என் மலர்

  நீங்கள் தேடியது "Salem Suicide"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சுல்தானா மற்றும் சம்சு ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து இறந்தனர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.
  • வறுமையால் தாய்-மகள் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  சேலம்:

  சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு முதல் கிழக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது அப்பாஸ், இவரது மனைவி சுல்தானா (வயது 45). இவர்களுக்கு சம்சு ( 22), ஜாமியா( 21 ) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

  மகள்களுக்கு 5 வயதாக இருக்கும் போது முகமது அப்பாஸ் சுல்தானாவை பிரிந்து சென்று விட்டார். இதனால் வறுமையில் தவித்த சுல்தானா கூலி வேலைக்கு சென்று பிள்ளைகளை வளர்த்து வந்தார். மேலும் கடுமையான வறுமையால் குடும்பம் நடத்தவே சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

  அதன்படி கடந்த 9-ந்தேதி இளைய மகள் சம்சுவும், சுல்தானாவும் பாலில் விஷம் கலந்து குடித்தனர். இதனால் வீட்டில் மயங்கி கிடந்த அவர்களை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

  2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சுல்தானா மற்றும் சம்சு ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து இறந்தனர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.

  இதுபற்றி அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணை நடத்திய போது கணவர் பிரிந்து சென்ற நிலையில் சுல்தானா வறுமையில் வாடிய நிலையில் திருமண வயது ஆகி விட்டதே, அவர்களுக்கு எப்படி திருமணம் செய்து வைப்பது என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதும், இதில் ஒரு மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் அந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

  மற்றொரு மகளான ஜாமியா வீட்டில் இல்லாததால் அவர் தப்பினார் .இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்த தாய்-மகள் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வறுமையால் தாய்-மகள் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் வனத்துறை அதிகாரி மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சேலம்:

  சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி சந்தியூர் முதல் வீதியை சேர்ந்தவர் குமார். வனத்துறை பார்வையாளராக உள்ளார். இவர் தற்போது வீராணத்தை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள வனத்துறை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

  இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஐஸ்வர்யா அடிக்கடி டி.வி. பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் கண்டித்தார். நேற்றும் ஐஸ்வர்யா டி.வி. பார்த்ததால் அதை அவரது தாய் ராணி கண்டித்தார். பின்னர் ராணி கடைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய போது தூக்கில் தொங்கிய நிலையில் ஐஸ்வர்யா உயிருக்கு போராடினார்.

  இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த ராணி கதறினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஐஸ்வர்யாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால் ராணி மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.

  தகவல் அறிந்த குமாரும் அங்கு விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறினார். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. தகவல் அறிந்த வீராணம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வீராணம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்து உள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
  சேலம்:

  சென்னை, சூளமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 60). இவரது மனைவி அனுராதா (50). இவர்களுடைய மகள்கள் ஆர்த்தி (22), ஆஷிகா(20).

  இவர்கள் 4 பேரும் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து நேற்று இரவு தங்கியிருந்தனர்.

  இன்று காலை அந்த அறை கதவு திறக்கப்படவில்லை. உள்பக்கமாக பூட்டியிருந்தது. அறையில் தங்கியிருந்த ஆர்த்தி வரவேற்பு அறையில் இருக்கும் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு கதவை திறந்துவிடுமாறு தகவல் தெரிவித்தார்.

  இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள், விரைந்து சென்று கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு விஜயகுமார், அனுராதா, இளைமகள் ஆஷிகா ஆகியோர் பிணமாக கிடந்தனர்.

  மூத்த மகள் ஆர்த்தி மட்டும் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த சம்பவம் குறித்து புதிய பஸ் நிலையத்தில் இருக்கும் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  உடனடியாக இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு வந்து, பிணமாக கிடந்த விஜயகுமார், அனுராதா, ஆஷிகா ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இதனை தொடர்ந்து அறை முழுவதும் சோதனை செய்யப்பட்டது. அப்போது ஒரு குளிர்பான பாட்டில் கிடந்தது. அந்த குளிர்பான பாட்டிலை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் வி‌ஷம் கலந்து 3 பேரும் குடித்து தற்கொலை செய்து இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

  தற்கொலை செய்து கொள்ளும் முன்பு அறையில் அவர்கள் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளனர். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், அந்த கடிதத்தில் கடன் தொல்லையில் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதி இருக்கிறார்கள் என தெரிவித்தனர். மேற்கொண்டு கடிதத்தில் உள்ள தகவலை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

  ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்கள் உறவினர்கள் மத்த்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  கொண்டலாம்பட்டி:

  சேலம் மாவட்டம் பூலாவாரியை அடுத்த ஆத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது43). ஆம்னி பஸ் டிரைவர். இவரது மனைவி சாந்தி (35).

