என் மலர்
நீங்கள் தேடியது "sankarankovil"
- சங்கரன்கோவிலில் புதியபஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
- இதனால் இன்று முதல் சங்கரன்கோவிலில் செயல்பட்டு வந்த பஸ் நிலையம் மூடப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் புதியபஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது செயல்பட்டு வரும் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து அதில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளது. இதனால் இன்று முதல் சங்கரன்கோவிலில் செயல்பட்டு வந்த பஸ் நிலையம் மூடப்பட்டது.
இதைத்தொடர்ந்து நகராட்சி சார்பில் திருவேங்கடம் சாலையில் நகராட்சி கிழக்குப் பகுதியில் ஏற்கனவே இருந்த பஸ் நிலையம் தற்காலிக பஸ் நிலையமாக இன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்காலிகபஸ் நிலையத்தில் கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் பஸ் நிலைய விரிவாக்க பணி முடியும் வரை தற்காலிக பஸ் நிலையம் செயல்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சுதந்திர தின விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது.
- ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் பங்கேற்றவர்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் உணவு வழங்கினார்.
சங்கரன்கோவில்:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது. கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர நிர்வாகி பிரகாஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் பங்கேற்றவர்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் உணவு வழங்கினார். தொடர்ந்து அவர்களுடன் சமபந்தி விருந்தில் பங்கேற்றார். இதில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மாரியப்பன், நகராட்சி கவுன்சிலர்கள் புஷ்பம், அலமேலு, விஜய்குமார், செல்வராஜ், குருப்பிரியா ராமராமர், தி.மு.க. வக்கீல் சதீஷ், காவல் கிளி ஜெயக்குமார், சங்கர், மாணவரணி கார்த்தி, அப்பாஸ்அலி, வார்டு செயலாளர்கள் ஜிந்தாமைதீன், கோமதிநாயகம் மற்றும் அன்சாரி பீர்முகமது, பிரபாகரன், கோமதி சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ராஜா எம்.எல்.ஏ. மற்றும் சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் ஆகியோர் கோவிலில் உள்ள பூலித்தேவர் அறைக்கு சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல கவுரி சங்கர் தியேட்டர் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
- 82 பேர் இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்காக சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் வைத்து கிராம உதயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கர சுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன் முன்னிலை வகித்தார்.
கிராம உதயம் இலவச மருத்துவ துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். மகாத்மா காந்தி சேவா மன்ற தலைவர் மனோகர், சமூக ஆர்வலர்கள் பாட்டத்தூர் பால்ராஜ், சங்கரன்கோவில் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் பிரியங்கா தலைமையிலான மருத்துவ குழுவினர் அனைவருக்கும் இலவசமாக கண் பரிசோதனை செய்தனர். இதில் 121 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 82 பேர் இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்காக சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிராம உதயம் களப்பணியாளர் ஜெயராணி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை கிராம உதயம் மருத்துவத் துறையினர் செய்திருந்தனர்.
- 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா விமர்சையாக நடைபெற்றதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் மேற்பார் வையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணாராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா பிரசித்தி பெற்றது.
இந்தாண்டு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றமும், 8-ந் தேரோட்டம் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 11-ம் நாளான நேற்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு கும்ப அபிஷேகம், காலை 9 மணி க்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், காலை 11 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளினார்.
மாலை 4.30 மணிக்கு சங்கரநாராயண சுவாமி ரிஷப வாகனத்தில் தபசு காட்சிக்கு எழுந்தருளினார். மாலை 6.39 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசு காட்சி கொடுத்தார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா விமர்சையாக நடைபெற்றதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அம்பாள் சங்கர நாராயணனை மூன்று முறை வலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், பக்தர்கள், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல் உள்ளிட்ட விளைபொருட்களை சப்பரத்தில் மேல் எரிந்தனர்.
