search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manonmaneeshwarar"

    • பஞ்ச கயிலாயத்தில் கடைசித் திருக்கோவில் இதுவாகும்.
    • பௌர்ணமியன்று இரவில் சப்தரிஷிகள் இன்றும் இங்கு பூஜை செய்வதாக ஐதீகம்.

    திருநெல்வேலிக்கு அருகே அமைந்துள்ள வடக்கு விஜயநாராயணம் புனிதமும் தொன்மையும் மிக்க தலமாகும்.

    இங்கு சிறப்பு வாய்ந்த மனோன்மணீசுவரர் ஆலயம் உள்ளது.

    பௌர்ணமி, சிவராத்திரி நாட்களில் இங்கு வந்து வணங்குகிறவர்களுக்கு கயிலையில் அருள் வதுபோல திருவருள் புரிகிறேன்' என்று சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறினாராம்.

    பஞ்ச கயிலாயத்தில் கடைசித் திருக்கோவில் இதுவாகும். சிவராத்திரி அன்று வேடன் முக்தி பெற்ற திருத்தலமும் இதுவே ஆகும்.

    இங்கு அருள்புரியும் சிவபெருமானின் திரு நாமம் மனோன்மணீச்வரர் என்பதாகும். மனோன் மணி என்றால், "மனதில் நினைத்ததை அருள்கின்றவர்' என்று பொருள்.

    தேவலோகத்தில் உள்ள காமதேனு, சிந்தாமணி, கற்பக விருட்சம் போல, இங்கு வருகின்ற அனைத்து உலக மக்களுக்கும் நினைத்ததை அருளும் தலமாக இது விளங்குகின்றது.

    இப்படி இந்தியாவில் உள்ள ஒரே திருக் கோவில் இது மட்டும்தான் என்கிறார்கள்.

    சிவபெருமான் பௌர்ணமி அன்று இங்கு தோன் றியதால் பௌர்ணமி பூஜை, க்ஷேத்திரவலம் மிகவும் விசேஷமானதாகும்.

    பௌர்ணமியன்று இரவில் சப்தரிஷிகள் இன்றும் பூஜை செய்வதாக ஐதீகம்.

    21 சித்தர்கள் கோவிலைச் சுற்றித் தவமிருப்பதாகவும், பௌர்ணமி, சிவராத்திரி ஆகிய நாட்களில் இரவு முழுவதும் இக்கோவிலை வலம் வந்து வணங்குவதாகவும் தலபுராணம் கூறுகிறது.

    ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து வணங்குகின்றனர்.

    பௌர்ணமியன்று க்ஷேத்திர வலம் வந்து மனோன்மனீச்வரரை வணங்கி னால் நோய் நொடிகள், கிரக தோஷங்கள் நீங்கி, கல்வி, செல்வம், உயர்ந்த பதவி, புத்திர பாக்கியம் போன்றவற்றைப் பெறலாம். 

    ×