என் மலர்
நீங்கள் தேடியது "அனுமன்"
- மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
- வணிகத்துக்காக இந்து மதம் பற்றி படம் எடுத்துக்கொண்டு அவற்றை நிஜத்தில் நம்ப முடியாது என ராஜமௌலி கூறுவதாக விமர்சனம் எழுந்தது.
மகேஷ் பாபுவின் 25வது படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு வாரணாசி என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிருத்விராஜ் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் 2027 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
படத்தின் அறிமுக டீசர் அண்மையில் ஐதராபாத்தில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
அந்த நிகழ்வில் பேசிய ராஜமௌலி, "எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றார். அதை கேட்டு நினைத்து எனக்கு கோபம் வந்தது. என் மனைவிக்கும் அனுமன் மீது அன்பு உண்டு. எனக்கும் அவர் மீது கோபம் வருகிறது. என் அப்பா அனுமனைப் பற்றிப் பேசி, படத்தின் வெற்றிக்கு அனுமனின் ஆசீர்வாதங்களை நம்பியிருக்கச் சொன்னபோது, எனக்கு மிகவும் கோபம் வந்தது" என்று தெரிவித்தார்.
இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலானது. குறிப்பாக வாரணாசி டீசரில் இந்து தொன்மம் குறித்த காட்சிகள் இடமபெட்ருந்த நிலையில், வணிகத்துக்காக இந்து மதம் பற்றி படம் எடுத்துக்கொண்டு அவற்றை நிஜத்தில் நம்ப முடியாது என ராஜமௌலி கூறுவதாக விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் அனுமனை வமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக 'ராஷ்ட்ரிய வானரசேனா' என்ற அமைப்பு ராஜமௌலி மீது ஐதராபாத்தில் உள்ள சரூர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
வாரணாசி பட விழாவில் ராஜமௌலியின் கருத்து இந்துக்களின் உணர்வுகளை கடுமையாக புண்படுத்தியதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
- உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான் அனுராக் தாகூர் கூறினார்.
- நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பினார்.
மாணவர்கள் ஒருமித்த குரலில் நீல் ஆம்ஸ்ட்ராங் என பதிலளித்தனர்.
அதற்கு அனுராக் தாக்கூர் "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான்" என்று மாணவர்களிடம் கூறினார். பாஜக எம்.பி.யின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் முதன்முதலாக விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என்று பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் பேசியதற்கு திமுக எம்.பி. கனிமொழி, மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேச்சுக்கு தமிழிசை செளந்தரராஜன் ஆதரவு தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இதிகாசங்களில் நிலவுக்கு அனுமான் சென்றார் என்ற பதிவு இருக்கிறது என்று சொல்கிறார். இதில் தவறு இல்லை. எதை எடுத்தாலும் குறை சொல்வதா. விண்வெளிக்கு முதல் முதலில் சென்றது அனுமன் என அனுராக் தாக்கூர் நம்புகிறார், அதனால் சொன்னார். மெய்ஞான்மும் விஞ்ஞானமும் ஏற்கனவே இணைந்து தான் இந்திய நாட்டில் பரிமாண வளர்ச்சியில் வலர்ந்து கொண்டு இருக்கிறது.
ராமர் என்ன என்ஜீனியரா என்று கேட்டனர். அதன் பின்னர் ராமர் பாலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் மோடி அரசு வான்வெளியில் என்ன முன்னேற்றம் அடைந்து உள்ளது என்பதை பாருங்கள். அனுராக் தாகூர் பேசுவதை விட்டு முன்னேற்றத்தை பாருங்கள்" என்று தெரிவித்தார்.
- அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாகூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல...
- பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.
உலகின் முதல் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் கிடையாது என்றும் முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது அனுமன்தான் எனவும் பள்ளி மாணவர்கள் மத்தியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மதுரை பாராளுமன்ற தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாகூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல,
பா.ஜ.க.வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது.
நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
- எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான் அனுராக் தாகூர் கூறினார்.
- நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பினார்.
மாணவர்கள் ஒருமித்த குரலில் நீல் ஆம்ஸ்ட்ராங் என பதிலளித்தனர்.