விழாவில் சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, எம்.எல்.ஏ. ராஜா, தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் செல்லத்துரை, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், சுற்றுச்சூழல் அணி அழகுதுரை, அ.தி.மு.க. மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில் குமார், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், இளைஞர் அணி துணைச் செயலாளர் இசக்கியப்பன், அ.தி.மு.க.மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில்குமார், பாரதீய ஜனதா கட்சி கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வர பெருமாள், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ராஜா, செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளர் மாரிமுத்து, புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் ராசையா, தி.மு.க. நகர செயலாளர் மாரிசாமி, துணைச் செயலாளர் கே. எஸ்.எஸ்.மாரியப்பன், ஒப்பந்ததாரர்கள் வெள்ளி முருகன், குட்டி ராஜ், நகர அ.தி.மு.க. செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் வேல்சாமி, கவுன்சிலர்கள் சந்திரசேகர், ராமதுரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுத்தார்.
திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் மேற்பார் வையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணாராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆடித்தபசு திருவிழாக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.
12-வது திருநாளான இன்று பகல் 12 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- விழிப்புணர்வு கூட்டத்திற்கு சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரீஸ்வரி தலைமை தாங்கினார்.
- குழந்தை கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மனித உரிமை களம் மற்றும் குழந்தை உரிமையும் நீங்களும் என்ற நிறுவனம் மூலம் குழந்தை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரீஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை முன்னிலை வகித்தார். மனித உரிமைகள், குழந்தை கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு குறித்து இயக்குனர் பரதன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு தென்காசி தங்கராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் இந்த அமைப்புகளை சேர்ந்த லோகமாதா, நிஷா, சுப்புலட்சுமி, மாரியம்மாள் மற்றும் பள்ளி மாணவிகள் 800 பேர் கலந்து கொண்டனர்.
மேலும் குழந்தை கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு குழந்தை உரிமை நிறுவனம் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலை பள்ளிகளிலும் கிராமப்புற பெண்களிடமும் விழிப்புணர்வு நடத்தப்பட்டன. தொடர்ந்து பள்ளி மாணவிகள் குழந்தை கடத்தல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். முடிவில் ராதா நன்றி கூறினார்.
- நேபாள் இளைஞர் விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற சர்வ தேச அளவிலான தடகளப் போட்டிகள் நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது.
- நேபாள் காத்மாண்டுவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் மெர்லின் ஜோஸ் (10), ராகவ்கிருஷ்ணா (12) முகேஷ் (14) ஆத்தீஸ் (12) ஆகியோர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டி மாணவர் நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
நேபாள் இளைஞர் விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற சர்வ தேச அளவிலான தடகளப் போட்டிகள் நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது.
கடந்த மாதம் ஜூலை 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், ராமலட்சுமி தம்பதியரின் மகன் கலையரசு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
நேபாள் காத்மாண்டுவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் மெர்லின் ஜோஸ் (10), ராகவ்கிருஷ்ணா (12) முகேஷ் (14) ஆத்தீஸ் (12) ஆகியோர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர்.
சர்வதேச அளவில் தடகளப் போட்டிகளில் பங்கெடுத்து மாணவர் கலையரசுவை ஏ.வி.கே. கல்வி குழும தலைவர் அய்யாத்துரைபாண்டியன், பயிற்சியாளர்கள் பிரவீன் குமார், பிரியா மற்றும் பெருமாள், ராமலட்சுமி, பூலித்தேவன் மக்கள் கழக மாநில தலைவர் பெருமாள்சாமி, மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டுக்களும், வாழ்த்துக களும் தெரிவித்தனர்.
- அரியும் சிவனும் ஒன்றே என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் ஆடித்தபசு திருநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும்.
- தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ஆடித்தபசு திருவிழா 12 நாட்களும் வெகு விமர்சையாக நடத்தப்பட உள்ளது.
சங்கரன்கோவில்:
தமிழகத்தின் புகழ்பெற்ற சிவ தலங்களில் சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாக விளங்குகிறது.
