search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paurnami"

    • ஒன்பது மஞ்சளை மாலையாக்கி தொடுத்துச் சார்த்தினால் எல்லாப் பாவங்களும், பிரச்சினைகளும், தோஷங்களும் விலகும்.
    • இவ்வூரின் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் ஸ்ரீதயாநிதீஸ்வரர்.

    குடந்தையிலிருந்து திருவையாறு சாலையில் காவிரியாற்றிலிருந்து தண்ணீர் மதகின் வழியாகப் பாய்ந்தோடும்

    உள்ளிக்கடை என்ற ஊருக்கருகில் உள்ள வட குரங்காடு துறை.

    இவ்வூரின் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் ஸ்ரீதயாநிதீஸ்வரர்.

    அம்மன் ஸ்ரீ ஜடாமகுட நாயகி, ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இங்குள்ள அம்மனுக்கு ஒன்பது மஞ்சளை மாலையாக்கி

    தொடுத்துச் சார்த்தினால் எல்லாப் பாவங்களும், பிரச்சினைகளும், தோஷங்களும் விலகும்.

    பின் இந்த மாலையிலிருக்கும் மஞ்சளை எடுத்துத் தினமும் தேய்த்துக் குளித்து வந்தால்

    குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை பிறக்கும்.

    • இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காகக் கங்கையை அங்கு வரும்படிச் செய்தார்.
    • இந்த நதியே நாளடைவில் கவுதமி என அழைக்கப்பட்டது.

    ஆற்காடு என்னும் ஊருக்கு அருகில் காரை என்ற இடத்தில் ஒரு சமயம் கவுதம மகிரிஷி தன் மனசாந்திக்காக ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்.

    இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காகக் கங்கையை அங்கு வரும்படிச் செய்தார்.

    இந்த நதியே நாளடைவில் கவுதமி என அழைக்கப்பட்டது.

    மகரிஷி கவுதமர் பூஜித்த சிவலிங்கத்திற்கு கவுதமேஸ்வரர் என்று வழங்கப்பட்டது.

    இங்கு எழுந்தருளி உள்ள அம்பாள் கிருபாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறாள்.

    இங்குள்ள கோவிலில் ஒரே சமயத்தில் இறைவனையும் இறைவியையும் தரிசிக்கும் விதமாக உள்ளது.

    ஒரு சமயம் கவுதம மகரிஷி அமர்ந்த நிலையில் தவத்தில் ஆழ்ந்திருந்தார்.

    இவருடைய தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவன் ஒரு பவுர்ணமி நாளில் கவுதம முனிவருக்குக் காட்சி கொடுத்தார்.

    இதனால் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மாலையில் மகேஸ்வரனுக்கு ஏழு வகையான அபிஷேகமும் செய்கிறார்கள்.

    இங்குப் பவுர்ணமி நாளில் கவுதமேஸ்வரரைத் தரிசனம் செய்தால் உடல் பிணியும், மனப்பிணியும் நீங்கும்.

    • இங்கு அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.
    • இவ்வாலயத்தில் உள்ள அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் மீது நின்று தவக்கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

    திருநாரையூரில் திருத்தலத்தில் சங்கடஹர சதுர்த்தி அன்று இரவில் இங்குள்ள பொள்ளாப்பிள்ளையாருக்குப் பூஜை செய்யும்

    அதே சமயத்தில் பிரகாரத்தின் ஓரிடத்தில் குத்து விளக்கை ஏற்றி வானத்திலுள்ள சந்திரனுக்குப் பூஜை செய்து

    தீபாராதனை காட்டும்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் உள்ள வன்னவேடு என்ற வன்னிக்காடு என்ற தலம் உள்ளது.

    இங்கு வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது.

    இங்கு அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    இவ்வாலயத்தில் உள்ள அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் மீது நின்று தவக்கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

    பவுர்ணமி அன்று மாதா புவனேஸ்வரிக்கு "லகுசண்டி" ஹோமம் செய்கிறார்கள்.

    இந்த ஹோமத்தின்போது பூஜை செய்யப்படும் கடத்திலிருந்து (கலசத்திலிருந்து) நீரை எடுத்து அம்பிக்கைக்கு அபிஷேகம் செய்வார்கள்.

    இந்த அபிஷேகத்தை சப்த ரிஷிகளே வந்து செய்ததாக ஐதீகம்.

    பவுர்ணமி நாள்களில் நடைபெறும் இந்த அபிஷேகப் பூஜையில் கலந்து கொண்டால் வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் தடங்களின்றிக் கட்டி முடிப்பார்கள்.

