என் மலர்
நீங்கள் தேடியது "Engineer suicide"
- ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ 2.50 லட்சம் கடன் வாங்கினார்.
- வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த லோன் ஆப் ஊழியர்கள் ரோஹித் குமாரை மிரட்ட தொடங்கினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பாபுல பாடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டன். இவரது மகன் ரோகித் குமார் (வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனது தந்தை வியாபாரத்திற்கு உதவியாக இருந்து வந்தார்.
ரோகித் குமார் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஆன்லைன் விளையாட்டில் பந்தயம் கட்டி விளையாடி வந்தார்.
இந்த நிலையில் ரோகித்குமார் ஆன்லைன் விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கி கடனை கட்டினார்.
மேலும் ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ 2.50 லட்சம் கடன் வாங்கினார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த லோன் ஆப் ஊழியர்கள் ரோஹித் குமாரை மிரட்ட தொடங்கினர்.
இதனால் விரத்தி அடைந்த ரோகித் குமார் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். ரோகித் குமாரை மீட்ட அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கன்னவரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அனுமன் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாச ராவ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சின்னதுரை தனது மனைவியுடன் வியாபாரம் தொடர்பாக திருப்பூருக்கு சென்று விட்டார்
- வீட்டின் அருகில் இருந்த ஒரு குடிசையில் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள வீரப்பம் பாளையம் பாறை கிணறு பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது 2-வது மகன் நீத்தீஷ்குமார் (22). இவர் சிவில் என்ஜினீயரிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று சின்னதுரை தனது மனைவியுடன் வியாபாரம் தொடர்பாக திருப்பூருக்கு சென்று விட்டார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த நீத்தீஷ்குமார் நான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டின் அருகில் இருந்த ஒரு குடிசையில் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
இது குறித்து அரச்சலுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 12-ந்தேதி சங்கர் தனது பெற்றோரிடம் வேலை விஷயமாக வெளியூருக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார்.
- சங்கர் வெளியூருக்கு செல்லாமல் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.
கோவை:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் ஆர்.எல்.வி. நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சங்கர் (வயது 29). என்ஜினீயர்.
இவர் ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்தார். ஆரம்பத்தில் இதன் மூலமாக அவருக்கு வருமானம் கிடைத்தது. நாளடைவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானார். அதன் மூலம் தான் சேர்த்து வைத்து இருந்த பணத்தை இழந்தார்.
எப்படியாவது சூதாட்டத்தில் விட்ட பணத்தை திருப்பி வென்றுவிடலாம் என்ற முயற்சியில் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி ஆன்லைனில் சூதாடினார். கடன் வாங்கி விளையாடிய பணத்தையும் சங்கர் இழந்தார். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
கடந்த 12-ந்தேதி சங்கர் தனது பெற்றோரிடம் வேலை விஷயமாக வெளியூருக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் அவர் வெளியூருக்கு செல்லாமல் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.
அறையில் இருந்த சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து ஓட்டல் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அறையில் இருந்து சங்கர் தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் ஆன்லைனில் விளையாடுவதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தேன். ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. நண்பர்கள் என்னை மன்னிக்கவும்.
இவ்வாறு அதில் எழுதி இருந்தார்.
ஆனால் அவர் ஆன்லைனில் எவ்வளவு பணத்தை இழந்தார் என்பதையும் நண்பர்களிடம் எவ்வளவு கடன் வாங்கினார் என்பதையும் குறிப்பிடவில்லை. பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சை மேலவீதி சின்ன பையான் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவரது மகன் கோபிநாத் (வயது30). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு தற்போது வீட்டிலேயே புரோகிராம் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கோபிநாத் யாரிடமும் சரிவர பேசாமல் சோகமாகவே தனிமையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) வாங்கி குடித்துவிட்டு வீட்டிலேயே மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோபிநாத் இறந்துவிட்டார்.