  இவர்களது மகள் ரம்யாலோஷினி (17). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகன் தீனதயாளன் (17) பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்றிரவு தீனதயாளன் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு தூங்க சென்றார்.

  இன்று காலை 7 மணியளவில் தீனதயாளன் மீண்டும் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு பூட்டி கிடந்ததை பார்த்த அவர் வீட்டு கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.

  இதனால் சந்தேகம் அடைந்த அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் வந்து தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படாததால் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் கடப்பாறை உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

  அப்போது ராஜ்குமார் சேலையிலும், சாந்தி மற்றும் ரம்யாலோஷினி ஆகியோர் நைலான் கயிற்றிலும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுது புரண்டனர். இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

  இதற்கிடையே தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த 3 பேரின் உடலையும் மீட்ட போலீசார் பிரதே பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் ஏன்? தற்கொலை செய்தனர் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது.

  அவர்கள் தற்கொலைக்கான காரணம் என்ன? கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்தனரா? அல்லது ஏதாவது மிரட்டல் காரணமா? தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் திருமணமான 4 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.
  சேலம்:

  சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது26). சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு ஐ.டி.கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

  தாரமங்கலத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 26). அழகு கலை படித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அம்மாப்பேட்டை காமராஜர் காலனி பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தற்போது வசித்து வந்தனர்.

  இந்த நிலையில் நேற்று அந்த அப்பார்ட்மெண்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ரஞ்சிதா இறந்து கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதியினர் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

  அப்போது ரஞ்சிதா 3 மாத கர்ப்பிணியாக இருந்ததும், சில நாட்களுக்கு முன்பு அபார்‌ஷன் ஆனதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த ரஞ்சிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

  பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். திருமணம் ஆகி 4 மாதமே ஆவதால் அருண்குமார் மற்றும் ரஞ்சிதா உறவினர்களிடமும் அந்த பகுதியிலும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துகிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் அருகே மதுக்குடிக்க பணம் தர மறுத்த தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  சேலம்:

  சேலம் திருவாக்கவுண்டனூர், மேத்தாநகரை சேர்ந்தவர் ராஜ சேகர். இவரது மகன் திருக்குமரன் (வயது 23). எலக்ட்ரீசியன்.

  இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று திருக்குமரன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தந்தை ராஜசேகரிடம் தான் மேலும் மது குடிக்க வேண்டும் பணத்தை கொடுக்குமாறு கூறினார். அதற்கு அவர் தன்னிடம் பணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றார்.

  இதனால் கோபம் அடைந்த திருக்குமரன் பணத்தை வீட்டில் ஒளித்து வைத்து விட்டு பணம் இல்லை என்கிறாயா? எனக்கூறி தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் விரக்தி அடைந்த திருக்குமரன் திடீரென வி‌ஷத்தை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை திருவாக்கவுண்டனூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

  பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு நேற்று இரவு திருக்குமரன் சிகிச்சை பலன்அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது தெரிய வந்தது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 54 வயது ஆசிரியரை திருமணம் செய்த 19 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  வாழப்பாடி:

  சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் மதுரை வீரன். கூலி தொழிலாளி. இவரது மகள் காயத்ரி (வயது 19).

  ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த காயத்ரி 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு மேற்கொண்டு படிக்க வசதியில்லாததால் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.