    • மூன்று மாதப் பவுர்ணமி தினத்தில் தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் கை கூடும். மனசாந்தி கிடைக்கும்.
    • இதனால் தாயின் பூரண கடாட்சம் பெற்று பல சவுகரியத்தை அடையலாம்.

    திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாகப் புதுவை செல்லும் சாலையில் பெரும்பாக்கம் என்னும் இடத்திலிருந்து தெற்கிலும்

    விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியகப் புதுவை செல்லும் சாலையில் திருக்கனூருக்கு வடக்கிலும் உள்ளது திருவக்கரை.

    இங்கு எழுந்தருளியுள்ள சந்திரளெலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள வக்கிர காளியம்மனைப் பவுர்ணமி நாள்களில் தொடர்ந்தோ

    அல்லது மூன்று மாதப் பவுர்ணமி தினத்தில் தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் கை கூடும். மனசாந்தி கிடைக்கும்.

    பவுர்ணமி நாளில் நள்ளிரவு நேரத்தில் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் இருக்கும் காளியம்மனை வணங்கும்போது

    அம்மனின் சாந்த சொரூப தரிசனத்தைக் காணலாம்.

    இதனால் தாயின் பூரண கடாட்சம் பெற்று பல சவுகரியத்தை அடையலாம்.

    • பவுர்ணமி தினத்தன்று ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் எண்ணை ஸ்நானம் செய்யக்கூடாது.
    • பிரசாதத்தை ஏழை எளியவர்களுக்கு வினியோகம் செய்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.

    பவுர்ணமி தினத்தன்று ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் எண்ணை ஸ்நானம் செய்யக்கூடாது.

    திருச்சி திருவானைக் காவில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில்

    கிழக்கு நோக்கியுள்ள குபேர லிங்கத்தைப் பவுர்ணமி தினங்களில் அபிஷேகம் செய்து வெண்ணிறப் பட்டாடை சாத்தி

    வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து மல்லிகை, முல்லை, சம்பங்கி, சந்தன முல்லை போன்ற வாசனை பூக்களால்

    அர்ச்சனை செய்து வழிபாடு செய்த பின் பிரசாதத்தை ஏழை எளியவர்களுக்கு வினியோகம் செய்தால்

    வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.

    • பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் இங்குக் கிரிவலம் செய்கிறார்கள்.
    • திருச்சி மாவட்டம் குளித்தலைக்கும் மணப்பாறைக்கும் இடையில் உள்ளது ஐயர் மலை.

    ஈரோடு மாவட்டம் மேட்டூருக்கு அருகில் உள்ளது வேதகிரிமலை.

    பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் இங்குக் கிரிவலம் செய்கிறார்கள்.

    திருச்சி மாவட்டம் குளித்தலைக்கும் மணப்பாறைக்கும் இடையில் உள்ளது ஐயர் மலை.

    இம்மலையில் குடிகொண்டிருக்கும் இறைவன் ரத்தின கிரீஸ்வரர் அம்பாள் அரும்பார் குழலி.

    ஒவ்வொரு பவுர்ணமியிலும் இங்குக் கிரிவலம் நடைபெறுகிறது.

    இம்மலையைப் பவுர்ணமி நாளில் கிரிவலம் செய்பவர்களுக்கு துயரங்களும், பிணிகளும் நீங்கி சகல நன்மைகளும் ஏற்படும்.

    குறிப்பாக ஏழரை சனியின் கொடுமையாலும், சனி தசை இருப்பவர்கள் சனியின் கொடுமை விலகி சவுகரியம் ஏற்படும்.

    • பவுர்ணமி தினங்களில் காமாட்சி தங்கத்தேரில் உலா வருவது சிறப்பான ஒன்று.
    • ஆடிப்பூர பவுர்ணமி அன்று, அன்னைக்கு 108 பால் குட அபிஷேகம் நடைபெறும்.

    சிவனின் சொல்லை மீறி தட்சனின் யாகத்திற்குச் சென்ற பார்வதியைத் தட்சன் அவமதித்ததால் அந்த யாகத்தில் குதித்து விடுகிறாள்.

    யாகத்தில் எரிந்து கொண்டிருந்த பார்வதியின் உடலை எடுத்து ருத்ர தாண்டவம் ஆடுகிறார்.

