பென்னாகரம் அருகே மனைவியை சித்ரவதை செய்த கணவன் உள்பட 2 பேர் கைது

பென்னாகரம் அருகே முதல் மனைவியை சித்ரவதை செய்த கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைது
கைது
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள போடூர் காலனியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 29). இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நாகவள்ளி (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் மதன்குமாருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த அவரின் உறவினர் பெண்ணான கலைபிரியா (20) என்பவருக்கும் கடந்த சில மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து மதன்குமார் கலைபிரியா என்ற பெண்ணை இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார். இதனை தட்டிக்கேட்ட நாகவள்ளியை அடிக்கடி மதன்குமார் சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனை தாங்க முடியாத நாகவள்ளி பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் மதன்குமார் மற்றும் கலைப்பிரியா மீது புகார் செய்தார்.

இது குறித்து பென்னாகரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமார் மற்றும் கலைப் பிரியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com