  இவரை நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் வாழப்பாடியை அடுத்த பழனியாபுரம் காலனி கிராமத்தை சேர்ந்த துரைசாமி (54) என்பவர் கடந்த 1½ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

  நேற்று காலை பழனியாபுரத்தில் உள்ள கணவர் துரைசாமி வீட்டில் காய்த்ரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  மகள் தற்கொலையால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் வசந்தி வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  காயத்ரிக்கு திருமணம் ஆகி 1½ வருடமே ஆவதால் வாழப்பாடி கோட்டாட்சியர் செழியன், டி.எஸ்.பி. சூர்யமூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இது பற்றி வாழப்பாடி போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

  18 வயது நிறைவடைவதற்கு முன்பாக காயத்ரியை, ஆசிரியர் துரைசாமி திருமணம் செய்து கொண்டுள்ளார். தன்னைவிட வயது அதிகமானவர் என்பதை தெரிந்தும் ஆசிரியருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்களே என நினைத்து காயத்ரி மனவருத்தம் அடைந்ததாக தெரிகிறது. இதை வெளியே சொல்லி அவர் அழுது புலம்பி உள்ளார். ஊரில் உள்ளவர்களும் காயத்ரியை வயது அதிகமான நபருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டீர்களே? அந்த பெண் எவ்வளவு மன கஷ்டப்படுவார் என கூறி பெற்றோரை சத்தம் போட்டனர்.

  இந்த நிலையில் காயத்ரியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் சிலர், வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்து கொண்டு உள்ளாயே என சொல்லி கேலி, கிண்டல் செய்துள்ளதாக தெரிகிறது.

  இதனால் அவர் மேலும் மனம் உடைந்தார். இதை அவர் வெளியே சொல்லாமல் மனதிற்குள்ளே வைத்து குமுறி, குமுறி அழுதுள்ளார்.

  திருமணத்திற்கு பிறகு காயத்ரியின் முகத்தில் மகிழ்ச்சியில்லை. ஊருக்கு வரும்போதெல்லாம் சோகத்துடன் இருப்பார். பெற்றோர் அவருக்கு ஆறுதல் சொல்லி கணவருடன் அனுப்பி வைத்து வந்தனர்.

  கடந்த 1½ ஆண்டுகளாக ஆசிரியருடன் வாழ்க்கையை நடத்தி வந்த அவர், அதற்கு மேல் வாழ்க்கையை நடத்த விரும்பவில்லை. உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று வீட்டில் காயத்ரி தூக்குப் போட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

  இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  இந்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் மனைவி புரிந்து கொள்ளாத மனவேதனையில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  சேலம்:

  சேலம் அம்மாணி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 45) மரைன் என்ஜினீயர். இவருடைய மனைவி தேவி ரம்யா. இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணம் முடிந்து ஓராண்டிலேயே கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதனால் பல முறை யுவராஜ் மனைவியுடன் சேர்ந்து வாழ முயற்சித்து பலன் அளிக்காததால் சேலத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரித்தபோது உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் திருமணம் ஆகி 7 ஆண்டு ஆகியும் எனது மனைவி என்னை புரிந்து கொள்ளவில்லை. இதனால் நான் வாழ்ந்தும் பலன் இல்லாததால் என் உயிரை மாய்க்கிறேன் என்று உருக்கமாக எழுதியிருந்தார். அவரது உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் கண்ணீர் மல்க திரண்டிருந்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  சேலம்:

  சேலம், சூரமங்கலம் பகுதியில் உள்ள முல்லை நகர், ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 46). ஆந்திரா வங்கி ஊழியர். இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு 1 மகள் உள்ளார். இவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

  சதீஸ்குமார், சென்னையில் இருக்கும் கனரா வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வரும் புவனா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதில் அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் சென்னையில் கல்வி பயின்று வருகிறார்கள்.

  சதீஸ்குமாருக்கும், புவனாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் புவனா பெற்றோர் வீட்டில் தங்கியபடி சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

  சதீஸ்குமார் தனது வீட்டுக்கு குடும்பம் நடத்த வருமாறு புவனாவை அழைத்து பார்த்தார். ஆனால் புவனா கணவருடன் செல்ல மறுத்து விட்டார். இருவரும் கடந்த 1½ வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

  இந்த நிலையில் ராஜாஜி நகரில் உள்ள தனது வீட்டில் சதீஸ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலையில் இதைக்கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஸ்குமார் தற்கொலை செய்து கொண்டதில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் அருகே கணவர் செல்போனை பிடுங்கியதால் 3 குழந்தைகளை கொன்று பெண் உயிரை மாய்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  பனமரத்துப்பட்டி:

  சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டி மன்னார்காடு கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 37). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி ஜெயா (26), இவர்களுக்கு சுமித்ராஸ்ரீ (7), ஷாலினி (3), வெற்றிவேல் என்ற 11 மாத குழந்தையும் இருந்தது.