அதற்கு அனுராக் தாக்கூர் "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான் என்றார். மேலும் அவர் பேசியதாவது:
நாம் இன்றும் நம்மை தற்போதைய நிலையில் பார்க்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழமையான நம் பாரம்பரியம், அறிவு, கலாசாரம் பற்றி நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டியவாறே நாம் இருக்கிறோம்.
எனவே, பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சிந்தித்து, நமது தேசத்தையும், மரபுகளையும், அறிவையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்தத் திசையில் பார்த்தால் நீங்கள் நிறைய விஷயங்களைக் காண்பீர்கள் என தெரிவித்தார்.
நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என்று பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஒருவர், பள்ளி மாணவர்களிடம் நிலவில் முதன்முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல, அனுமன் என்று கூறுவது மிகவும் கவலையளிக்கிறது.
அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல. வகுப்பறைகளில்மாணவர்களை தவறாக வழிநடத்துவது நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையை அவமதிப்பதாகும்.
இந்தியாவின் எதிர்காலம், உண்மையை கட்டுக்கதையுடன் குழப்பிக் கொள்ளாமல், ஆர்வத்தை வளர்ப்பதில்தான் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
- உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன்தான்.
- நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார்.
சிம்லா:
இமாச்சல பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பினார்.
மாணவர்கள் ஒருமித்த குரலில் நீல் ஆம்ஸ்ட்ராங் என பதிலளித்தனர்.
அதற்கு அனுராக் தாக்கூர் "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான் என்றார். மேலும் அவர் பேசியதாவது:
நாம் இன்றும் நம்மை தற்போதைய நிலையில் பார்க்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழமையான நம் பாரம்பரியம், அறிவு, கலாசாரம் பற்றி நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டியவாறே நாம் இருக்கிறோம்.
எனவே, பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சிந்தித்து, நமது தேசத்தையும், மரபுகளையும், அறிவையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்தத் திசையில் பார்த்தால் நீங்கள் நிறைய விஷயங்களைக் காண்பீர்கள் என தெரிவித்தார்.
நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வானர படையில் உள்ள நளன் தண்ணீரில் போடும் பாறைகள் மட்டும் மிதந்தன.
- அனுமன் எத்தனை முறை முயற்சி செய்தாலும் பாறைகளை தண்ணீரில் மிதக்க வைக்க முடியவில்லை.
சுக்ரீவரின் படைத்தளபதிகளில் ஒருவராக இருந்தவர் நளன். இவர் வானரப் படையில் சிறந்த போர் வீரராகவும் திகழ்ந்தார். வனவாசத்தின்போது சீதையை ராவணன் கவர்ந்து சென்று இலங்கையில் உள்ள அசோக வனத்தில் வைத்தான். இதனை அனுமன் மூலமாக அறிந்த ராமர், உடனே ராமேஸ்வரம் கடல் முனையை அடைந்து இலங்கைக்கு எப்படி செல்வது என்று யோசித்தார். கடல் மீது ஒரு பாலம் கட்டினால் மட்டுமே சீதை இருக்கும் இடத்துக்கு செல்ல முடியும் என்பதை உணர்ந்த ராமர், பாலம் கட்ட திட்டமிட்டார். சுக்ரீவனின் வானர படையின் உதவியுடன் பாலம் கட்டும் பணியை தொடங்கினார்.
வானர படைகள், பாறைகளை எடுத்து வந்து அனுமனிடன் கொடுக்க அனுமன் அதை கடலில் போட்டார். அந்த பாறைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. ஆனால் வானர படையில் உள்ள நளன் தண்ணீரில் போடும் பாறைகள் மட்டும் மிதந்தன. இதைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அனுமன் எத்தனை முறை முயற்சி செய்தாலும் பாறைகளை தண்ணீரில் மிதக்க வைக்க முடியவில்லை.
இதைப் பார்த்து கொண்டிருந்த லட்சுமணன் ராமரிடம், ''அண்ணா, அனுமன் உள்பட மற்ற வானரப் படைகள் போடும் எல்லா பாறைகளும் நீரில் மூழ்குகின்றன. ஆனால் நளன் போடும் பாறைகள் மட்டும் எப்படி மிதக்கின்றன. இதற்கு என்ன காரணம்'' எனக்கேட்டார்.
