தபால்காரரை தாக்கிய வாலிபர் கைது

மேலநீலிதநல்லூர் மேலதெருவை சேர்ந்தவர் வள்ளிநாயகம் தபால்காராக பணிபுரிந்து வருகிறார்பொது இடத்தில் அவதூறாக பேசி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது
தபால்காரரை தாக்கிய வாலிபர் கைது
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் மேலதெருவை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (வயது46) இவர் மருக்காலங்குளத்தில் தபால்காராக பணிபுரிந்து வருகின்றார்.

சம்பவத்தன்று மேலநீலிதநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் மகன் பாலமுருகன் (26) என்பவர் பொது இடத்தில் அவதூறாக பேசி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வள்ளிநாயகம் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் அவரை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பனவடலிசத்திரம் போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com