என் மலர்

  நீங்கள் தேடியது "bank employee suicide"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் அழகாபுரம் காட்டூர் பகுதியில் வீடு எடுத்து தனியாக தங்கியிருந்த அனிதாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
  • 30 வயதாகியும் திருமணமாகவில்லையே என்ற விரக்தியில் இருந்த அனிதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

  சேலம்:

  தருமபுரி நகர பகுதிக்குட்பட்ட குமாரசாமி பேட்டையை சேர்ந்தவர் அனிதா (வயது 30). இவர் சேலம் அம்மாப்பேட்டை ஸ்டேட் பாங்கியில் கிளர்க்காக வேலை பார்த்து வந்தார்.

  இந்த நிலையில் சேலம் அழகாபுரம் காட்டூர் பகுதியில் வீடு எடுத்து தனியாக தங்கியிருந்த அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 30 வயதாகியும் திருமணமாகவில்லையே என்ற விரக்தியில் இருந்த அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

  உடனே பதறியபடி அங்கிருந்து ஓடி வந்த உறவினர்கள் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனிதாவை சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அனிதா இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீர்காழி அருகே கர்ப்பிணி மனைவியை தாக்கிய வேதனையில் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்டார்.
  சீர்காழி:

  திருவாரூர் மாவட்டம் குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 30). தனியார் வங்கி ஊழியர். இவருடைய மனைவி சூர்யா (29).

  இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது கர்ப்பிணியாக உள்ள சூர்யா, சீர்காழி அருகே நிம்மேலி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி உள்ளார்.

  அவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார் சென்றார். குடிபோதையில் சென்ற ஜெயக்குமார், தனது மனைவி சூர்யாவிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

  இதில் பலத்த காயம் அடைந்த சூர்யா, சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடிபோதையில் மனைவியை தாக்கி விட்டோமே என்று மனம் உடைந்த வங்கி ஊழியர் ஜெயக்குமார், வைத்தீஸ்வரன்கோவிலில் ஒரு ஓட்டலின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் நவநீதன் கொடுத்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் ஒருதலை காதல் விவகாரத்தில் வங்கி ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  கொண்டலாம்பட்டி:

  சேலம், ஜாகீர்ரெட்டிப்பட்டி, ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் கோபால் (வயது 22). இவர் 5 -ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

  இந்த நிலையில் கோபால் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்தார்.

  மேலும் தனது காதலை அந்த பெண்ணிடம் கூறியதாக தெரிகிறது. அதற்கு அந்த பெண் தனக்கு படிப்புத் தான் முக்கியம். நான் யாரையும் காதலிக்கமாட்டேன் என்று தெரிவித்தார். இருப்பினும் கோபால் தொடர்ந்து அந்த பெண்ணிடம் காதலை ஏற்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அந்த பெண் காதலை ஏற்க மறுத்து விட்டார்.

  இதனால் விரக்தி அடைந்த கோபால் வி‌ஷத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

  ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கோபாலை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

  இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  சேலம்:

  சேலம், சூரமங்கலம் பகுதியில் உள்ள முல்லை நகர், ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 46). ஆந்திரா வங்கி ஊழியர். இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு 1 மகள் உள்ளார். இவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

  சதீஸ்குமார், சென்னையில் இருக்கும் கனரா வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வரும் புவனா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதில் அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் சென்னையில் கல்வி பயின்று வருகிறார்கள்.

  சதீஸ்குமாருக்கும், புவனாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் புவனா பெற்றோர் வீட்டில் தங்கியபடி சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

  சதீஸ்குமார் தனது வீட்டுக்கு குடும்பம் நடத்த வருமாறு புவனாவை அழைத்து பார்த்தார். ஆனால் புவனா கணவருடன் செல்ல மறுத்து விட்டார். இருவரும் கடந்த 1½ வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

  இந்த நிலையில் ராஜாஜி நகரில் உள்ள தனது வீட்டில் சதீஸ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலையில் இதைக்கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஸ்குமார் தற்கொலை செய்து கொண்டதில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
  ×