search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife torture"

    • சந்த் பாஷாவிற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
    • சிறிது நாட்களாக சபிஹா வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்தவர் சந்த் பாஷா. இவர் பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்க்காவல் படை வீரராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி சபிஹா. இவர்களது திருமணம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

    மனைவிக்கு அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள் பிறந்ததால் சந்த் பாஷாவுக்கு மனைவி மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

    சந்த் பாஷா அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் என குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சபிஹாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்.

    இதனால் சபிஹா அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். மேலும் கணவர் குடும்பத்தினர் சித்ரவதை செய்வது குறித்து அவரது பெற்றோர் போலீசில் 3 முறை புகார் அளித்தனர்.

    போலீசார் 3 முறையும் இவரது குடும்பத்தாரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சந்த் பாஷா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களுக்கு ஆண் வாரிசு ஒன்று தேவை என்ற கட்டாயத்திற்கு வந்தனர். இதனால் சந்த் பாஷாவிற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    சபிஹாவை மொட்டை மாடியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று கைவிரல்களை உடைத்தனர். பின்னர் அந்த அறையிலேயே அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்தனர். சபிஹா கழிவறையில் தண்ணீரை குடித்து உயிர் பிழைத்து வந்தார்.

    சிறிது நாட்களாக சபிஹா வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சந்த் பாஷா வீட்டிற்கு சென்று சோதனை நடத்திய போது சபிஹாவை சிறிய அறையில் அடைத்து வைத்து கை விரல்களை உடைத்து உணவு கூட வழங்காமல் சித்ரவதை செய்தது தெரியவந்தது.

    மனைவியை சித்ரவதை செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து சந்த் பாஷா அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தாக்கி சித்ரவதை செய்த தச்சு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஜீவானந்தபுரம் எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன், தச்சு தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது30). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே புவனேஸ்வரியின் நடத்தையில் வெங்கடேசன் சந்தேகம் அடைந்தார். இதனால் தினமும் மதுகுடித்துவிட்டு புவனேஸ்வரியை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார்.

    அதுபோல நேற்று மதியம் வெங்கடேசன் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மீண்டும் இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் தேங்காய் திருவியால் மனைவியை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரி கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

    போடி அருகே காதல் மனைவியை சித்ரவதை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    போடி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சிலம்பரசி (வயது 29). இவரும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரும் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவையில் வசித்து வந்தனர். பெண் குழந்தை பிறந்ததால் சிலம்பரசி குடும்பத்தார் கணவன்-மனைவியை மீனாட்சிபுரத்துக்கு அழைத்து வந்து 25 பவுன் தங்க நகை, குழந்தைக்கு 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1½ லட்சம் பணம் கொடுத்து சிலம்பரசனுக்கு கடை வைத்து கொடுத்தனர்.

    கணவன்-மனைவி துரைராஜபுரத்தில் வசித்து வந்தனர். சிலம்பரசின் தங்கை சிவமணி திருமணத்துக்காக நகைகளை அடமானம் வைத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தற்போது மேலும் ரூ.2 லட்சம் கடனாக வாங்கி வருமாறு சிலம்பரசியை கணவர் வற்புறுத்தியுள்ளார்.

    இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே சிலம்பரசன் குடும்பத்தினர் சித்ரவதை செய்ய தொடங்கினர். இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சிலம்பரசி புகார் அளித்தார்.

    எஸ்.பி. உத்தரவின் பேரில் போடி அனைத்து மகளிர் போலீசார் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

    இதேபோல் கம்பம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சத்யபிரியா (27). இவருக்கும் மஞ்சள் குளத்தைச் சேர்ந்த சிவனேசன் (29) என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 20 பவுன் நகை, ரூ.3 லட்சம் மதிப்பிலான சீர் வரிசைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்கப்பட்டது.

    தற்போது சிவனேசன் மேலும் ரூ.4 லட்சம் வரதட்சணையாக வாங்கி வருமாறு சத்ய பிரியாவை கொடுமைபடுத்தியுள்ளார். இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி. உத்தரவின் பேரில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் சிவனேசன் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர் அடுத்த காரம்பாக்கத்தில் பணம் கேட்டு சித்ரவதை செய்ததால் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூரை அடுத்த காரம்பாக்கத்தை சேர்ந்தவர் அருண் (38). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சித்ரா (32).

    இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆரம்பத்தில் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். பின்னர் அருண் தினமும் இரவு குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் 3 மாதங்களுக்கு முன்பு சித்ரா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த அருண் மீண்டும் குடித்து விட்டு சித்ராவை துன்புறுத்தி உள்ளார். சொந்த ஆட்டோ வாங்குவதற்கு ரூ.50 ஆயிரம் வேண்டும். அதை தாய் வீட்டில் வாங்கி வா என்று கூறி மனைவியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி சித்ரா போனில் அவருடைய தாயிடம் சொல்லி கதறி அழுதுள்ளார். கணவரின் நடவடிக்கைகளால் மனம் உடைந்த சித்ரா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்ததும், கண்ணகிநகர் போலீசார் அங்கு சென்று சித்ராவின் உடலை மீட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விசாரித்த போலீசார் மனைவியை சித்ரவதை செய்ததாக கூறப்படும் ஆட்டோ டிரைவர் அருணை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
    ×