search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cow sacrifice"

    • அறுந்து கிடந்த கம்பியை மிதித்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர், முள்ளிபாளையம், ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் மதன்குமார். இவர் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

    நேற்று கொண வட்டம் பைபாஸ் சாலை அருகே மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட லாரி வேகமாக வந்தது.அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள மின்கம்பத்தில் லாரி மோதியது. இதனால் மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது.

    அந்த வழியாக சென்ற மதன் குமாரின் பசுமாடு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தது. இதில் பசு மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    தகவல் அறிந்த கொணவட்டம் மின்சார வாரிய ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். மின்கம்பத்தின் மீது லாரி மோதியது குறித்து கொணவட்டம் மின்வாரிய பொறியாளர் தினேஷ்குமார் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லோகநாதன் கார் டிரைவர் மேம்பாலம் அருகே சென்ற போது சென்டர் மீடியன் அருகி 2 மாடுகள் சாலையை கடந்தன டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மாடுகள் மீது மோதியது.
    • விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு மாடு இறந்துவிட்டது.

    கள்ளக்குறிச்சி:

    திருவண்ணாமலை சேர்ந்த லோகநாதன் கார் டிரைவர். இவர் ஈரோட்டில் இருந்து செங்கல்பட்டுக்கு காரில் சென்றார். மாம்பாக்கம் ெரயில்வே மேம்பாலம் அருகே சென்ற போது சென்டர் மீடியன் அருகி 2 மாடுகள் சாலையை கடந்தன. அப்போது டிரைவரில் கட்டுப்பாட்டை இழந்த கார், மாடுகள் மீது மோதியது. இதில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது.

    மேலும், விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு மாடு இறந்துவிட்டது. இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    • லாரி மாட்டு வண்டி மீது பக்கவாட்டில் வேகமாக மோதியது.
    • இடத்திலேயே வண்டியில் இருந்த 2 மாடுகளில் ஒரு மாடு இறந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகன் வேல்முருகன்(வயது 20) மாட்டு வண்டி வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.  இன்று அதிகாலை அரியலூர் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மணல் குவாரிக்கு மணல் ஏற்ற விருத்தாச்சலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெ.பொன்னேரி ெரயில்வே மேம்பாலத்தின் மேல் வரும்போது அதிகாலை சுமார் 4 மணி அளவில் நாமக்கல் பகுதியில் இருந்து பாய்லர் கோழி ஏற்றி விருத்தாசலம் நோக்கி வந்த லாரி மாட்டு வண்டி மீது பக்கவாட்டில் வேகமாக மோதியது

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வண்டியில் இருந்த 2 மாடுகளில் ஒரு மாடு இறந்தது. மற்றொரு மாட்டின் கொம்பு உடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு கிடந்தது. மேலும் மாட்டு வண்டியை ஓட்டி வந்த வேல்முருகன் மற்றும் அவரது தந்தை ராமச்சந்திரன் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.    இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெண்ணாடம் போலீசார் விபத்து ஏற்படுத்திய கோழி ஏற்றி வந்த லாரியை போலீஸ் நிலையம் கொண்டு வந்து லாரி டிரைவர் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் நறுமணம் பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    • டிரான்ஸ்பார்மர் பக்கத்தில் கட்டி வைத்திருந்த போது பரிதாபம்
    • மின்சாரத்தை நிறுத்தி மாட்டின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த துரை பெரும்பாக்கம் கிராமத்தில் துரைசாமி என்பவருடைய பசுமாடு நேற்று அவர் வீட்டின் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் பக்கத்தில் கட்டி வைத்திருந்தார்.

    அப்பொழுது எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து பசு மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து பரிதாபமாக இருந்தது. துரைசாமி மாட்டை பார்த்து கதறி அழுதார்.

    உடனடியாக காவேரிப்பாக்கம் மின் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு பசுமாட்டை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×