என் மலர்

    செய்திகள்

    சேலத்தில் மனைவி பிரிந்து சென்றதால் வங்கி ஊழியர் தற்கொலை
    X

    சேலத்தில் மனைவி பிரிந்து சென்றதால் வங்கி ஊழியர் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலத்தில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சேலம்:

    சேலம், சூரமங்கலம் பகுதியில் உள்ள முல்லை நகர், ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 46). ஆந்திரா வங்கி ஊழியர். இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு 1 மகள் உள்ளார். இவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சதீஸ்குமார், சென்னையில் இருக்கும் கனரா வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வரும் புவனா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதில் அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் சென்னையில் கல்வி பயின்று வருகிறார்கள்.

    சதீஸ்குமாருக்கும், புவனாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் புவனா பெற்றோர் வீட்டில் தங்கியபடி சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

    சதீஸ்குமார் தனது வீட்டுக்கு குடும்பம் நடத்த வருமாறு புவனாவை அழைத்து பார்த்தார். ஆனால் புவனா கணவருடன் செல்ல மறுத்து விட்டார். இருவரும் கடந்த 1½ வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ராஜாஜி நகரில் உள்ள தனது வீட்டில் சதீஸ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலையில் இதைக்கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஸ்குமார் தற்கொலை செய்து கொண்டதில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    Next Story
    ×