search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே சாலை விபத்தில் மாடு பலி
    X

    லாரி மோதியதில் மாடு இறந்து கிடக்கும் காட்சி.

    திட்டக்குடி அருகே சாலை விபத்தில் மாடு பலி

    • லாரி மாட்டு வண்டி மீது பக்கவாட்டில் வேகமாக மோதியது.
    • இடத்திலேயே வண்டியில் இருந்த 2 மாடுகளில் ஒரு மாடு இறந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகன் வேல்முருகன்(வயது 20) மாட்டு வண்டி வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இன்று அதிகாலை அரியலூர் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மணல் குவாரிக்கு மணல் ஏற்ற விருத்தாச்சலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெ.பொன்னேரி ெரயில்வே மேம்பாலத்தின் மேல் வரும்போது அதிகாலை சுமார் 4 மணி அளவில் நாமக்கல் பகுதியில் இருந்து பாய்லர் கோழி ஏற்றி விருத்தாசலம் நோக்கி வந்த லாரி மாட்டு வண்டி மீது பக்கவாட்டில் வேகமாக மோதியது

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வண்டியில் இருந்த 2 மாடுகளில் ஒரு மாடு இறந்தது. மற்றொரு மாட்டின் கொம்பு உடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு கிடந்தது. மேலும் மாட்டு வண்டியை ஓட்டி வந்த வேல்முருகன் மற்றும் அவரது தந்தை ராமச்சந்திரன் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெண்ணாடம் போலீசார் விபத்து ஏற்படுத்திய கோழி ஏற்றி வந்த லாரியை போலீஸ் நிலையம் கொண்டு வந்து லாரி டிரைவர் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் நறுமணம் பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×