  கடந்த 26-ந்தேதி வீட்டில் இருந்த ஜெயா மற்றும் அவரது 3 குழந்தைகளும் மாயமானது இது குறித்து லெட்சுமணன் மல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

  இந்தநிலையில் நேற்று கொழிஞ்சம்பட்டி மெயின்ரோட்டில் உள்ள ஒரு கிணற்றில் ஜெயா மற்றும் அவரது 3 குழந்தைகளும் பிணமாக கிடந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் செவ்வாய்ப்பேட்டை போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது அதன் விவரம் வருமாறு:-

  கடந்த சில மாதங்களாக ஜெயா செல்போனில் பல மணி நேரம் வாலிபர் ஒருவரிடம் பேசி வந்தார். இதனை அறிந்த லெட்சுமணன் கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

  ஆனாலும் ஜெயா விடிய விடிய அந்த வாலிபரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் லெட்சுமணன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜெயாவிடம் இருந்த செல்போனை பிடுங்கி மறைத்து வைத்தார்.

  இதனால் மனவேதனை அடைந்த ஜெயா அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சென்று இரவு நேரங்களில் செல்போனை கேட்டார். ஆனால் அவர்கள் ஏற்கனவே லெட்சுமணன் செல்போனை பிடுங்கி வைத்ததை அறிந்து கொடுக்க மறுத்தனர்.

  இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயா குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 26-ந் தேதி காலை வீட்டில் இருந்து குழந்தைகளை அழைத்து சென்ற ஜெயா குழந்தைகளை முதலில் கிணற்றில் தள்ளியும், பின்னர் தானும் கிணற்றில் குதித்தும் தற்கொலை செய்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

  இதையடுத்து ஜெயா அடிக்கடி பேசிய அந்த வாலிபர் யார் ? என்பது குறித்து அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  ஜெயாவுக்கு முகத்தில் தாக்கிய வெள்ளை நோய் சமீப காலமாக அவரது உடல் முழுவதும் பரவியதாகவும், இதனால் மனம் உடைந்த ஜெயா குழந்தைகளை கொன்று தற்கொலை செய்ததாகவும் ஜெயாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.

  இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெயா மற்றும் அவரது குழந்தைகள் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. #Tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் 3 வயது மகனை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சேலம்:

  சேலம் மாசிநாயக்கன்பட்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). இவரது மனைவி பிரேமா (22).

  4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இவர்களுக்கு அஜய் (3) என்ற மகன் இருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கண்ணன் தான் குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்த தோட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.

  இதனால் பிரேமா தனது மாமியார் மாரியம்மாள் வீட்டின் அருகே உள்ள ஒரு குடிசை வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள நூல் மில்லிலும் வேலைக்கு சென்று வந்தார்.

  இந்த நிலையில் நேற்றிரவு பிரேமா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது 3 வயது மகன் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தான். இதை பார்த்த பிரேமாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறினர்.

  தகவல் அறிந்த துணை கமி‌ஷனர் தங்கதுரை மற்றும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதற்கிடையே பிரேமாவின் தந்தை சின்னத்தம்பி, தாய் சின்ன பொண்ணு மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். அவர்கள் தங்களது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.

  மேலும் கண்ணன் கிணற்றில் தவறி விழுந்து இறந்த தோட்டத்தின் உரிமையாளர் கொடுத்த ரூ.6 லட்சத்தை பிரேமாவும், அவரது மாமியார் மாரியம்மாளும் பிரித்து கொண்டனர்.

  தற்போது பிரேமாவிடம் இருந்த பணத்தை கேட்டு மாரியம்மாள் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் அதனால் தனது மகனை கொன்று பிரேமா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் புகார் கூறினார்.

  இதையடுத்து மாமியார் மாரியம்மாள் மற்றும் உறவினர்களிடம் இன்று போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். விசாரணையில் பிரேமா கணவர் இறந்த சோகத்தில் மகனை கொன்று தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo