என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
    X
    விழப்புணர்வு கூட்டம் நடந்தகாட்சி.

    விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

    • வேளாண்மை உழவர் நலத்துறை திட்டங்கள் மற்றும் மானியங்கள் தொடர்பான விளக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது
    • பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொடர்பான பண்ணை பள்ளி ஈச்சந்தா பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெரியசாமிபுரம் கிராமத்தில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் அறிவழகன் அறிவுரையின்படி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

    பண்ணைப் பள்ளிக்கு துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஈச்சந்தா ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி கலந்து கொண்டார். பண்ணைப் பள்ளியின் தொடக்கத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரதீஷ் கமாலின் வரவேற்று பேசினார்.பின்பு துணை வேளாண்மை அலுவலர் வேளாண்மை உழவர் நலத்துறை திட்டங்கள் மற்றும் மானியங்கள் தொடர்பான விளக்கங்களை விவசாயிகளிடையே எடுத்துக் கூறினார்.

    மேலும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வேளாண்மை பயிற்றுனர் தூண்டில் காளை கோடை உழவு, மக்காச்சோளத்தில் விதை நேர்த்தி, களை நிர்வாகம், உர நிர்வாகம், பூச்சி மேலாண்மை படைப்புழு கட்டுப்பாடு குறித்த தொழில் நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். பண்ணைப்பள்ளி பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மெட்டாரேஸ்யம் எனும் பூஞ்சான மருந்து இலவசமாக கொடுக்கப்பட்டது. பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தன் செய்திருந்தார்.

    Next Story
    ×