என் மலர்

    செய்திகள்

    காதலிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததால் என்ஜினீயர் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    காதலிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததால் என்ஜினீயர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காதலிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததால் என்ஜினீயர் வி‌ஷம் குடித்து தற்கொலை பண்ருட்டி அருகே பரிதாபம்

    பண்ருட்டி, டிச.6-

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கரும்பூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் பார்த்தீபன்(வயது 26). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலைக்காக காத்திருந்தார்.

    இந்தநிலையில் பார்த் தீபனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் தீவிர மாக காதலித்து வந்தனர்.

    இந்தவிவரம் மாணவியின் பெற் றோருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மாணவிக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

    இந்த விவரம் பார்த் தீபனுக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். நேற்று இரவு அவர் திடீரென்று வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பார்த்தீபன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து புதுப் பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். * * * பார்த்தீபன்

    Next Story
    ×