search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police investigate"

    • பெற்றோரின் புகாரையடுத்து காதலனை போலீசார் கைது செய்தனர்.
    • நவம்பர் 29 வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மும்பை மாநிலம் அந்தேரி குடியிருப்பு பகுதியில் பெண் பைலட் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் காரணமாக அவரது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அசைவம் சாப்பிட்டதால் காதலன் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கூறி பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மன உளைச்சலில் இருந்ததாகவும் காதலனின் செயலால் மேலும் மனமுடைந்து விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

    பெற்றோரின் புகாரையடுத்து காதலன் ஆதித்யாவை போலீசார் கைது செய்தனர். ஆதித்யா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நவம்பர் 29 வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆதித்யா (27), ஜூன் 2023 முதல் வேலை நிமித்தமாக மும்பையில் வசித்து வந்துள்ளார். சிருஷ்டி பண்டிட் (25) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் வணிக விமானி உரிமத்திற்கான பயிற்சியின் போது ஆதித்யாவை சந்தித்துள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்த நிலையில் லீவ்விங்ஷிப் உறவில் இருந்துள்ளனர்.

    தற்கொலை சம்பவத்திற்கு முன்பு கிட்டத்தட்ட ஐந்து முதல் ஆறு நாட்கள் அந்தேரி குடியிருப்பில் இருவரும் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மகாராஷ்டிர மாநிலம் அகோலா நகரத்தில் தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது.
    • உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிமெண்ட்டால் ஆன வெள்ளைப் பூண்டுகள் விற்கப்படும் சம்பவம் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அகோலா நகரத்தில் தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது.

    கள்ளச்சந்தை கும்பல் சில்லறை வியாபாரிகள் மூலம் இந்த சிமெண்ட் வெள்ளைப்பூண்டுகளை விற்பனை செய்கின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 



    • திருவிக நகர்-விவேகானந்தர் இல்லம் மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம் செய்தனர்.
    • பேருந்தின் மேற்கூரையில் இருந்து இறங்க கண்ணாடியை தட்டி, பேருந்தை நிறுத்தினர்.

    சென்னை:

    பேருந்தின் மேற்கூரையில் ஏறி கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வபோது போலீசார் அவர்களை பிடித்து எச்சரித்து அனுப்புவது வழக்கம்.

    இந்நிலையில் சென்னை சென்ட்ரல் நிலையம் அருகே திருவிக நகர்-விவேகானந்தர் இல்லம் மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் பேருந்தின் மேற்கூரையில் இருந்து இறங்க கண்ணாடியை தட்டி, பேருந்தை நிறுத்தினர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தக்கலை அருகே கடன் தொல்லையால் மகளை கொலை செய்து விட்டு வங்கி ஊழியர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தக்கலை:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள புலியூர் குறிச்சி ஒற்றைத்தெரு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 51),

    இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரோகிணி (45), மகள் அர்ச்சனா (13). இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்கள் ஒற்றைத்தெரு பகுதியில் சமீபத்தில் புதிய வீடு கட்டியுள்ளனர். இதனால் ரமேசுக்கு அதிக கடன் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு வந்தனர்.

    இதனால் ரமேஷ் அவரது மனைவி ரோகிணி ஆகிேயார் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள். வாங்கிய கடனை எப்படி திரும்ப செலுத்துவது என தெரியாமல் தவித்து வந்தனர். இதனால் அவர்கள் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.

    கணவன், மனைவி தற்கொலை செய்துவிட்டால் மகள் அனாதையாகி விடுவாளே என கருதிய அவர்கள் அவளையும் தங்களுடன் அழைத்து செல்ல திட்டமிட்டனர். இதனை தொடர்ந்துநேற்று இரவு அர்ச்சனாவின் கை, கால்களை கட்டிவிட்டு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளனர்.

    பின்னர் ரமேசும் ரோகிணியும் வீட்டின் மற்றொரு அைறயில் தூக்கு போட்டு தற்கொலை செய்தனர். இன்று காலை வெகு நேரம் ஆகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். உடனடியாக ரமேஷ் மற்றும் ரோகிணி செல்போன்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

    ஆனால் அவர்கள் செல்போனை எடுக்கவில்லை. அதே நேரம் வீட்டிற்குள் செல்போன் ஒலி கேட்டு கொண்டே இருந்தது. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டு காரர்கள் ரமேஷ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் ஒரு அறையில் மின் விசிறியில் ஒரே சேலையில் ரமேஷ், ரோகிணி பிணமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    சிறுமி அர்ச்சனாவை தேடிய போது மற்றொரு அறையில் அவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்ட் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    மகளை கொன்று விட்டு கணவன், மனைவி தற்கொலை செய்திருக்கிலாம் என போலீசார் சந்தேகித்தனர். 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லையால் ரமேஷ் இந்த விபரீத முடிவை எடுத்தாரா, அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சாமிநாதபுரம், மடத்துக்குளம் ஆகிய இடத்தில் உள்ள அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
    • விவசாயிகளிடம் இருந்து புகார்கள் ஏதாவது உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தனர்.

