search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "maha vishnu"

  • ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது.
  • வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும்.

  பெருமாளுடன் போரிட்டு, அவரின் அருளை பெற்ற மதுகைடவர்கள் எனும் அரக்கர்கள் இரண்டுபேர், தாம்பெற்ற வைகுண்ட சுகத்தை உலகில் இருக்கும் அனைவரும் பெறவேண்டும் என விரும்பி பெருமாளிடம் வைகுண்ட ஏகாதசி அன்று திருவரங்க வடக்குவாசல் வழியாக தாங்கள்அர்ச்சாவதாரத்தில் வெளியே வரும்போது தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின் தொடர்ந்து வருபவர் களுக்கும் அவர்கள் எத்தகைய பாவங்களை செய்திருந்தாலும் அவர்களுக்கு முக்தி தந்து அருள் புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

  பெருமாள் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். எனவே தான் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கபட்டு சாமி பவனிவரும் நிகழ்ச்சி உருவானது.

  பகல்பத்து - இராபத்து

  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் தலங் களில் 21 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய 10 நாட்கள் பகல் பத்து என்றும், பிந்தைய 10 நாட்கள் இராபத்து என்றும் அழைக்கப்படுகிறது.

  ஏகாதசி அன்று செய்யக்கூடாதது

  ஏகாதசி திதி நாட்களில் தாய், தந்தைக்கு நினைவு நாள் (சிரார்த்தம்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசி அன்று நடத்த வேண்டும். ஏகாதசி அன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிக கீழான நரகத்திற்கு செல்வான்.

  ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.

  கோவிலில் வழிபடுவது எப்படி?

  வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை. திருமால் ஆலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் எனப்படும் கதவுகள் திறக்கப்படும். அதன் வழியாக ஆலயத்திற்குள் சென்று திருமாலை வழிபட வேண்டும்.

  வீட்டில் வழிபடுவது எப்படி?

  திருமாலை வேண்டி இருக்கும் இவ்விரதத்தன்று, காலையில் எழுந்து நீராடிவிட்டு, வீட்டில் திருமாலின் படத்தின் முன் அமர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வணங்க வேண்டும். பின், ஏகாதசியன்று விரதமிருந்து, துவாதசியில் பாரணை செய்ய வேண்டும்.

  அன்று, பசுக்களுக்கு அகத்திக்கீரை தருவது மிகவும் புண்ணியமாகும். மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கி செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

  • கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார்.
  • சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார்.

  அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

  சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகே இந்த அதிகார நந்தி அமைக்கப்பெற வேண்டுமென சிவ ஆகமங்கள் கூறுகின்றன.

  கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய திருமால் திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.

  தன்னைக் காக்க திருமாலை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த திருமால் சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார்.

  சிவன் கோவில்களில் அதிகார நந்திக்கென வாகனம் உண்டு. திருவிழாக்காலங்களில் சிவபெருமான் இந்த அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா வருகிறார்.

  மகாவிஷ்ணுவின் தீவிர விசுவாசியும் பக்தனுமாகிய ராதாகிருஷ்ணனுக்கு மகாவிஷ்ணுவும், சனி பகவானும் நிகழ்த்திய திருவிளையாடலை பார்க்கலாம்.
  ஒரு சமயம் தன் அலுவல்களைக் கவனிக்கப் வேகமாக புறப்பட்ட சனிபகவானை, இடையில் வந்து தடுத்து நின்றார், விஷ்ணு பகவான். சனியின் பார்வை தெய்வத்திடம் பலிக்காது என்பதால் நேராக நின்ற பெருமாளிடம், “ஐயனே! என்னைத் தடுத்து நிறுத்தும் காரணம் என்ன?” என்று கேட்டார்.

  “நீ யாரைப் பிடிப்பதற்காக இவ்வளவு அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறாய் என்பதை தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார் மகா விஷ்ணு.

  புன்னகையுடன் வினவிய பெருமாளைப் பார்த்த சனி “உமக்குத் தெரியாததைப் போன்று கேட்கலாமா? நீங்கள் இங்கு என்னைப் போக விடாமல் தடுக்கும் காரணமும் அதுவே அல்லவா? இருந்தாலும் கூறுகிறேன். உம்முடைய தீவிர விசுவாசியும் பக்தனுமாகிய ராதாகிருஷ்ணன் எனும் ஆலயத்திருப்பணி செய்யும் மனிதரைப் பிடிக்கும் காலம் இது. அதற்காகவே செல்கிறேன்” என்று பதிலளித்தார்.

