என் மலர்
நீங்கள் தேடியது "lucknow"
- விமானம் தரையிறங்கும் போது சக்கரத்தில் புகை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- விமானத்தை விமானி பாதுகாப்பாக தரையிறக்கியதால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சவூதியில் இருந்து 250 பயணிகளுடன் லக்னோ வந்த விமானம் தரையிறங்கும் போது சக்கரத்தில் புகை மற்றும் தீப்பொறிகள் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹஜ் பயணிகளுடன் வந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தை விமானி பாதுகாப்பாக தரையிறக்கியதால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
முன்னதாக அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஊழல் விசாரணை நடத்திய அதிகாரியை பழிவாங்க ரெயில்வே முன்னாள் வீரர் திட்டம்.
- பீகாரில் இருந்து லக்னோ சென்று வில் அம்பால் தாக்குதல் நடத்தியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சிபிஐ அலுவலகம் முன் உதவி துணை-ஆய்வாளரை ரெயில்வே முன்னாள் ஊழியர் வில் அம்பால் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் உதவி துணை ஆய்வாளர் ஏ.எஸ்.ஐ. விரேந்திர சிங் (55) மார்பக்கத்தில் அம்பு பாய்ந்து காயம் அடைந்தார்.
இதன் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த தினேஷ் முர்மு (65) என்பவர் ரெயில்வேயில் கேங்மேனாக பணிபுரிந்தள்ளார். கடந்த 1993-ல் ரெயில்வேயில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்ததில் விரேந்திர சிங் ஒருவராக இருந்துள்ளார்.
ஊழல் தொடர்பான விசாரணை முடிவில் தினேஷ் முர்மு, வேலையை இழந்துள்ளார். இந்த நிலையில்தான் பழிக்குபழி வாங்கும் விதமாக தற்போது லக்னோவில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வெளியில் வில் அம்புகளை கொண்டு தாக்கல் செய்துள்ளார்.
தினேஷ் முர்மு கடந்த 2005ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரியை சந்திக்க டெல்லிக்கு சென்றார். அப்போது போலீசாரை தாக்கியதால் சிறைக்குச் சென்றார். 2015ஆம் அண்டு ஜான்பூர் ரெயில் நிலையத்தில் ஜிஆர்பி வீரரை தாக்கியதால் மூன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் விசாரணை நடத்திய அதிகாரியை தாக்கியுள்ளார்.
- பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி உள்பட 3 அணிகள் தகுதிபெற்றுவிட்டன.
- மீதமுள்ள ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதிபெற்றுவிட்டன. அதன்படி குஜராத் , பெங்களூரு , பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னாசாமி மைதானத்தில் வருகிற 23-ந் தேதி ஆர்சிபி- சன்ரைசர்ஸ் அணிகள் மோத இருந்தனர். ஆனால் பெங்களூருவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டத்தை தொடர்ந்து இந்த போட்டி லக்னோவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
- பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.
ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது. அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இப்போட்டியில் தோல்வி முடிந்ததன் மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பபை இழந்து லக்னோ வெளியேறியது.
இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் போட்டி போடுகின்றன.
- ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை வைத்திருப்பதாக மனு.
- மக்களவை உறுப்பினர் பதவி செல்லாது என அறிவிக்கக்கோரி மனுத்தாக்கல்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை வைத்துள்ளார். இதற்கான ஆவணங்கள் மற்றும் பிரிட்டிஷ் அரசின் சில இ-மெயில்கள் தன்னிடம் உள்ளது. இதனால் இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் ராகுல் காந்தி, இந்திய தேர்தல்களில் போட்டியிட தகுதியானவர் அல்ல. மக்களவை உறுப்பினர் பதவியை வகிக்க இயலாது என விக்னேஷ் ஷிஷிர் உத்தர பிரதேச மாநில அலகாபாத் உயர்நீதிமன்றம் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை வைத்திருப்பதாக கூறப்படுவது குறித்து அந்நாட்டு அரசாங்களத்திடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளோம் என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது "மனுதாரரின் புகாரைத் தீர்ப்பதற்கு மத்திய அரசால் எந்த கால அவகாசத்தையும் வழங்க முடியாது, இந்த மனுவை நிலுவையில் வைத்திருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை" என தெரிவித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், மனுதாரர் பிற மாற்று சட்ட தீர்வுகளை ஆராய்வதற்கு அனுமதி அளித்ததுள்ளது.
- பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடம் வகிக்கிறது.
- 'பவர்-பிளே' வரை தாக்குப்பிடித்து விட்டாலே பஞ்சாப் மெகா ஸ்கோரை குவித்து விடும்.
