில் வருவதுபோல 63 நாயன்மார்களும் ஆண்டுக்கு ஒரு தடவை வீதியுலா வருகிறார்கள்.

    11. திருக்கார்த்திகை தினத்தன்று மலைவாழ் மக்கள் திணை மாவில் விளக்கேற்றி அண்ணாமலையாரை வழிபடுகிறார்கள்.

    12. உலகின் மிகப்பழமையான விழாவாக திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா கருதப்படுகிறது.

    13. மலைமேல் தீபம் ஏற்றக்கூடிய பாக்கியம் பெற்றவர்கள் பர்வத ராஜ குலத்தவர்கள் ஆவார்கள்.

    இவர்களை நாட்டார்கள், செம்படவர்கள் என்றும் அழைக்கின்றனர்.

    14. ஒரு காலத்தில் வெண்கலத்தால் ஆன கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது.

    சக ஆண்டு 1668ல் பிரதானி வெங்கடபதி ஐயன் என்பவர், நாலரை பாரம் எடையில்

    இந்த வெண்கலக் கொப்பரையை செய்து கொடுத்தார்.

    பின்பு தீபம் ஏற்ற இரும்புக் கொப்பரையே பயன்படுத்தப்பட்டது.

    இதன் விட்டம் 96 செ.மீ. கிட்டத்தட்ட மூன்றடி. உயரம் 145 செ.மீ.

    அடிபாகத்தின் சுற்றளவு 221 செ.மீ. விரிந்த மேற்பரப்பின் சுற்றளவு 280 செ.மீட்டர் ஆகும்.

    பிறகு 1991ம் ஆண்டு இக்கொப்பரை மாற்றப்பட்டு புதிய கொப்பரை வைக்கப்பட்டது.

    தற்போது 92 கிலோ செப்பு 110 கிலோ இரும்புச் சட்டங்களைக் கொண்டு புதுக்கொப்பரை உருவாக்கப்பட்டுள்ளது.

    15. திருவண்ணாமலையில் சிவபெருமானே மலைவடிவில் காட்சியளிப்பதால் ஆலயத்தைச் சுற்றி வருவதைவிட

    மலையை சுற்றி வலம் வருவதுதான் மிகச்சிறந்த வழிபாடாக கருதப்படுகிறது.

    16. இறைவனாகிய திரு அண்ணாமலையை ஒருமுறை சுற்றி வந்தால் ஒரு கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது சித்தர்கள் வாக்கு.

    17. திருவண்ணாமலையில் ஒருநாள் உபவாசம் இருந்தால் அது பிற தலங்களில் நூறு நாள் உபவாசம் இருந்ததற்கு சமமாம்.

    18. கிரிவலம் வந்த பின்னர், அண்ணாமலையார் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் கன்னி மூலையில் எழுந்தருளியுள்ள

    துர்வாச முனிவரை வணங்கி பின்னர் அண்ணாமலையாரையும், உண்ணாமுலையம்மாளையும் தரிசித்தல் வேண்டும்.

    19. திருவண்ணாமலை கிரிவலத்தின் தனி சிறப்பு என்னவென்றால், இங்கு வருடத்தின் எல்லா நாட்களிலும்

    பகலோ, இரவோ, அந்தியோ, சந்தியோ, வெயிலோ, மழையோ, எந்த நேரமும் யாராவது ஒருவர் கிரிவலம் வந்தவாறு இருப்பார்கள்.

    20. திருவண்ணாமலையை 'மந்திர மலை' என்றும் கூறுவார்கள்.

    சிவபெருமானின் மந்திர அட்சரங்களான 'நமசிவாய' என்ற எழுத்தினை நினைவுகூறும் முகமாக இம்மலையானது ஒன்று முதல் ஐந்து சிகரங்களை உடையதாக காட்சி தருகின்றது.

    • தீப திருவிழாவின் போது திருவண்ணாமலையில் 10 நாட்கள் விழா நடத்தப்படும்.
    • கிரிவலப் பாதை நெடுக வீதியுலா சென்று அண்ணாமலையார் யாசகம் கேட்பார்.

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீப திருவிழாவின் போது திருவண்ணாமலையில் 10 நாட்கள் விழா நடத்தப்படும்.

    தினமும் காலை, மாலை இரு நேரமும் அண்ணாமலையார் வாகனங்களில் வெவ்வேறு வடிவங்களில் வீதி உலா வருவார்.

    இந்த விழாவின் 8ம் நாளன்று அண்ணாமலையார் பிட்சாடனார் வேடம் ஏற்று யாசகம் கேட்க செல்லும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    கிரிவலப் பாதை நெடுக வீதியுலா சென்று அண்ணாமலையார் யாசகம் கேட்பார்.

    பக்தர்கள் அன்று போட்டி போட்டு அவருக்கு பிச்சையை காணிக்கையாகப் போடுவார்கள்.

    திருவண்ணாமலையில் உள்ள பல கடைக்காரர்கள் 8ந் திருநாளன்று வசூலாகும் மொத்த பணத்தையும்

    அண்ணாமலையார் எடுக்கும் யாசகத்துக்கு கொடுத்து விடுவார்கள்.

    கடவுளே வீதிக்கு வந்து பக்தனிடம் பிச்சை கேட்பது என்பது, தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாதபடி,

    திருவண்ணாமலையில் மட்டுமே நடக்கும் அதிசய நிகழ்வாக உள்ளது.