  உடனே பெருமாள், “அதைப்பற்றி பேசவே உன்னைத் தடுத்து நிறுத்தினேன். அவன் மனிதரில் மாணிக்கம். என் மேல் உள்ள பக்தியால் பார்ப்பவரிடம் எல்லாம், என் பெருமைகளை எடுத்துக்கூறி பக்தி மார்க்கத்தை வளர்த்து வருகிறான். மேலும் நான் குடியிருக்கும் பழுதடைந்த ஆலயங்களை எல்லாம் பிறரிடம் கையேந்தி கொடைகள் பெற்று, புதுப்பித்து திருப்பணிகள் செய்து வருகிறான். நீ அவனைத் துன்பப்படுத்துவதை எப்படி என் மனம் பொறுக்கும்?” என்றார்.

  ஆனால் சனி கடமையில் சுத்தமானவன் அல்லவா? “பெருமாளே! அந்த ஈசனே சொன்னாலும் என் கடமைதான் எனக்கு முக்கியம். ஆனாலும் உங்கள் மனம் கவர்ந்த பக்தனுக்காக நீங்கள் கவலைப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. ஆகவே ஏழரை வருடங்களுக்குப் பதில் ஏழரை மாதங்கள் அவனைப் பிடித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

  பெருமாளோ, “இல்லை.. இல்லை.. அவ்வளவு கஷ்டங்களை அவன் தாங்க மாட்டான். ஒரு ஏழரை நாழிகை மட்டும் அவனைப்பிடித்து உன் கடமையை ஆற்று” என கேட்க, சனிக்கு பெரும் மகிழ்ச்சி “நல்லது.. ஏழரை நாழிகையில் அவனைப்படுத்தும் பாட்டைக் காண தயாராக இருங்கள். வருகிறேன்” என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டார் சனி.

  பெருமூச்சு விட்ட பெருமாளும், நடப்பதைக் காணும் ஆவலில் பூலோகம் வந்தார்.

  அங்கு கடமையே என்று விஷ்ணு சுலோகங்கள் சொல்லி, காலை வழிபாட்டை முடித்த ராதாகிருஷ்ணன் புதியதாக கட்டத் தொடங்கி இருக்கும் ஆலயத்தின் கணக்குகளை பார்க்கத் தொடங்கினார். இதுதான் சமயமென்று அவரைப் பிடித்தார் சனீஸ்வரன்.

  அப்போது அங்கு வந்த இருவர் நன்கொடை என்று சொல்லி ஒரு மூட்டையை அவரிடம் தந்து வணங்கி விட்டு அவசரமாக சென்றனர். அதை அப்புறம் பிரிக்கலாம் என்றெண்ணி, மீண்டும் கணக்குகளை பார்க்கத் தொடங்கியவரை மீண்டும் அழைத்தது ஒரு குரல்.

  நிமிர்ந்து பார்த்தவரை என்னவென்று கேள்வி எழுப்பக்கூட அனுமதிக்காமல், அடித்து துவைத்து அரசவைக்கு இழுத்துச்சென்று, அரசன் முன் நிறுத்தினான் ஒரு காவலாளி.

  அங்கு இருந்த பணக்கார சீமாட்டி, “இதோ.. இவர்தான் கடைசியாக கோவிலுக்கு நன்கொடை என்று என் இல்லத்திற்கு வந்தவர். இவர்தான் அந்த நகைகளை எடுத்திருக்க வேண்டும்” என்று குற்றம் சாட்டினாள்.

  ராதாகிருஷ்ணன் பதறினார். “ஐயோ! என்ன இது. நான் எதற்கு உங்கள் நகைகளை எடுக்கிறேன். பகவான் புண்ணியத்தில் மூன்று வேளை உணவுடன், இருக்க ஆலயம், உடுக்க காவித் துணி உள்ளது. எனக்கு எதற்கு உங்கள் நகை. நான் குற்றமற்றவன்.”

  ஆனால் ராதாகிருஷ்ணன் இருந்த இடத்தில் இருந்து, காவலாளி கொண்டு வந்திருந்த மூட்டை, அந்தப் பெண்மணியின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக இருந்தது. அதற்குள் அந்தப் பெண்மணியின் நகைகள் இருந்தன.

  சனீஸ்வரனின் விளையாட்டு தொடங்கி விட்டது..

  நகைகளைத் திருடிய குற்றத்திற்காக ராதாகிருஷ்ணனுக்கு சவுக்கடிகளும் சாணிக்கரைசலும் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது. ஊர் மக்கள் அவரைத் தூற்றினர்.