    இதைக்கண்டு அஞ்சிய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் நாரதன் முதலானோர் பிரம்மனிடம் முறையிட இந்தப் பிரச்சினையை மகாவிஷ்ணுவால்தான் தீர்க்க முடியும் என்று விஷ்ணுவை வேண்ட, அவரும் தனது சக்ராயுதத்தால் அன்னையின் உடலை ஐம்பத்தோரு துண்டுகளாக வெட்டி வீச, அதில் பார்வதியின் தொப்புள் வீழ்ந்த இடம் காஞ்சி சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

    பவுர்ணமி தினங்களில் காமாட்சி தங்கத்தேரில் உலா வருவது சிறப்பான ஒன்று.

    ஆடிப்பூர பவுர்ணமி அன்று, அன்னைக்கு 108 பால் குட அபிஷேகம் நடைபெறும்.

    இதில் கலந்து கொள்ளும் பக்தர் களுக்குக் காமாட்சியின் அருட்கடாட்சம் பூரணமாகக் கிட்டும். சகல நன்மைகளும் ஏற்படும்.

    • திருவாரூக்குத் தெற்கே சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றான திருக்காரவாசல் உள்ளது.
    • இங்குக் கண்ணாயிரம் என்ற திருநாமத்தோடு இறைவன் எழுந்தருளியுள்ளார்.

    திருவாரூக்குத் தெற்கே சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றான திருக்காரவாசல் உள்ளது.

    இங்குக் கண்ணாயிரம் என்ற திருநாமத்தோடு இறைவன் எழுந்தருளியுள்ளார்.

    இத்திருக்கோவிலில் உள்ள தீர்த்தக்குளத்திற்குப் பிரம்ம தீர்த்தம் என்று பெயர்.

    சந்திர கிரகணம் மற்றும் பவுர்ணமி அன்று இக்குளத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் நீங்கி

    இறைவனின் அருளைப் பெறுவார்கள் என்று இத்தல வரலாறு கூறுகிறது.

    • இந்த பூஜையைத் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியன்றும் செய்யலாம்.
    • பவுர்ணமி அன்று காலையில் குளித்துவிட்டு எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    சத்யநாராயண விரதம் நம் வேண்டுதல் நிறைவேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும்விதமாக அமைந்த விரதமாகும்.

    இந்த விரதம் அனுஷ்டிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.

    பவுர்ணமி அன்று சத்ய நாராயண விரதம் கடை பிடிக்கப்படுகிறது.

    பொதுவாகவே விரதம் என்பது எதையாவது வேண்டிக்கொண்டு அது நடக்கவேண்டும் என்பதற்காக அனுசரிக்கப்படுவது.

    ஆனால், இந்த சத்யநாராயண விரதம் அப்படியல்ல, நம் வேண்டுதல் நிறை வேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும் விதமாக அமைந்த விரதம்.

    இந்த சத்யநாராயண பூஜையை எப்படி அனுஷ்டிப்பது? பொதுவாகவே இந்த விரத பூஜையை எந்த மாதத்திலும் வரும் பவுர்ணமி அன்றைக்கு அனுசரிக்கலாம்.

    அன்றைக்கு பகல், இரவு பொழுதுகளைத் தவிர்த்து, பூர்ண சந்திரனின் உதய நேரத்தைப் பார்த்து அப்போது மேற்கொள்ளலாம்.

    இந்த பூஜையைத் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியன்றும் செய்யலாம்.

    பவுர்ணமி அன்று காலையில் குளித்துவிட்டு எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    மஹாவிஷ்ணுவின் ஓர் அம்சம்தான் சத்யநாராயணர் என்பதால் அன்று மாலைப் பொழுதுவரை விஷ்ணு ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டிருக்கலாம்.

    திரும்பத் திரும்ப விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லலாம்.

    பூஜையறையிலேயே இந்த பூஜையை அனுசரித்தால் ரொம்பவும் விசேஷம்

    அல்லது பூஜை செய்வதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தை பெருக்கி, நீரால் துடைத்து சுத்தம் செய்து, மாவுக்கோலம் போட்டுக்கொள்ளுங்கள்.

    இடவசதிக்கேற்ப சின்னதாக மண்டபம் போல அமைத்துக் கொள்ளலாம்

    அல்லது ஒரு மணை போட்டு அதிலே சத்யநாராயணர் விக்ரகத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

    அல்லது சத்யநாராயணர் படம் கிடைத்தாலும் உபயோகப் படுத்திக்கொள்ளலாம்.

    மண்டபத்துக்குச் சின்னதாக ஒரு மாவிலைத் தோரணம் கட்டிக்கொள்ளுங்கள்.