    மடத்துக்குளம்:

    கோவை சரக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., பாலாஜி உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் முத்தூர்,வெள்ளகோவில், சாமிநாதபுரம், மடத்துக்குளம் ஆகிய இடத்தில் உள்ள அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.மேலும் அங்கு ஏதாவது முறைகேடுகள் நடக்கிறதா, விவசாயிகளிடம் இருந்து புகார்கள் ஏதாவது உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தனர்.

    • லாரி மாட்டு வண்டி மீது பக்கவாட்டில் வேகமாக மோதியது.
    • இடத்திலேயே வண்டியில் இருந்த 2 மாடுகளில் ஒரு மாடு இறந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகன் வேல்முருகன்(வயது 20) மாட்டு வண்டி வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.  இன்று அதிகாலை அரியலூர் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மணல் குவாரிக்கு மணல் ஏற்ற விருத்தாச்சலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெ.பொன்னேரி ெரயில்வே மேம்பாலத்தின் மேல் வரும்போது அதிகாலை சுமார் 4 மணி அளவில் நாமக்கல் பகுதியில் இருந்து பாய்லர் கோழி ஏற்றி விருத்தாசலம் நோக்கி வந்த லாரி மாட்டு வண்டி மீது பக்கவாட்டில் வேகமாக மோதியது

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வண்டியில் இருந்த 2 மாடுகளில் ஒரு மாடு இறந்தது. மற்றொரு மாட்டின் கொம்பு உடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு கிடந்தது. மேலும் மாட்டு வண்டியை ஓட்டி வந்த வேல்முருகன் மற்றும் அவரது தந்தை ராமச்சந்திரன் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.    இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெண்ணாடம் போலீசார் விபத்து ஏற்படுத்திய கோழி ஏற்றி வந்த லாரியை போலீஸ் நிலையம் கொண்டு வந்து லாரி டிரைவர் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் நறுமணம் பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    • நெல்லை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ராஜவல்லிபுரத்தில் சோதனை நடத்தினர்
    • நடராஜன் என்பவரது வீட்டில் பழங்கால சிலைகள் 5 இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது

    நெல்லை:

    நெல்லை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ராஜவல்லிபுரத்தில் சோதனை நடத்தினர்.

    பழங்கால சிலைகள்

    அப்போது நடராஜன் என்பவரது வீட்டில் பழங்கால சிலைகள் 5 இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் நடராஜன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 32). ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சிலைகள் எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது.

    இதனை விற்பனை செய்த நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக 2 பேரிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணை

    அந்த சிலைகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லை. எனவே அவை வடமாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்தையாபுரம் ஆனந்நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளர்
    • அதே பகுதியைச் சேர்ந்த இருவர் மது போதையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் ஆனந்நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது40). மெக்கானிக்.

    தீ வைப்பு

    இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளர். இன்று அதிகாலை மழை பெய்ததால் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது வெளியே தெருவில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    போலீசார் விசாரணை

    நேற்று தாமோதரநகர் தேவசிங் (46) வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கையநாதபாண்டியன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

    இதில் அதே பகுதியைச் சேர்ந்த பொன் செல்வம் (21), மைக்கேல் ராஜ்(26) ஆகியோர் மது போதையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்தார்.

    இதேபோல் தூத்துக்குடியில் உள்ள தென்பாகம், வடபாகம் உட்பட பகுதிகளில் தொடர்ந்து தீவைப்பு சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள், போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணிக்கம் தலைமையான போலீசார் மூலம் 4தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
    • ஐந்து கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர் மூலம் நகை கடையின் இரும்பு கதவை துளையிட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடக்கு தெருவில் பாபுலால் ஜுவல்லர்ஸ் நகைக் கடை உள்ளது. இந்த நகை கடையை அதே பகுதியைச் சேர்ந்த நித்தேஷ் லோகேஷ் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கடையில் வேலை முடித்துவிட்டு பணியாளர்கள் நகை கடையை மூடி விட்டு சென்றனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் நகைக்கடையில் மூன்றாவது மாடியில் ஏறி சி.சி.டி.வி.கேமரா மற்றும் கடைக்கு வரும் மின்சார இணைப்பை ண்டித்து விட்டனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த மூன்று சிலிண்டர்கள் மூலம் நகைக் கடை இரும்பு கதவை வெல்டிங் முறையில் துளையிட்டு கடையின் உள்ளே புகுந்தனர்.