ஐ.பி.எல். தொடரின் 54-வது ஆட்டத்தில் தரம்சாலாவில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
இதனால், களத்தில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. இந்த ஆட்டத்தின் முடிவில், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களை குவித்தது.
இதன்மூலம், இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 237 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 91, ஸ்ரேயாஸ் ஐயர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர்.
- மனதளவில் பாதிப்பு அடைந்து ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.
- வீடியோ ஒன்றை பதிவு செய்து நெருங்கிய உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார்.
லக்னோ:
உத்திரப் பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்தவர் மோகித் யாதவ். இவரது மனைவி பிரியா. 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
மோகித் யாதவ் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். திருமணத்திற்கு பிறகு அவரது மனைவி கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயரில் மாற்றி எழுத வேண்டும் என அடிக்கடி தகராறு செய்து வந்தார். மனைவியின் குடும்பத்தினரும் சேர்ந்து சித்ரவதை செய்தனர்.
சொத்துக்களை மனைவியின் பெயரில் எழுதித் தராததால் மோகித் யாதவ் மீது போலீசில் வரதட்சணை கொடுமை புகார் செய்தனர்.
மனதளவில் பாதிப்பு அடைந்த மோகித் யாதவ் ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது நெருங்கிய உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:-
திருமணத்தின் போது மனைவியின் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. சொத்துக்களை மனைவி பெயருக்கு மாற்றித் தராததால் போலீசில் பொய் வழக்கு கொடுத்தனர்.
மனைவியுடன் சேர்ந்து அவரது குடும்பத்தினரும் என்னை சித்திரவதை செய்தனர். மனைவி அடிக்கடி என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனியார் பள்ளியில் மனைவிக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. இதனால் எனது மாமியார் கர்ப்பமாக இருந்த எனது மனைவியின் கருவை கலைத்து விட்டார். மேலும் எனது குடும்பத்தினர் மீது பொய் வழக்கு கொடுப்பதாக மிரட்டல் விடுத்தனர்.
தொல்லை தாங்க முடியாததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என வீடியோவில் கூறியிருந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மோகித் யாதவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றெடுத்தார்.
- பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது
உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது மருத்துவரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 ஆண்டுகளுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் ஷி மெடிக்கல் கேர் என்ற மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார். அதன்பின் பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சமீபத்தில் லக்னோ மருத்துவக் கல்லூரியில் சந்தியா எடுத்த எக்ஸ்ரேயில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. மார்ச் 26 ஆம் தேதி அவரது வயிற்றிலிருந்த கத்திரிக்கோலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
இதனையடுத்து தனது மனைவி சந்தியாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், 17 ஆண்டுகளாக தனது மனைவி வேதனைப்பட்டதற்கு மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வாலின் அலட்சியம் தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
- தோல்வியடைந்த லக்னோ அணியையும், நவீன் உல் ஹக்கையும் ரசிகர்கர் கிண்டல் செய்து வருகின்றனர்.
- ரசிகர்கள் மட்டுமின்றி ஸ்விகி வரை லக்னோ அணி வீரர்களை கிண்டல் செய்து டுவிட் செய்துள்ளது.
சென்னை:
ஐபிஎல் 2023 சீசன் வரும் 28-ந் தேதியுடன் முடியவடைய உள்ளது. இறுதி போட்டிக்கு முதல் அணியாக சென்னை தகுதி பெற்றது. இதனையடுத்து நாளை நடைபெறவுள்ள குவாலிபையர் 2-ல் மும்பை- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த சீசனில் அதிகமாக பேசப்படும் ஒரு விஷயாமாக மாம்பழம் உள்ளது. மாம்பழம் சீசன் கேள்விபட்டிருக்கோம். ஆனால் ஐபிஎல் தொடர்ல இது மாம்பழம் சீசனா மாறியிருக்கு என்று சொல்லலாம்.
இந்த மாம்பழல் சீசன் தொடங்க முக்கிய காரணமாக இருந்தவர், லக்னோ அண்யின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் ஆவர். அவர் பெங்களூரு அணிக்கு எதிராக மோதிய போது விராட் கோலியுடன் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய வீரர்களை இன்ஸ்டாகிராமில் விராட் கோலி பாராட்ட, இன்னொரு பக்கம் விராட் கோலி டக் அவுட்டானதை நவீன் உல் ஹக் மாம்பழங்களுடன் கொண்டாடினார். இது ரசிகர்களிடையே கோபத்தை உண்டாக்கியது. இதன் காரணமாக விராட் கோலி ரசிகர்கள், நவீன் உல் ஹக் எங்கு சென்றாலும் கோலி பெயரை சொல்லி கோஷம் எழுப்பினர்.
இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நவீன் உல் ஹக் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியில் மும்பை அணியிடம் தோல்வியடைந்த லக்னோ அணியையும், அந்த அணியின் நவீன் உல் ஹக்கையும் மாம்பழங்கள் மூலமாக ரசிகர்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமின்றி ஸ்விகி வரை லக்னோ அணி வீரர்களை கிண்டல் செய்து டுவிட் செய்துள்ளது. இந்த டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Guys tension mat lo, we have started restocking tissues in Lucknow ?
— Swiggy Instamart (@SwiggyInstamart) May 24, 2023
அதில் லக்னோ அணி வீரர்களே டென்சன் வேண்டாம். லக்னோவில் டிஸ்யூ பேப்பர் ரெடி பன்ன ஆரம்பித்து விட்டோம் என பதிவிட்டிருந்தனர்.
- 76-வது ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தனது வாழ்த்துகளை தெரிவித்தார்
- இராணுவ சேவையில் தியாகம் செய்த அனைவரையும் மூன்று சேவைத் தலைவர்கள் கௌரவிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி, இந்தியா தனது வீரம் மிக்க இந்திய இராணுவத்தை பெருமைப்படுத்தவும் ,நன்றி செலுத்தவும் இந்திய இராணுவ தினத்தை கொண்டாடுகிறது.
1949ல் ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றிய இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியான மார்ஷல் கே.எம் கரியப்பாவின் 76வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
மார்ஷல் கே எம் கரியப்பா ஜனவரி 15, 1949 அன்று பிரிட்டிஷ் தலைமை தளபதியான ஜெனரல் பிரான்சிஸ் புட்சருக்குப் பிறகு இந்திய இராணுவத்தின் தளபதியாக பொறுப்பேற்றார். அதனால் இந்த மறக்கமுடியாத நாளில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் அணிவகுப்பு நடைபெறும்.
இராணுவ சேவையில் தியாகம் செய்த அனைவரையும் மூன்று சேவைத் தலைவர்கள் கௌரவிக்கின்றனர். மேலும், தேசிய போர் நினைவிடத்தில் ராணுவ வீரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இவ்விழா உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விழா நடைபெறுகிறது.இன்று 76-வது ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஜெனரல் மனோஜ் பாண்டே, தேச சேவையில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
"இந்த இராணுவ தினமான 2024ல், இந்திய இராணுவத்தின் அனைத்து தரவரிசைகள், சிவில் ஊழியர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேச சேவையில் தங்கள் உயிரைக் கொடுத்த வீரார்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கிறோம். அவர்களின் தியாகம் எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.இந்திய இராணுவம் 2024 ஐ "தொழில்நுட்பத்தில் இணைந்து செயலாற்றும் ஆண்டாக" இருக்கும்.இது இராணுவத்தின் திறன் தொழில்நுட்பத்தின் மாற்றத்திற்க்கு இணைந்து செயல்படும் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய உணர்வில் இந்திய ராணுவத்துக்கு தனி இடம் உண்டு. தேசம் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதியில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்."ஜெய் ஹிந்த்" என்று தனது உரையை முடித்தார்.
மேலும் இராணுவ தினத்தை முன்னிட்டு, இந்திய இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது.
- 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி ஒரு தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது.
லக்னோ:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 26-வது லீக் சுற்று ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகிறது.
நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (ராஜஸ்தானுக்கு எதிராக) என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறித்த லக்னோ அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் வேட்கையில் உள்ளது.
டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது. லக்னோ ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழற்பந்து வீச்சின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- நிஷா திவாரி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
- இந்த சம்பவம் மே 15 மாலை 5:30 மணியளவில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் சாரதா நகர் பகுதியில் வசிக்கும் முதியவர் 2 நாய்க்குட்டியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த மனிதாபிமானமற்ற செயல் முதியவரின் பக்கத்து வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நிஷா திவாரி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில், "லக்னோ, சாரதா நகர் பகுதியில் வசிக்கும் ஸ்ரீவஸ்தவா என்ற முதியவர், மதியம் 2 நாய்க்குட்டிகளை அக்கம் பக்கத்தில் இருந்து எடுத்தார். பின்னர் அவர் அவற்றை வீட்டிற்குள் கொண்டு சென்றார். அங்கு நாய்குட்டிகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து, அவர் அவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து அப்புறப்படுத்தினார்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் மே 15 மாலை 5:30 மணியளவில் நடந்துள்ளது. லக்னோ போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






