என் மலர்
நீங்கள் தேடியது "Lunar eclipse"
- மரபுகளை கேலி செய்வதன் மூலம் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளனர்.
- ராமர் மற்றும் லட்சுமணனுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பூரி:
சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகண நிகழ்வின் போது ஓடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் பிரியாணி விருந்துக்கு இந்து மத எதிர்ப்பாளர்கள் குழு ஏற்பாடு செய்துள்ளது. இந்த குழுவை தாக்கியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்து கடவுள்களுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கு தண்டனை வழங்கக் கோரி, பூரி ஜெகநாதர் கோவில் பணியாளர்கள் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போது நூற்றாண்டு பழமையான மரபுகளை கேலி செய்வதன் மூலம் பகுத்தறிவுவாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளனர் என்று அந்தக் கடிதத்தில், 36 வெவ்வேறு குழுக்களை உள்ளடக்கிய சேவகர்கள் அமைப்பான சத்திஷா நிஜோக் குற்றம் சாட்டி உள்ளது.

இந்து மத எதிர்ப்பாளர்கள் குழு கடவுள் ராமர் மற்றும் லட்சுமணனுக்கு எதிராக தொலைக்காட்சி சேனல்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், ஜெகநாதருக்கு கோழி உணவை பிரசாதமாக வழங்கலாம் என்று கூட அவர்கள் கூறி உள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்களில் ஈடுபடும் இந்துமத எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த பிரச்சினையால் ஒடிசா மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டால் அதற்கு மாநில அரசுதான் பொறுப்பு என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
- இக்கோவிலுக்கு கிரகண தோஷம் கிடையாது என்பது ஐதீகம்.
- திரளான பக்தர்கள் கலந்து கொணடு சாமி தரிசனம் செய்தனர்.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான ேகாவில்களின் நடை சாத்தப்பட்டது. மதியம் 2.39 மணிக்கு தொடங்கிய சந்திரகிரகணம் மாலை 6.19 மணி வரை நடந்தது. கிரகணம் தொடங்குவதற்கு முன்பே புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள பல்வேறு கோவில்களின் நடை சாத்தப்பட்டு இருந்தது. சந்திரகிரகணம் முடிந்த பின்னர் மாலை 7 மணி அளவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தன.
இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நடை சந்திர கிரகண நேரத்திலும் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன.
சந்திர கிரகணத்திலும் இக்கோவில் நடை திறந்து இருப்பதற்கு இக்கோவில் மூலவராக தர்பாரண்யேஸ்வரர் அருள்பாலிப்பதே காரணமாகும். தர்ப்பை வனத்தில் சுயம்பு மூர்த்தியாக தர்பாரண்யேஸ்வரர் உருவானதால் இக்கோவிலுக்கு கிரகண தோஷம் கிடையாது என்பது ஐதீகம். இதனால் சந்திரகிரகணத்திலும் வழக்கமான பூஜைகள் நடந்தன.
இதில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சந்திரகிரகணம் முடிந்த, பின்னர் கோவிலில் இருந்து அஸ்திர தேவர் பிரம்ம தீர்த்த குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. மூலவர் தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வரருக்கு கிரகண கால அபிஷேகமும் நடந்தன.
- ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு கிரகண சாந்தி அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
- பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நடை சாத்தப்பட்டது. ஆனால் சிவ ஷேத்திரமான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் மட்டும் சந்திர கிரகண சமயத்தில் நடை சாத்தப்படாமல் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
பிற்பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணிவரை சந்திர கிரகணம் இருந்தது. இந்த கிரகண நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஞான பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு கிரகண சாந்தி அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. மூலவரான ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு நவகிரக கவசம் அலங்கரிக்கப்படுவதால் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மீது கிரகண கால சமயத்தில் எந்தவித தாக்கமும் ஏற்படாது என்ற காரணத்தினால் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடத்துவதாக கோவில் வேதப்பண்டிதர்கள் தெரிவித்தனர்.
மேலும் சந்திரகிரகண சமயத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்தால் அனைத்து விதமான தோஷங்கள் நிவர்த்தி அடையும் என்பதால் சந்திரகிரகணமான நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சந்திர கிரகண சமயத்தில் பரணி போன்ற நட்சத்திரம் கொண்டவர்கள் சந்திர கிரகண சமயத்தில் சந்திரனை பார்க்க கூடாது என்றும், இதனால் தீயவை நிகழும் என்பவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்து கொண்டால் அனைத்தும் நல்லதாக நடக்கும் என்றும், தோஷம் நீங்கும் என்றும் கோவில் வேத பண்டிதர் அர்த்தகிரி சுவாமி தெரிவித்தார்.
- இந்தியாவின் பிற பகுதிகளில் சந்திர கிரகணம் தென்பட்டது.
- அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் அடுத்த சந்திர கிரகணம் நிகழும்.
இந்தியாவில் முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.46 மணிக்கு தொடங்கியது. இந்த கிரகணம் 6 மணி 19 நிமிடங்களுக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சந்திர கிரகணத்தின் இறுதி நிலையை காண முடிந்தது.

சென்னையில் மாலை 5.39 மணி சந்திர கிரகணம் தெரியும் என கணிக்கப்பட்டது. சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட மாவட்டங்களில் உள்ள அறிவியல் கோளரங்கங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தமிழகத்தில் சந்திர கிரகணம் தென்படவில்லை. சந்திர கிரகண நிறைவு நேரத்தில் வானத்தில் முழு நிலவு தென் பட்டதுடன் மேகம் அதை மறைப்பதை காண முடிந்தது.