    பின்னர் கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 50 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை கும்பல் திருடி சென்றனர். நேற்று காலை கடை பணியாளர்கள் கடையை திறந்த போது கடையில் கொள்ளை போய் இருந்தது. இது குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி இன்ஸ்பெக்டர் பாபு, சப் -இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை போன நகைக்கடையை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ,ராஜசேகர் ,மாணிக்கம் தலைமையான போலீசார் மூலம் 4தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதில் இரண்டு தனி படைகள் நேற்று சென்னையில் உள்ள விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். இந்த கொள்ளையில் புதிதாக வாங்கப்பட்ட 10 கிலோ எடையுள்ள மூன்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஐந்து கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர் மூலம் நகை கடையின் இரும்பு கதவை துளையிட்டுள்ளனர். இவைகள் கொள்ளையர்கள் அங்கே விட்டு விட்டு சென்றுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட ஸ்க்ரு டிரைவர் கட்டிங் பிளேடு என அனைத்துமே புத்தம் புதியதாக வாங்கப்பட்டவையாக உள்ளது .இவர்கள் கொள்ளையடிக்க நோட்டமிட்டு திட்டம் தீட்டி இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திருப்பதை வைத்து பார்க்கும்போது அவர்கள் வட மாநில கொள்ளையர்கள் ஆக இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகத்தின் பேரில் கூறுகின்றனர். மேலும் போலீசார் இது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    செல்பி மோகத்தில் கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதவணிபுதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. விவசாயி. இவரது மகன் விக்னேஷ் (வயது 18). நாமக்கல் தனியார் கல்லூரியில் பார்மசி படித்து வருகிறார்.

    இவர் தனது உறவினர்கள் பரமசிவம் (45), ஆறுமுகம் (37) ஆகியோருடன் சேர்ந்து நேற்று மாலை கதவணிபுதூர் அருகே உள்ள பாம்பாறு தடுப்பணைக்கு சென்றார்.

    அங்கு ஆறுமுகமும், பரமசிவமும் மீன்பிடித்து கொண்டிருந்த போது, விக்னேஷ் ஆற்றில் இறங்கி செல்போனில் ‘செல்பி’ எடுக்க முயன்றார்.

    அப்போது நிலைதடுமாறி ஆற்றில் விழுந்த அவரை தண்ணீர் இழுத்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகமும், பரமசிவமும் விக்னேசை மீட்க முயன்றனர். ஆனால் ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் விக்னேசை காப்பாற்ற முடியவில்லை. ஆற்றி வெள்ளத்தில் விக்னேஷ் அடித்து செல்லப்பட்டார்.

    இதுகுறித்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிராம மக்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் இரவு நேரமானதால் விக்னேசை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து இன்றும் 2-வது நாளாக தேடும் பணி நடந்தது.

    பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை வாய்க்காலில் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியை அடுத்த பூதவராயன்பேட்டை பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு இன்று காலை பக்தர்கள் சென்றனர். அப்போது கோவிலின் பின்புறம் உள்ள சின்ன வாய்க்காலில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடிகூட அறுக்கப்படாத நிலையில் பிணமாக மிதந்தது.

    இதை பார்த்து பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வாய்க்காலில் பிணமாக மிதந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை வாய்க்காலில் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்தும், மேலும் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் தற்போது பிறந்த குழந்தைகளின் தகவல்களை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    கரூர் அருகே தனியார் பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கடிதம் சிக்கியுள்ளதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் ஜெயந்தி இவரது 17 வயது மகள், வெண்ணமலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் மாணவி மன விரக்தியில் அமைதியாக இருந்ததாக தெரிகிறது. இதனை பார்த்த அவரது தாய், ஏன் அமைதியாக இருக்கிறாய் என்று கேட்டு, சமாதானப்படுத்தியுள்ளார்

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது தாய் ஜெயந்தி, வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று? போலீசார் இறந்த மாணவியின் அறையில் சோதனை செய்துள்ளனர். அப்போது இறப்பதற்கு முன்பு அவர் எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    அந்த கடிதத்தில் பாலியல் தொல்லையால் சாகும்  கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும்....என்னை யார் இந்த முடிவை எடுக்க வச்சார்ன்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமில வாழன்னு ஆசைப்பட்டேன். ஆனா இப்போ பாதிலேயே போகுறேன்...இன்னோரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணனுன் நு ஆச ஆன முடியாதில்ல.. ஐ லவ் யூ அம்மா...சித்தப்பா...மணிமாமா, அம்மு,, உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா நான் உங்க கிட்டலாம் சொல்லாம போறேன்..மன்னிச்சிருங்க இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது. சாரி...என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

    இதையும் படியுங்கள்...ரெயில்களில் பயணிகளுக்கு மீண்டும் உணவு விற்பனை தொடக்கம்

    ×