  மனம் ஒடிந்த அந்த விஷ்ணு பக்தர்கள் ஆலய திருக்குளம் முன்பாக நின்றார். “பெருமாளே! என் நினைவு தெரிந்த நாள் முதல் உன்னைத்தவிர வேறொன்றும் என் சிந்தையில் நிறுத்தியதில்லை. இந்தப் பழியையும் நீ எனக்குத் தந்த பரிசாகவே நினைக்கிறன். ஆனாலும் பழியோடு வாழ்வதை விட உன் காலடியில் சேர்கிறேன்” என்றபடி குளத்தில் மூழ்கி இறக்கப் போனார்.

  அப்போது ஒரு அசரீரி அவரை தடுத்து நிறுத்தியது. ‘நான் சனீஸ்வரன்! உங்களின் இந்த துயரத்துக்கு நானே காரணம். பெருமாள் மீதான உங்களின் பக்தியால் பெருமாளின் வேண்டுகோளை ஏற்று வெறும் ஏழரை நாழிகை மட்டுமே, இத்துன்பங்களை நீங்கள் அனுபவிக்க நேர்ந்தது. இனி உங்கள் மேல் உள்ள பழிச்சொல் நீங்கும்.”

  அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர், அரசரும், பணக்கார பெண்மணியும். சற்று முன்புதான் நகையைத் திருடிய உண்மையான திருடர்கள் பிடிப்பட்டதாகவும், அவர்கள் தான் நகையை வைத்திருந்தால் மாட்டிக்கொள்வோம் என ரதாகிருஷ்ணனிடம் நன்கொடையாக அளித்ததை ஒப்புக்கொண்டதையும் தெரிவித்தனர். இருவரும் அந்த பக்தரிடம் மன்னிப்பும் கோரினர். ஊர் மக்களுக்கு விஷயம் தெரிந்து அனைவரும் விஷ்ணு பக்தரை மரியாதையோடு வரவேற்றனர். 
  காசியப முனிவருக்கும் வினதை என்பவருக்கும் பிறந்தவர் கருடன். இவர் மகா விஷ்ணுவின் முதன்மை வாகனமாக உள்ளவர். மகாவிஷ்ணுவின் அன்பைப் பெற்றார்.
  மகா விஷ்ணுவின் முதன்மை வாகனமாக உள்ளவர் கருடன். இவர் காசியப முனிவருக்கும் வினதை என்பவருக்கும் பிறந்தவர். இவர் பிறக்கும் போது இவரின் இறக்கைகள் பிரகாசமாக மின்னியது. இதனால் இவரை அக்னி தேவரின் அவதாரமாக நினைத்தனர்.

  நாகதேவர்களின் தாயான கத்ருவிடம் அடிமையாக இருந்த தன் தாயை மீட்பதற்காக, தேவலோகம் சென்று அமிர்தத்தைக் கொண்டு வர முடிவு செய்தார். அமிர்தத்தை மீட்க வேண்டுமானால் தேவர்களுடன் போர்புரிய வேண்டியதிருந்தது.

  இந்திரன் முதலான தேவர்களுடன் போரிட்டு வென்று, அமிர்தம் கொண்டு வந்து தாயை மீட்டார். இருப்பினும் அந்த அமிர்தத்தை நாகர்கள் சாப்பிட முடியாதபடி, மீண்டும் தேவர்களிடமே கொண்டுபோய் சேர்த்தார். இதனால் மகாவிஷ்ணுவின் அன்பைப் பெற்றார். அவருக்கு வாகனமாக இருக்கும் பெரும்பேற்றை அடைந்தார்.
  மகா விஷ்ணு இயக்கத்தில் கயல் சந்திரன் - அஞ்சு குரியன் நடிப்பில் உருவாகும் `நான் செய்த குறும்பு' படத்தின் போஸ்டர் சர்ச்சைக்கு நடிகர் சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். #NaanSeidhaKurumbu #Chandran
  மகா விஷ்ணு இயக்கத்தில் கயல் சந்திரன் - அஞ்சு குரியன் நடிப்பில் உருவாகும் படம் `நான் செய்த குறும்பு'. இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி விமர்சனத்துக்குள்ளாகியது. போஸ்டரில் கயல் சந்திரன் கர்ப்பிணி பெண் போன்ற தோற்றத்தில் மகப்பேறு பெறுவது போல் அந்த போஸ்டர் இருந்தது. இதனால் அந்த போஸ்டருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தது.

  இந்த நிலையில், படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் முக்கிய அம்சமாக கர்ப்பிணிப் பெண்கள் ஐந்து பேருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் சந்திரன் பேசும்போது,

  `இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்து ட்விட்டரில் பலவிதமான கருத்துகள் வந்தன. சிலர் ஒரு மாதிரியான படமாக இருக்குமோ என்று கூறியிருந்தார்கள். நான் சொல்கிறேன் இது சுரேஷ் கிருஷ்ணாவின் `ஆஹா' படம் மாதிரி குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும். நான் செய்த குறும்பு அடல்ட் காமெடி படம் கிடையாது. பெண்களை கிண்டல் செய்யும் விதத்தில் இந்த போஸ்டரை வெளியிடவில்லை. பெண்கள் படும் கஷ்டத்தை ஒரு ஆணும் பட வேண்டும். அப்போது தான் அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள் புரியும்' என்றார்.  ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் தொடக்க விழாவில் நாயகி அஞ்சு குரியன், மிர்ச்சி விஜய், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, ஒளிப்பதிவாளர் ரமணன் புருஷோத்தமா, கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன், எடிட்டர் மணிக்குமரன் சங்கரா, நிர்வாகத் தயாரிப்பாளர் சுரேஷ் ராஜா, இணைத் தயாரிப்பாளர் எஸ்.பி. சுரேஷ், தயாரிப்பு நிர்வாகி ஹென்றி குமார், தயாரிப்பாளர்கள் டெல்லி பாபு,  பானு பிக்சர்ஸ் ராஜா, விநியோகஸ்தர் ஜேகே, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். #NaanSeidhaKurumbu #Chandran

  வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டு அருள்பாலிக்கிறார் மகாவிஷ்ணு. அவருடைய அவதாரங்களில் மிகச் சிறப்பானவையாக 10 அவதாரங்கள் கூறப்படுகின்றன.
  வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டு அருள்பாலிக்கிறார் மகாவிஷ்ணு. இவர் அவ்வப்போது பூலோக மக்களைக் காப்பதற்காக பல்வேறு அவதாரங்கள் எடுத்ததாக புராணங்களும், இதிகாசங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன. அவருடைய அவதாரங்களில் மிகச் சிறப்பானவையாக 10 அவதாரங்கள் கூறப்படுகின்றன.

  மச்சாவதாரம் :

  மகாவிஷ்ணுவின் முதல் அவதாரமாக கருதப்படுகிறது, மச்ச அவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். பிரம்ம தேவரிடம் இருந்து வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த அரசுனை அழிப்பதற்காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் இதுவாகும்.

  கூர்மாவதாரம் :

  தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடல் கடையப்பட்டது. ஒரு கட்டத்தில் மந்தார மலை சரியத் தொடங்கியது. இதனைத் தாங்கி பிடிப்பதற்காக, மகாவிஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்தார்.

  வராக அவதாரம் :

  பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன், அதை கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். இதனால் பூமியின் இயக்கம் நின்று போனது. இதையடுத்து திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து, அசுரனைக் கொன்றதோடு, பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு வந்து அருள் செய்தார்.  நரசிம்ம அவதாரம் :

  வராக அவதாரத்தின்போது திருமாலால் அழிக்கப்பட்ட இரண்டாட்சனின் சகோதரன் இரண்யகசிபு. அவன் நாராயணனை எதிரியாக பாவித்து வந்தான். ஆனால் அவனது மகனான பிரகலாதனோ, நாராயணரின் நாமத்தையே உச்சரித்து வந்தான். இதனால் சிறுபிள்ளை என்றும் பாராமல் பிரகலாதனை துன்புறுத்தினான் இரண்யகசிபு. பிரகலாதனுக்காக தூணில் இருந்து, சிங்க தலையும், மனித உடலுமாக நரசிம்ம உருவத்தில் திருமால் அவதரித்தார்.

  வாமன அவதாரம் :

  பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. அவனது ஆணவத்தை அடக்குவதற்காக பெருமாள் குள்ளமான உருவம் தாங்கி அவதரித்தார். அதுவே வாமன அவதாரம் ஆகும். மகாபலியிடம் இருந்து மூன்றடி மண் கேட்டார். அவனும் சம்மதிக்கவே, ஒரு அடியில் பூமியையும், மற்றொரு அடியில் வானத்தையும் அளந்தார். மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனை பாதாள உலகத்தில் தள்ளினார்.

  பரசுராம அவதாரம் :

  ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். தந்தையின் சொல்லுக்காக தாயின் தலையையே கொய்தவர். இவர் இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

  ராமாவதாரம் :

  ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்திற்காக வனவாசம் சென்றதுமாக ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்த அவதாரம் இது.  பலராம அவதாரம் :

  கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

  கிருஷ்ணாவ தாரம் :

  வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினார். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.

  கல்கி அவதாரம் :

  ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் என்று கூறப்படுகிறது.
  ×