இது தொடர்பாக சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குநர் செளந்திரராஜா பெருமாள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
இன்று நடைபெற்றது முழு சந்திரகிரகணம். இது ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் காணப்பட்டது. மழை காரணமாக முன்பே கணித்தபடி சென்னையில் தென்படவில்லை. எனினும், உலகின் பல பகுதியிலும், இந்தியாவின் பிற பகுதியிலும் கிரகணம் தென்பட்டது என்பதை காண்பித்தோம். அடுத்த சந்திர கிரகணம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ந் தேதி நிகழும். இந்த கிரகணம் இந்தியாவில் முழுமையாக தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இந்திய நேரப்படி பிற்பகல் 3.46 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கியது.
- கிரகணம் 6 மணி 19 நிமிடங்களுக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி:
சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. முழு சந்திரன் பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி நேர சந்திர கிரகணமும் ஏற்படும்.
அதன்படி இன்று முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 3.46 மணிக்கு தொடங்கியது. இந்த கிரகணம் 6 மணி 19 நிமிடங்களுக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரகணம் இந்தியாவில் 5 மணி 12 நிமிடங்களுக்கு தெரியும் என கூறப்பட்டது. அதன்படி அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சந்திர கிரகணத்தின் இறுதி நிலையை காண முடிந்தது.
சென்னையில் மாலை 5.39 மணி சந்திர கிரகணம் தெரியும் என கணிக்கப்பட்டது. சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட அறிவியல் கோளரங்கங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
- சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைசாத்தப்பட்டது.
- 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.
மதுரை
சந்திர கிரகணம் இன்று மதியம் 2.39 மணிக்கு தொடங்கி, மாலை 6.19 மணி வரை ஏற்படும் என்பதால் சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஆகம விதிப்படி கோவில் நடைகள் சாத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று சந்திர கிரகணம் என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலசந்தி- சாயரட்சை பூஜைகள் முடிந்த பிறகு கோவில் நடை இன்று காலை 9.30 மணிக்கு சாத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கிரகண நேரத்தில் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை.
சந்திர கிரகணம் முடிந்து இன்று இரவு 7.30 மணிக்கு பிறகு நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமின்றி 22 உப கோவில்களின் நடைகளும் இன்று சாத்தப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து மத்திம காலத்தில் சுவாமிகளுக்கு மாலை 4.30 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்படும். அதன் பிறகு சந்திரசேகரர் புறப்பாடு நடக்கும். இரவு 7 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடக்கும். 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன் பிறகு பக்தர்கள் மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு நடை அடைக்கப்படும்.
- கோயில் வளாகத்தில் அறிவிப்புப் பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.
காங்கேயம் :
சந்திர கிரகணத்தையொ ட்டி, காங்கயம் சிவன்மலை முருகன் கோயிலில் செவ்வா ய்க்கிழமை (நவம்பா் 8) நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திர கிரகணம் இன்று நடைபெறுவதையொட்டி, திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வா ய்க்கிழமை மதியம் 2 மணிக்கு நடை அடைக்கப்படும். இது குறித்து கோயில் வளாகத்தில் அறிவிப்புப் பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை வழக்கம்போல கோயில் திறக்கப்பட்டு, வழிபாடு நடைபெறும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இன்று சந்திர கிரகணம் நடக்கிறது.
- திருப்பத்தூரில் உள்ளது பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில்.
திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்துவது வழக்கம்.
இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடை காலை 6 மணி்க்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதன் பின்னர் காலை 11.30 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் சந்திரகிரகணம் முடிந்தவுடன் இரவு 7.30 மணிக்கு நடை திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
- இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ரூ.300 தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சந்திர கிரகணம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 மணிவரை நிகழ்கிறது. அதையொட்டி இன்று காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை 11 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான கதவுகள் மூடப்படுகின்றன.
அந்த நேரத்தில் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தரிசன டிக்கெட்டுக்கான பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசனம், ரூ.300 தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. அதன்பிறகு கைங்கர்யம், நிவேதனம் முடிந்ததும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபட கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலின் துணைக் கோவில்களான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில், கபிலேஸ்வரர் கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்கள் மூடப்படுகின்றன. முன்னதாக துணைக் கோவில்களில் காலை 7.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபடலாம்.
சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு, சுத்தம் செய்து கைங்கர்யங்கள் நடக்கும். இதைப் பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சந்திர கிரகணத்தையொட்டிராமேசுவரம் கோவிலில் இன்று பகல் நடை அடைக்கப்படும்.
- இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
ராமேசுவரம்
சந்திர கிரகணத்தை ஒட்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பின்னர் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது.
ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் வழக்கமான கால பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதனை யடுத்து வழக்கம்போல் பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. சந்திர கிரகணத்தை யொட்டி கோவில் நடை மாலை 7 மணிக்கு திறக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு அர்த்த ஜாம பூஜைகள் நடந்த பிறகு நடை அடைக்கப்படும்.
சந்திர கிரகணத்தையொட்டி சுவாமி புறப்பாடாகி அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரிக்கு செல்லும். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 4 ரத வீதி வழியாக வலம் வந்து கோவிலுக்கு 7 மணிக்கு சென்றடையும். கோவிலில் சந்திர கிரகண பூஜைகள் நடைபெற்ற பின் பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.