என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Postman"

    • தன்னை பாஜககாரராக காட்டிக் கொள்கிறார் ஆளுநர்
    • அதிமுக - பாஜக கூட்டணியை 2 முறை தோற்கடித்துள்ளோம்

    "ஆளுநரின் அதிகாரம் என்பது ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே" என்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கே: கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு குறித்து உங்கள் பதில் என்ன?

    பதில்: ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுதான் சட்டமியற்றும் அதிகாரம் மிக்கது. நியமனப் பதவியான கவர்னர் பதவி என்பது ஒரு கவுரவப் பதவிதான். சட்டமன்றத்தின் அதிகாரத்தை முடக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பின் வாயிலாக தெளிவுபடுத்தி-மத்திய-மாநில உறவுகளில் அதற்குரிய அதிகாரம், ஒரு தபால்காரருக்குரியதுதான் என்பதைத் தொடர்ந்து தி.மு.க சொல்லி வருகிறது. அது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டி ருக்கிறது.

    கே: கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிலேயே தொடர வேண்டும் என்று நீங்கள் இன்னும் நினைக்கிறீர்களா?

    பதில்: அவருக்குரிய பதவிக்காலம் முடிந்தபிறகும் தமிழ்நாட்டில்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை தமிழுக்கு எதிராகவும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிராகவும், தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிராகவும் செயல்படும் ஆளுநர், பச்சையான பா.ஜ.க. காரராகவே வெளிப்படுத்திக் கொள்கிறார்.

    அவருடைய அத்தனை செயல்பாடுகளும் மக்களால் வெறுக்கப்படுவதால், அவர் பதவியில் இருக்கும்வரை பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளை இன்னும் அதிகமாக மேற்கொண்டு, தி.மு.க.வுக்கு மறைமுகமாக உதவி செய்வார்.

    என்று தெரிவித்தார்.

    • மேலநீலிதநல்லூர் மேலதெருவை சேர்ந்தவர் வள்ளிநாயகம் தபால்காராக பணிபுரிந்து வருகிறார்
    • பொது இடத்தில் அவதூறாக பேசி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் மேலதெருவை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (வயது46) இவர் மருக்காலங்குளத்தில் தபால்காராக பணிபுரிந்து வருகின்றார்.

    சம்பவத்தன்று மேலநீலிதநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் மகன் பாலமுருகன் (26) என்பவர் பொது இடத்தில் அவதூறாக பேசி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வள்ளிநாயகம் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் அவரை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பனவடலிசத்திரம் போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.



    • பாஸ்போர்ட் கொடுப்பதற்கு தபால்காரர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார்.
    • பாதிக்கப்பட்ட நபர் தபால்காரருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார்.

    உத்தரபிரதேசத்தில் ரூ.500 லஞ்சம் கொடுக்க மறுத்ததால், ஒருவரின் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை தபால்காரர் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒருவருக்கு பாஸ்போர்ட் தபாலில் வந்துள்ளது. ஆனால் பாஸ்போர்ட் கொடுப்பதற்கு தபால்காரர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் தபால்காரருக்கும் சம்பந்தப்பட்ட நபருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தபால்காரர் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை கிழித்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாதிக்கப்பட்ட நபர் தபால்காரருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    மேலும், தபால்காரர் ஒவ்வொரு தபால் கொடுப்பதற்கும் ரூ.100 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • அஞ்சல் துறையின் சீரான செயல்பாட்டிற்கு தேவைக்கேற்ப அதிவேக நெட்வொர்க்கை தடையின்றி வழங்க கோரிக்கை
    • நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு 3 நாட்களுக்குள் அனைத்து அஞ்சல் களும் சென்றடைவதை உறுதி செய்ய வலியுறுத்தல்

    நெல்லை:

    பாரதிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் நெல்லை கோட்ட மாநாடு இன்று காலை தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு நெல்லை கோட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    நெல்லை கோட்ட செயலாளர் மைக்கேல்ராஜ் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் தபால்காரர் உள்ளிட்ட அனைத்து பணி காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    அஞ்சல் துறையின் சீரான செயல்பாட்டிற்கு தேவைக்கேற்ப அதிவேக நெட்வொர்க்கை தடையின்றி வழங்க வேண்டும்.

    வாடிக்கையாளர்களின் முகவரியில் அனைத்து விதமான தகவல்களையும் பதிவு செய்வதற்கு ஏற்ப தபால்காரர்கள் அனைவருக்கும் கையடக்கக் கருவிகள் வழங்க வேண்டும்.

    நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு 3 நாட்களுக்குள் அனைத்து அஞ்சல் களும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் பாரதிய மஸ்தூர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டியன், மாவட்ட தலைவர் சங்கரசுப்பு மற்றும் நிர்வாகிகள் திருமலைசாமி, அசோக் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் கண்ணன், ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×