இதுகுறித்து அவரது தந்தை ராஜேஷ்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து என்ன காரணத்துக்காக கோபிநாத் தற்கொலை செய்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அம்மாணி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 45) மரைன் என்ஜினீயர். இவருடைய மனைவி தேவி ரம்யா. இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணம் முடிந்து ஓராண்டிலேயே கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதனால் பல முறை யுவராஜ் மனைவியுடன் சேர்ந்து வாழ முயற்சித்து பலன் அளிக்காததால் சேலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரித்தபோது உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் திருமணம் ஆகி 7 ஆண்டு ஆகியும் எனது மனைவி என்னை புரிந்து கொள்ளவில்லை. இதனால் நான் வாழ்ந்தும் பலன் இல்லாததால் என் உயிரை மாய்க்கிறேன் என்று உருக்கமாக எழுதியிருந்தார். அவரது உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் கண்ணீர் மல்க திரண்டிருந்தனர்.
பண்ருட்டி, டிச.6-
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கரும்பூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் பார்த்தீபன்(வயது 26). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலைக்காக காத்திருந்தார்.
இந்தநிலையில் பார்த் தீபனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் தீவிர மாக காதலித்து வந்தனர்.
இந்தவிவரம் மாணவியின் பெற் றோருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மாணவிக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த விவரம் பார்த் தீபனுக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். நேற்று இரவு அவர் திடீரென்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பார்த்தீபன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புதுப் பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். * * * பார்த்தீபன்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த அந்த பகுதியினர் ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கும், சூரமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய போது கிணற்றில் பிணமாக மிதந்தது மாயமான சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டியைச் சேர்ந்த சிவாஜி என்பவரின் மூத்த மகன் செல்லதுரை (வயது26) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது வெளியான சோக தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்த விவரம் வருமாறு:-
பி.இ. என்ஜினீயரிங் படித்துள்ள செல்லதுரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அதே நிறுவனத்தில் சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த தீபா என்ற பெண்ணும் பணிபுரிந்தார்.
அப்போது இருவரும் அடிக்கடி சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்தும், செல்போன் மூலம் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த 23-ந் தேதி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். எதிர்கால கணவுகளுடன் கோட்டகவுண்டம்பட்டி பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு தீபாவுடன், செல்லதுரை சென்றார்.
செல்லத்துரையின் வீட்டில் ஒரு நாள் தங்கிய அவர் அங்கு கழிவறை இல்லாததை அறிந்தார். உடனே ஓட்டலில் அறை எடுத்து தங்கலாம் என தீபா செல்லதுரையிடம் கூறினார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். கழிவறை இல்லாத வீட்டில் என்னால் வாழ முடியாது எனக் கூறிய தீபா சேலத்திற்கு புறப்பட்டார்.

அப்போதும் தான் அழைத்தால் வருவார் என்று நம்பிக்கையில் செல்லதுரை சேலம் வந்தார். தீபாவின் வீட்டிற்கு சென்ற அவர் தனது காதல் மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் தீபா வர மறுத்தார். அப்போதும் செல்லதுரை விரைவில் கழிவறை கட்டுவதாக கூறி உள்ளார். அதனை நம்பாத தீபா வர முடியாது என திட்டவட்டமாக கூறினார்.
இதனால் மேலும் மனமுடைந்த செல்லதுரை சோகத்துடன் தனியாக வீடு திரும்பினார். காதல் மனைவி வர மறுத்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வாழ்வதை விட சாவதே மேல் என்று முடிவு செய்தார்.
அதன்படி திருமணமான 3-வது நாளிலேயே கோட்டகவுண்டம்பட்டி அருகேயுள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
மேலும் செல்லதுரையின் உறவினர்கள் தீபாவிடம் உனக்கு எந்த ஊர் என்று கேட்ட போது சேலம், திருப்பூர் என்று அவர் மாறி மாறி கூறியுள்ளார். அதனால் பள்ளி சான்றிதழ்களை எடுத்து வருமாறும், பதிவு திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் உறவினர்கள் கூறி உள்ளனர்.
அப்போது தனக்கு தாய், தந்தை இல்லை என்றும், மாமா வீட்டில் தங்கி இருந்ததாகவும், அவரிடம் சொல்லி விட்டதாகவும் கூறி உள்ளார். 23-ந் தேதி திருமணம் நடந்த நிலையில் 24-ந் தேதியே வீட்டில் இருந்து கழிவறை இல்லை என்று கூறி வருத்தப்பட்ட தீபா வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சேலத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், செல்லதுரையின் அப்பா மற்றும் உறவினர்கள் திட்டியதாக கூறப்படுகிறது.