    மணை அல்லது மண்டபத்துக்குள் விக்ரகம் அல்லது படத்தை வைப்பதற்கு முன்னால் அதை நன்கு துடைத்து சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.

    இரண்டு வாழைக் கன்று வாங்கி இருபக்கமும் சாய்த்து வையுங்கள்.

    இந்த மண்டபம் மேற்கு பார்த்தபடி இருக்கலாம்.

    நீங்கள் ஒரு மணைமேல், கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு பார்த்தோ உட்கார்ந்து பூஜையை ஆரம்பிக்கலாம்.

    உங்களுக்கு இடது பக்கத்தில் இரண்டு நுனி வாழை இலைகளை ஒன்றன்மேல் ஒன்றாகக் கொஞ்சம் இடைவெளி விட்டு சேர்த்துப் போட்டுக் கொள்ளுங்கள்.

    அதன்மேல் அரிசியைப் பரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.

    ஆறுமுனை உள்ள ஷட்கோணம் (நட்சத்திரம் போல) கோலத்தை அதன்மேல் விரலால் வரைந்து கொள்ளுங்கள்.

    சுத்தமான நீர் நிரப்பிய ஒரு சொம்பை கோலத்தில் வையுங்கள்.

    சொம்பில் கழுத்தைச் சுற்றி ஒரு பூச்சரத்தைக் கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

    சொம்பிற்கு சந்தனம் குங்குமம் இடுங்கள்.

    கலசத்தின் வாயில் மாவிலைக் கொத்தை செருகி வையுங்கள்.

    அதன் நடுவே மஞ்சள் பூசிய தேங்காயை வையுங்கள்.

    பிறகு விநாயகரை மனதாற வணங்கி விட்டு பூஜையை ஆரம்பியுங்கள். விஷ்ணு ஸ்தோத்திரங்களைச் சொல்லுங்கள்.

    சத்யநாராயணர் அஷ்டோத்திரம் சொல்லிக் கொண்டே உதிரிப் பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

    பூஜை முடிந்ததும் பாயசம், வடை என்று பிரசாதங்கள் நிவேதனம் செய்யுங்கள்.

    அடுத்து, கற்பூரம் காட்டி இந்த பூஜையை நிறைவு செய்யலாம்.

    பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வெளியே வந்து, வானில் பூரணமாக ஒளிரும் சந்திரனைப் பார்த்து தரிசனம் செய்துவிட்டு நிவேதனப் பொருட்களை உட்கொண்டு விரதத்தை முடிக்கலாம்.

    சத்யநாராயண பூஜை விரதமிருப்பதாக வேண்டிக்கொண்டு எந்த கோரிக்கை நிறைவேறவேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த கோரிக்கை நிறைவேறியதும் மறந்துவிடாமல் கண்டிப்பாக சத்யநாராயண பூஜையை அனுசரித்துவிட வேண்டும்.

    • ஐப்பசி மாதம் பவுர்ணமியில் விளக்கேற்றினால் உணவு தான்யம் பெருகி பசிப்பிணிகள் நம்மை விட்டு அகலும்.
    • கார்த்திகை மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பேரும் புகழும் வளர்ந்து அது நிலைத்து நிற்கும்.

    சித்ரா பவுர்ணமியில் விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும்.

    வைகாசி பவுர்ணமியில் விளகேற்றினால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் பேசி முடிக்கப்பட்டு திருமணம் கைகூடும்.

    ஆனி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் குழந்தையில்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்.

    புரட்டாசி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகி பால் வியாபாரம் அதிகரிக்கும் லட்சுமி கடாட்சம் பெருகும்.

    ஐப்பசி மாதம் பவுர்ணமியில் விளக்கேற்றினால் உணவு தான்யம் பெருகி பசிப்பிணிகள் நம்மை விட்டு அகலும்.

    கார்த்திகை மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பேரும் புகழும் வளர்ந்து அது நிலைத்து நிற்கும்.

    மார்கழி மாதப் பவுர்ணமி யில் விளக்கேற்றினால் தேக ஆரோக்கியம் ஏற்பட்டு உடல் பலம் பெறும்.

    மாசி மாதப் பவுர்ணமி யில் விளக்கேற்றினால் துன்பம் விலகி இன்பமும் மகிழ்ச்சியும் பெருகும்.

    பங்குனி மாதப் பவுர்ணமி யில் விளக்கேற்றினால் தர்மமும், புண்ணியமும் செய்த பலன் கிட்டும்.

