search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindu organization"

    • நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அவரை கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது
    • ஆர்ப்பாட்டத்தின் போது ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அவரை கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    அகில பாரத அய்யப்பா சேவா சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அகில பாரத அய்யப்பா சங்க செயலாளர் கதிர்வேல் ஆறுமுகம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் வன்னிய ராஜன், சாரதி ராம் அறக்கட்டளை நிறுவனர் ராமநாதன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், சைவ சித்தாந்த பேரவை தலைவர் திருமலை வேலு, சைவ சித்தாந்த சபை தலைவர் சண்முகவேல் ஆவுடையப்பன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜா, நகர தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

    தென்னிந்திய செங்குந்த மகாஜன துணைத் தலைவர் மாரிமுத்து, பா.ஜனதா மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், கோமதி அம்பிகை மாத சங்க அமைப்பாளர் பட்ட முத்து, ஆர்.எஸ்.எஸ். மாவட்ட அமைப்பாளர் கோபால், சைவ சித்தாந்த சபை செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கண்டன உரை ஆற்றினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தின் போது ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அகில பாரத அய்யப்பா சேவா சங்க பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அந்தோணி ராஜ், நகர இளைஞரணி தலைவர் விக்னேஷ், மகளிர் அணி தலைவி மகேஸ்வரி, நிர்வாகிகள் மாரிமுத்து, அருண், சுப்பிரமணியன், இந்து முன்னணி நகரத் தலைவர் சங்கர் மற்றும் பெண்கள், ஆடித்தவசு மண்டகப்படிதாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி களக்காட்டில் இந்து அமைப்பினர் கோவில் உண்டியலில் மனுக்களை போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    களக்காடு:

    களக்காடு சத்திய வாகீஸ் வரர், கோமதி அம்மன் கோவிலுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. அவைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.

    எனவே கோவில் சொத்துக்களை மீட்க கோரி இந்து சமய மன்ற செயலாளர் கணேசன் தலைமையில் பா.ஜ. நிர்வாகி தினகரன் முன்னிலையில் கோவில் உண்டியலில் மனுக்களை போட்டு இறைவனிடம் முறையீடு செய்து நூதன போராட்டம் நடத்தினர்.
    தண்டையார்பேட்டையில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய இந்து அமைப்பினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே கடந்த 19-ந்தேதி பாரத் முன்னணி என்ற இந்து அமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் பல்வேறு இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

    அவர்களது பேச்சு மதக் கலவரத்தை தூண்டும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்படியும் இருந்ததாக ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு இந்துமக்கள் சேனா தலைவர் சரவணன், ருத்ர சேனா தலைவர் தங்கராஜ், பாரத் முன்னணி சண்முகம், சத்யசேனா பொதுச் செயலாளர் ராஜகோபால் ஆகிய 4 பேர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு தஞ்சாவூரில் இருந்த சரவணன், தங்கராஜ் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை விசாரணைக்காக ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் இன்று காலை பல்வேறு இந்து அமைப்பினர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையொட்டி பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். #tamilnews
    ×