கழிவறை இல்லாததால் காதல் திருமணம் செய்த மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த வாலிபர் திருமணமான 3-வது நாளில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சூரமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது செல்லதுரை வீட்டில், அவர் எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. இந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. தீபாவை தொந்தரவு செய்யாதீர்கள் என்பது உள்பட பல்வேறு உருக்கமான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரண நடத்தி வருகிறார்கள். தீபா தற்போது எங்கு உள்ளார் என்பது மர்மமாக உள்ளது.
இதற்கிடையே செல்ல துரையின் உறவினர்கள் கூறுகையில், செல்லதுரையின் சாவுக்கு காரணமான தீபாவை கைது செய்ய வேண்டும், அதுவரை செல்லதுரையின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறினர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடலை வாங்க சம்மதித்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குச்செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சேஷாத்திரி (வயது 22). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார்.
புதுவை மேட்டுக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சேஷாத்திரி அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு 7 மணி அளவில் பணிமுடிந்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் பெற்றோர் யாரும் இல்லை. பின்பு தனது அறையில் சேஷாத்திரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து புதுபேட்டை போலீசில் புகார் செய்யப்பட் டது. இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய சேஷாத்திரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பின்பு தற்கொலை செய்து கொண்ட சேஷாத்திரியின் அறையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஆவி மற்றும் பேய்கள் பற்றிய கதை புத்தகங்கள் ஏராளமாக இருந்தன. அவற்றை போலீசசர் கைப்பற்றினர்.
மேலும் சேஷாத்திரி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தனர். அதில் புளூவேல் (நீலதிமிங்கல விளையாட்டு) விளையாடியதற்கான அடையாளங்கள் தெரிந்தது. புளூவேல்கேம் விளையாடிய சேஷாத்திரி மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
புளூவேல்கேம் விளையாடிய என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேஷாத்திரிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை லட்சுமிநகர் சுந்தர்ராஜன் வீதியை சேர்ந்தவர் முகில்வாணன் (வயது41). சிவில் என்ஜினீயரான இவர் காண்டிராக்டு எடுத்து கட்டிடங்களை கட்டி கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
இவருக்கு லதா என்ற மனைவியும் 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
மகளுடன் மனைவி பிரிந்து சென்றது முதல் முகில்வாணன் மனவருத்தத்தில் இருந்து வந்தார். மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து வந்தார். ஆனாலும் மனைவி-மகள் பிரிந்து சென்றதை ஏற்றுக்கொள்ள முடியாமல் முகில்வாணன் தினமும் தவியாய் தவித்து வந்தார். அவருக்கு அவரது தாய் ரத்தினபாய் ஆறுதல் கூறி சமாதனம் செய்து வந்தார்.
இந்த நிலையில் மனைவி-மற்றும் மகள் பிரிந்து சென்றதில் இருந்து சோகத்தில் இருந்து வந்த முகில்வாணன் தற்கொலை செய்து கொள்ள முடிவுக்கு வந்தார். நேற்று மதியம் அவரது தாய் வீட்டில் சமையல் வேளையில் ஈடுபட்டு இருந்த நிலையில் முகில்வாணன் வீட்டின் அறைக்கதவில் உள்ள இரும்பு கம்பியில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ் பெக்டர் சிவராம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை சீரநாயக்கன் பாளையம் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் ஸ்ரீஹரி கிருஷ்ணன் (வயது22). என்ஜினீயர். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் குடும்பத்தினர் வீடு திரும்பிய போது ஸ்ரீ ஹரி கிருஷ்ணன் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
ஸ்ரீ ஹரி கிருஷ்ணன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், காதல் தோல்வி அடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில மாதங்களாக மனஉளைச்சலுடன் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவரது அறையில் இருந்து அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், எனக்கு வாழ பிடிக்காததால் தற்கொலை செய்து கொள்கிறேன், என்னை மன்னித்து விடுங்கள் என எழுதி இருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.