    அண்ணாமலையார் யாசகம் கேட்பதை யாரால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்?

    எனவே பெண் பக்தர்கள் அண்ணாமலையார் சார்பில் தங்கள் முந்தானையை ஏந்தி ஓடி, ஓடி சென்று பிச்சை எடுத்து வந்து அண்ணாமலையாரிடம் கொடுப்பார்கள்.

    குறிப்பாக நகரத்தார் பெண்கள் அதிக அளவில் திரண்டு வந்து அண்ணாமலையாருக்காக தாங்களே பிச்சை எடுப்பதுண்டு.

    ஆண்டுக்கு ஒரு தடவை நடக்கும் இந்த அதிசயத்தை நீங்கள் பார்க்க வேண்டுமானால் தீப திருவிழாவின் 8ம் நாள் விழா தினத்தன்று சென்றால் பார்க்கலாம்.

    • இந்த பூஜையில் பங்கேற்பது மிகுந்த பலன்களைத் தரக் கூடியதாகும்.
    • ஆனால் உண்ணாமுலை அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்வது இல்லை.

    சிவாலயங்களில் தினமும் இரவு அர்த்தஜாம பூஜை முடிந்ததும் ஈசனையும் அம்பாளையும் பள்ளியறைக்கு அழைத்துச் செல்வார்கள்.

    அங்கு இருவருக்கும் சேர்த்து பள்ளியறை பூஜை நடத்தப்படும்.

    இந்த பூஜையில் பங்கேற்பது மிகுந்த பலன்களைத் தரக் கூடியதாகும்.

    பொதுவாக சிவாலயங்களில் பள்ளியறைக்கு முதலில் சிவபெருமான்தான் வருவார்.

    அவர் அம்பாள் வருகைக்காக காத்திருப்பார்.

    தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் இதுதான் நடைமுறையில் உள்ளது.

    ஆனால் திருவண்ணாமலை தலத்தில் இது மாறுபட்ட வகையில் உள்ளது.

    இங்கு பள்ளியறைக்கு முதலில் அம்பாள் வந்து விடுவாள்.

    அவள்தான் காத்துக் கொண்டிருப்பாள். அதன் பிறகே ஈசன் வருவார்.

    அம்பாளுக்கு அபிஷேகம் இல்லை

    திருவண்ணாமலை தலத்தில் தினமும் அர்த்தஜாம பூஜைக்கு முன்பு அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்வார்கள்.

    ஆனால் உண்ணாமுலை அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்வது இல்லை.

    தலைமுடி காய நேரமாகும் என்பதால் அம்பாளுக்கு இரவில் அபிஷேகம் நடத்தப்படுவதில்லை.

    அதற்கு பதில் அம்பாளுக்கு தீபாராதனைக் காட்டுவது நடைமுறையில் இருக்கிறது.

    • இந்தியாவில் காஞ்சீபுரம், திருவண்ணாமலையில் மட்டுமே சித்ரகுப்தருக்கு சன்னதி இருக்கிறது.
    • இதன் காரணமாகவே திருவண்ணாமலை மலை மீது யாரும் ஏற அனுமதிக்கப்படுவதில்லை.

    சித்ரகுப்தர் சன்னதி

    தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லாதபடி திருவண்ணாமலை தலத்தில் மட்டுமே சித்ரகுப்தருக்கு என்று தனி சன்னதி உள்ளது.

    இந்தியாவில் காஞ்சீபுரம், திருவண்ணாமலை ஆகிய 2 இடங்களில் மட்டுமே சித்ரகுப்தருக்கு சன்னதி இருக்கிறது.

    சித்திரை மாதம் இந்த சன்னதியில் சித்ரகுப்தருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடத்துகிறார்கள்.

    மலை ஏறியதற்காக பரிகார பூஜை

    திருவண்ணாமலையில் சிவபெருமான் மலை வடிவில் இருந்து அருள்பாலித்து வருவதாக ஒவ்வொரு பக்தரும் நம்புகிறார்கள்.

    எனவேதான் உலகில் உள்ள சுயம்பு லிங்கங்களில், இந்த மலை மிகப்பெரிய சுயம்பு லிங்கமாகக் கருதப்படுகிறது.

    லிங்கம் மீது யாராவது கால் பதித்து ஏறுவார்களா?

    இதைக் கருத்தில் கொண்டே திருவண்ணாமலை மலை மீது யாரும் ஏற அனுமதிக்கப்படுவதில்லை.

    கார்த்திகை மாதம் தீப திருநாள் தினத்தன்று மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபம் அருகில் சென்று வழிபடுவதற்காக மலை ஏறுவதுண்டு.

    இந்த தீபம் மொத்தம் 11 நாட்கள் எரியும்.

    12வது நாள் தீபக் கொப்பரை கீழே கொண்டு வரப்படும்.

    அன்றைய தினம் அண்ணாமலையார் கோவிலில் இருந்து ஒரு கலசத்தில் தீர்த்தம் எடுத்துச் செல்வார்கள்.

    பக்தர்கள் பாதம்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக தீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் இருந்து தீர்த்தம் தெளித்து வருவார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த பரிகாரப் பூஜை நடத்தப்படுகிறது.

    ×