என் மலர்
நீங்கள் தேடியது "Maha lakshmi"
- லட்சுமி மற்றும் குபேரருக்கு உரிய மரமாகவும் நெல்லி மரம் உள்ளது.
- வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க, வெள்ளை நிற புறாக்களை வளர்க்கலாம்.
ராம நாமம் எங்கெல்லாம் பாடப்படுகிறதோ, அங்கெல்லாம் அனுமன் வாசம் செய்வதாக புராணங்கள் சொல்கின்றன. அதே போல, ஸ்ரீமன் நாராயணன் எனப்படும் மகாவிஷ்ணுவின் பெருமை பேசப்படும் இடங்களில் எல்லாம் திருமகளான லட்சுமி தேவி வசிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் எங்கெங்கெல்லாம் லட்சுமி வாசம் செய்வாள், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதைப் பற்றி இங்கே பார்ப்போம்.
* விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால், நெல்லிக்கனிக்கு 'ஹரி பழம்' என்ற பெயரும் உண்டு. லட்சுமி மற்றும் குபேரருக்கு உரிய மரமாகவும் நெல்லி மரம் உள்ளது. ஒருவரது வீட்டில் நெல்லி மரம் இருந்தால் அந்த வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். அங்கு லட்சுமியும் வாசம் செய்வாள். தீய சக்திகள் அந்த வீட்டை அணுகாது.
* மங்கலப் பொருட்களாக கருதப்படும், மஞ்சள், குங்குமம், கோலம், சந்தனம், மாவிலைத் தோரணம், சுமங்கலி பெண்கள், பூரண கும்பம், திருமண், வாழை, வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் போன்றவற்றிலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.
* வீட்டில் துளசி மாடம் வைத்திருப்பவர்கள், அதிகாலையில் நீராடிவிட்டு துளசி மாடம் முன்பாக தினமும் விளக்கேற்றி மூன்று முறை வலம் வந்து வணங்கினால் லட்சுமியின் அருளைப் பெறலாம்.
* வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க, வெள்ளை நிற புறாக்களை வளர்க்கலாம். சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோமியம், தாமரைப் பூ, ஆடைகளை தூய்மையாக வைத்திருப்பதும் லட்சுமி கடாட்சத்தை பெற்றுத் தரும்.
* காலையில் கண்விழித்த எழுந்தவுடன் உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படத்தை பார்ப்பது, செல்வ வளம் சேர்க்கும். லட்சுமியின் அருளை வழங்கும்.
திருமால் கோவில்களில் பகவத் சன்னதியில் உள்ள பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.
ஸ்ரீ லட்சுமி என்று போற்றப்படும் மகா லட்சுமிக்கு பல பெயர்கள் உண்டு. மாதுளங்கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மை என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகா ராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள் கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் அவள் போற்றப்படுகிறாள்.
அவை: மஞ்சள், பூர்ண கும்பம், குங்குமம், கோலம், வாழை, மாவிலை, சந்தனம், தோரணம், திருவிளக்கு, கண்ணாடி, வில்வம், நெல்லிக்காய், துளசி, கோமியம், தாமரை, சங்கு, ஸ்ரீ சூர்ணம், திருமண் ஆகும்.
மேலும் பசு, யானை போன்ற விலங்குகளிடமும், முதியவர்களிடமும், பொறுமையும் அன்பும் மிக்கவர்களிடமும், சுமங்கலிகள், பசுக்களை பராமரிப்பவர்கள், நல்ல புத்தி கொண்டவர்கள், ஞானிகள் ஆகியோரிடமும் லட்சுமி நிரந்தரமாக இருப்பதாக ஐதீகம்.