கொடியேற்றம்
அரியும் சிவனும் ஒன்றே என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் ஆடித்தபசு திருநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் ஆடித்தபசு திருவிழா கட்டு ப்பாடுகளுடன் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.
தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ஆடித்தபசு திருவிழா 12 நாட்களும் வெகு விமர்சையாக நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவிழாவிற்கான பாது காப்பு முன்னேற்பாடுகள் குறித்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தார். தொடர்ந்து கோவில் வளாகம், உட்பிராகாரம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
2 ஆயிரம் போலீசார்
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். எனவே 2,000 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தெரிவித்தார்.
- பால் வியாபாரி மாடசாமி டீக்கடையில் பால் ஊற்றிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி உள்ளார்.
- காயமடைந்த மாடசாமி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள நைனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி (வயது 32). பால் வியாபாரி.
இவர் இன்று காலை சங்கரன்கோவில் - ராஜபாளையம் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள டீக்கடையில் பால் ஊற்றிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி உள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது அவரது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காயமடைந்த மாடசாமி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாடசாமிக்கு ராம சீதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.
- வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் பகுதியில் அதிக அளவில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டி.எஸ்.பி. சுப்பையா உத்தரவின் பெயரில் டவுன் இன்ஸ்பெக்டர் பால் ஏசுதாசன் மேற்பார்வையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (30) என்பவர் வீட்டில் அனுமதியின்றி புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் நாகராஜன் வீட்டை சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் அனுமதி இல்லாமல் 200 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்தது தெரியவந்தது. பதுக்கி வைத்திருந்த 200 கிலோ புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.
இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். மேலும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை மடக்கி பிடித்த போலீசாரை டி.எஸ்.பி. சுப்பையா மற்றும் இன்ஸ்பெக்டர் பால் ஏசுதாசன் ஆகியோர் பாராட்டினர்.
- கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி மாடப்ப தேவரை அவரது மகன் செல்வராஜ் கல்லால் தாக்கி கொலை செய்தார்.
- இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கில் நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தீர்ப்பு கூறினார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் போலீஸ் சரகம் ஊத்தன்குளத்தை சேர்ந்தவர் மாடப்ப தேவர் (வயது 65). விவசாயி.
இவரது மகன் செல்வராஜ் (40). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனது தந்தையிடம் அடிக்கடி திருமணம் செய்து வைக்குமாறு கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி மாடப்ப தேவர் ஊர் அருகில் உள்ள தோட்டத்தில் மாடுகளை தொழுவத்தில் அடைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வராஜ் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு கல்லால் தாக்கி கொலை செய்தார்.
இச்சம்பவம் குறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கில் நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தீர்ப்பு கூறினார். அப்போது செல்வராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் கருணாநிதி ஆஜரானார்.
- யானைக்கு என்ன மாதிரியான உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது என பாகனிடம் கேட்டறிந்தனர்.
- வன பாதுகாப்பு படை வனச்சரகர் செந்தில்வேல்முருகன் தலைமையிலான வனத்துறையினர் யானையை பரிசோதித்து ஆய்வு செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயணர்-கோமதி அம்பாள் கோவிலில் உள்ள 28 வயதான கோமதி யானையின் எடை, உயரம் உட்பட யானையின் வன பாதுகாப்பு படை வனச்சரகர் செந்தில்வேல்முருகன் தலைமையிலான மகேந்திரன், இளவரசி, வனக்காப்பாளர்கள் உட்பட வனத்துறையினர் பரிசோதித்து ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து யானைக்கு என்ன மாதிரியான உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது. நடை பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறதா, நாள் ஒன்றுக்கு எத்தனை முறை குளிக்க வைக்கப்படுகிறது போன்றவைகளை யானைப்பாகனிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து இதே போல் சரியான முறையில் பராமரித்து வர தெரிவித்தனர்.