    பவுர்ணமி அன்று பூஜை அறையில் ஐஸ்வர்ய கோலத்தை போட்டு நமது பிரார்த்தனையை மனத்தில் நினைத்தோ அல்லது ஒரு தாளில் எழுதி ஐஸ்வர்ய கோலத்தில் வைத்து விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் நாம் நினைத்தது வெற்றி பெறும்.

    • திருச்சி மாநகருக்கு அருகில் உள்ள விராலி மலையில் வள்ளி தேவசேனை சமேதரராகக் காட்சி அளிக்கும்
    • பவுர்ணமி நாள்களில் இம்மலையில் உள்ள முருகனைத் தரிசனம் செய்தால், இறைவனின் அருளைப் பெறலாம்

    திருச்சி மாநகருக்கு அருகில் உள்ள விராலி மலையில் வள்ளி தேவசேனை சமேதரராகக் காட்சி அளிக்கும்

    சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் சித்திரா பவுர்ணமி அன்று சங்காபிஷேகமும், வைகாசி விசாக விழாவும்

    பங்குனி உத்திர திருவிழாவும் சிறப்பானது.

    பவுர்ணமி நாள்களில் இம்மலையில் உள்ள முருகனைத் தரிசனம் செய்தால், இறைவனின் அருளைப் பெறுவதுடன்

    இங்குள்ள மூலிகையான விராலிச் செடியின் மனத்தைச் சுவாசிக்கும் பொழுது உடலில் உள்ள நோய்கள் மறைந்து

    ஆரோக்கியமான வாழ்வும் கிட்டும். 

    • கார்த்திகை பவுர்ணமியில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • தாமரைப்பூவால் அர்ச்சனை செய்வதும், பருப்பு நெய் சேர்த்த சாதம் நைவேத்தியம் செய்தலும் சிறப்பானது.

    கார்த்திகை பவுர்ணமியில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    மார்கழி திருவாதிரை நாளில் அம்பிகைக்கு வெண்ணிற ஆடை உடுத்தி ஒற்றைப்படை எண்ணிக்கையில் நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும்.

    தாமரைப்பூவால் அர்ச்சித்தலும், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தலும் சிறப்பானவை.

    களி நைவேத்தியம் செய்ய வேண்டும். இப்பூஜை செய்வதன் மூலம் அம்பிகையின் பூரண அருளைப் பெறலாம்.

    கஷ்டங்கள் நீங்கும், நோய்கள் குணமாகும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.

    மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமியில் திருவாதிரை திருநாள் விரதத்துடன் அனுசரிக்கப்படுகிறது.

    தை மாத பவுர்ணமியன்று அம்மனுக்கு மஞ்சளும், சிவப்பும் கலந்த ஆடை அணிவித்தல் வேண்டும். தேன் அபிஷேகம் சிறப்பானது.

    வில்வம், வெள்ளை தாமரைப்பூ, நந்தியாவட்டை இவற்றால் அர்ச்சனை செய்தல் நற்பலனை தரும்.

    நைவேத்தியப் பொருள் பாயசம். ஆயுள் விருத்தியை தரும் இந்த பூஜை.

    தை மாதப் பவுர்ணமியில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    மாசி மாத பவுர்ணமி தினத்தில் செய்யும் வழிபாடு சிவதீட்சை பெற்ற பலனை தரக் கூடியது.

    வெள்ளை நிறம் கலந்த 5 வண்ணங்கள் கொண்ட ஆடை சார்த்தி, ஸ்படிக மணியால் மாலை அலங்காரம் செய்ய வேண்டும்.

    சர்க்கரைப் பொங்கல் படையல் அம்பிகைக்கு ஏற்றது.

    பங்குனி மாதத்தில் பவுர்ணமி அன்று மஞ்சள் நிற வஸ்திரம் சார்த்தி, கோமேதகம் பதித்த ஆபரணம் அணிவிக்கலாம்.

    தயிர் அபிஷேகம் சிறப்பானது.

    தாமரைப்பூவால் அர்ச்சனை செய்வதும், பருப்பு நெய் சேர்த்த சாதம் நைவேத்தியம் செய்தலும் சிறப்பானது.

    இந்த பூஜையின் மூலம் புண்ணிய கதி அடையலாம்.

    ஒவ்வொரு மாத பவுர்ணமியையும் சிறப்பு பண்டிகைகளாகவே கொண்டாடுவது விசேஷமானதாக கருதப்படுகிறது.

    ×