search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கோவிலூரில் நகை கடையில் கொள்ளையடித்தது வட மாநில கும்பலா? போலீசார் தீவிர விசாரணை
    X

    திருக்கோவிலூரில் நகை கடையில் கொள்ளையடித்தது வட மாநில கும்பலா? போலீசார் தீவிர விசாரணை

    • மாணிக்கம் தலைமையான போலீசார் மூலம் 4தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
    • ஐந்து கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர் மூலம் நகை கடையின் இரும்பு கதவை துளையிட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடக்கு தெருவில் பாபுலால் ஜுவல்லர்ஸ் நகைக் கடை உள்ளது. இந்த நகை கடையை அதே பகுதியைச் சேர்ந்த நித்தேஷ் லோகேஷ் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கடையில் வேலை முடித்துவிட்டு பணியாளர்கள் நகை கடையை மூடி விட்டு சென்றனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் நகைக்கடையில் மூன்றாவது மாடியில் ஏறி சி.சி.டி.வி.கேமரா மற்றும் கடைக்கு வரும் மின்சார இணைப்பை ண்டித்து விட்டனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த மூன்று சிலிண்டர்கள் மூலம் நகைக் கடை இரும்பு கதவை வெல்டிங் முறையில் துளையிட்டு கடையின் உள்ளே புகுந்தனர்.

    பின்னர் கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 50 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை கும்பல் திருடி சென்றனர். நேற்று காலை கடை பணியாளர்கள் கடையை திறந்த போது கடையில் கொள்ளை போய் இருந்தது. இது குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி இன்ஸ்பெக்டர் பாபு, சப் -இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை போன நகைக்கடையை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ,ராஜசேகர் ,மாணிக்கம் தலைமையான போலீசார் மூலம் 4தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதில் இரண்டு தனி படைகள் நேற்று சென்னையில் உள்ள விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். இந்த கொள்ளையில் புதிதாக வாங்கப்பட்ட 10 கிலோ எடையுள்ள மூன்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஐந்து கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர் மூலம் நகை கடையின் இரும்பு கதவை துளையிட்டுள்ளனர். இவைகள் கொள்ளையர்கள் அங்கே விட்டு விட்டு சென்றுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட ஸ்க்ரு டிரைவர் கட்டிங் பிளேடு என அனைத்துமே புத்தம் புதியதாக வாங்கப்பட்டவையாக உள்ளது .இவர்கள் கொள்ளையடிக்க நோட்டமிட்டு திட்டம் தீட்டி இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திருப்பதை வைத்து பார்க்கும்போது அவர்கள் வட மாநில கொள்ளையர்கள் ஆக இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகத்தின் பேரில் கூறுகின்றனர். மேலும் போலீசார் இது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×