அதற்கு ராமர், ''ஒரு சமயம் வனத்தில் மாதவேந்திரர் என்ற மகரிஷி கடும் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அவர் தண்ணீரில் மூழ்கி இறைவனை தியானித்தால் இறை அருள் அதிக பலன் தரும் என்பதால் தண்ணீரில் மூழ்கியபடி தவம் மேற்கொண்டார். அப்போது சிறுவயதில் இருந்த வானரமான நளன், அவர் மீது விளையாட்டுத்தனமாக கற்களை வீசி எறிந்தார். இதனால் கோபம் கொண்ட முனிவர், ''நீ எறியும் கற்கள் நீரில் மூழ்காமல் மிதக்கும்'' எனக் கூறி மீண்டும் தவத்தை தொடர்ந்தார். அப்போது அந்த மகரிஷி சாபமாக அளித்த வார்த்தை இன்று நமக்கு பாலம் கட்ட உதவியாக மாறி இருக்கிறது'' என்றார்.
நளனின் உதவியுடன் பாலம் சீக்கிரமாகவே கட்டப்பட்டது. பின்பு ராமர், ராவணனிடம் போர்புரிந்து சீதையை மீட்டார்.
- 8-ந்தேதி சந்திர கிரகணம்: பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் 12½ மணிநேரம் மூடப்படுகிறது
- இங்கு 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.
திண்டிவனம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் பஞ்சவடி கோவில் அமைந்துள்ளது. இங்கு பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி, 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதிகள் அமைந்துள்ளன.
சந்திர கிரகணத்தையொட்டி வருகிற 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பஞ்சவடி கோவில் காலை 6.30 மணியில் இருந்து இரவு 7 மணி வரை 12.30 மணிநேரம் மூடப்படுகிறது. அதாவது அன்றைய தினம் அனைத்து சன்னதிகளும் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு காலை 6.30 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 7 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு கிரகண பரிகார பூஜைகள் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். எனவே பக்தர்கள் மேலே குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலர் நரசிம்மன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
- வடை மாலை அலங்காரம் கட்டளைதாரர்கள் மூலம் நடத்தப்படுகிறது.
- முதல் நாளில் 154 பக்தர்கள் முன்பதிவு செய்தனர்.
நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் செதுக்கபட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த ஆஞ்சநேயருக்கு தினசரி காலையில் நடை திறக்கப்பட்டு 9 மணி அளவில் 1,008 வடை மலை சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறும்.
இதை தொடர்ந்து காலை 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்ல எண்ணெய், சீயக்காய், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சாமிக்கு தினசரி அபிஷேகம் மற்றும் வடை மாலை அலங்காரம் கட்டளைதாரர்கள் மூலம் நடத்தப்படுகிறது. அதற்காக ஒரு ஆண்டுக்கு முன்பே பக்தர்கள் முன்பதிவு செய்வது வழக்கம். ஒரு நாள் நடைபெறும் வடை மாலை அலங்காரம் மற்றும் அபிஷேகத்துக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேர் முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து பூஜையில் கலந்துகொள்ளும் கட்டளைதாரர்களுக்கு அபிஷேக முடிவில் பிரசாதம் வழங்கப்படும்.
அதன்படி வருகிற 2023-ம் ஆண்டுக்கான ஆஞ்சநேயர் சாமி அபிஷேக முன்பதிவு நேற்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்தனர். முதல் நாளான நேற்று 154 பக்தர்கள் பதிவு செய்து இருப்பதாகவும், சனி, ஞாயிறு மற்றும் விஷேச நாட்களுக்கு அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், முழு தொகையையும் செலுத்தினால் மட்டுமே அபிஷேக தேதி முன்பதிவு செய்யப்படும் என்ற அறிவிப்பால் கடந்த ஆண்டைவிட முதல்நாளில் குறைவான முன்பதிவே நடைபெற்று இருப்பதாகவும் கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் ஆஞ்சநேயர் சாமிக்கு தங்க கவசம் அணிவிக்க ரூ.5 ஆயிரம், வெள்ளிக்கவசத்துக்கு ரூ.750, முத்தங்கி அலங்காரத்துக்கு ரூ.3 ஆயிரம், தங்கத்தேருக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.
இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் நாமக்கல் மட்டும் இன்றி பிற மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- இந்த கோவிலுக்கு கோபுரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- விழாவில் 1 லட்சத்து 8 வடைமாலை அணிவிக்க ஏற்பாடு.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினசரி சாமிக்கு 1,008 வடைமலை அலங்காரம் நடைபெறும்.
தொடர்ந்து நல்லெண்ணெய், மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் மலர் அலங்காரம் செய்யப்படும். இல்லையெனில் வெள்ளிக்கவசம் அல்லது தங்ககவசம் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெறும். மாலையில் தங்கத்தேர் உற்சவம் மற்றும் சந்தனக்காப்பு, வெண்ணெய்காப்பு, முத்தங்கி போன்ற அலங்காரம் நடைபெறும்.
இந்த கோவிலுக்கு கோபுரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மலைக்கோட்டையின் கீழ் நரசிம்மர் கோவிலும் நாமகிரி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். இவர்களை வணங்கியது போல ஆஞ்சநேயர் தனி கோவிலில் காட்சி தருகிறார். ஸ்ரீ நரசிம்மர் அனுமனுக்கும் லட்சுமிதேவிக்கும் காட்சியளித்த இடமாக இந்த ஸ்தலம் உள்ளது. இங்கு அமைந்துள்ள ஆஞ்சநேயரின் உயரமானது 18 அடியாகும் பிரமாண்டமாக இந்த சிலை காட்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை இதுதான்.
ராமாயண காலத்தில், சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துவந்தார் ஆஞ்சநேயர்.பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார்.
அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒருபெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்துவந்தார்.அந்த நேரத்தில் சூரியன் உதயமான படியால், வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சந்தியாவந்தனத்தை முடித்தார்.மீண்டு வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார்.ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.
"ராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்" என்றொரு அசரீரி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் ஆண்டு தோறும் அனுமன் ஜெய்ந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்று ஆஞ்ச நேயர் 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்தில் அருள்பாலிப்பது காண கண் கொள்ளா காட்சியாகும்.
ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற 23-ந் தேதி ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சாத்தப்படுகிறது.
காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயா சிங், ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பட்டாச்சாரியார் ரமேஷ் தலைமையிலான குழுவினர் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் வருகிற 21-ந் தேதி முதல் வடை தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- சந்தன காப்பு அலங்காரத்துடன் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
திருச்சிற்றம்பலம் அருகே அலிவலம் மண்ணுமுடைய அய்யனார் கோவில் வளாகத்தில் பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 6 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.
மாலை 3 மணிக்கு வேத விற்பன்னர்கள் முன்னிலையில் சிறப்பு யாகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
பக்தர்கள் மண்ணுமுடைய அய்யனாரையும், பக்த ஆஞ்சநேயரை தரிசனம் செய்வதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. வழிபாடு ஏற்பாடுகளையும் பக்த ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அலிவலம் கிராம மக்கள் செய்து உள்ளனர்.
- வருகிற 23-ந்தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
- ட்ரோன் கேமிரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல் :
நாமக்கலில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 18 அடி உயர ஒரே கல்லால் ஆன ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 23-ந் தேதி மூல நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதில் நாமக்கல் மட்டுமின்றி தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்வார்கள்.
இதையொட்டி ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தும் நிகழ்ச்சி, அன்று காலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. அதற்காக வடை தயாரிக்கும் பணி 4-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. மேலும் பக்தர்கள் பாதுகாப்பு, தரிசன வசதி உட்பட அனைத்துக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை ஒட்டி நாமக்கல் நகரின் முக்கிய சாலைகளான கோட்டை சாலை, பூங்கா சாலைகளில் போக்குவரத்துக்கு நாளை மறுநாள் தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் திருட்டு வழிப்பறி சம்பவங்களை தடுக்க சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ட்ரோன் கேமிரா மூலம் கண்காணிக்கவும், குற்ற செயல்களை தடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விழாவை ஒட்டி பக்தர்களின் பாதுகாப்பு பணியில் ஏ.டி.எஸ்.பி மணிமாறன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.






