search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muthaiyapuram"

    • தூத்துக்குடி குலையன்கரிசலை சேர்ந்த கூலி தொழிலாளிகள் வேலைக்கு சென்று விட்டு ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்
    • அப்போது அங்கு வந்த கும்பல் அவர்களை திடீரென சரமாரியாக அடித்து உதைத்து தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி குலையன்கரிசலை சேர்ந்த மனோஜ் (வயது 25), சரவணக்குமார் (25) ஆகியோர் கூலி வேலைக்கு சென்று விட்டு கடந்த 10-ந்தேதி இரவு முத்தையாபுரம் பொட்டல்காடு விலக்கு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த கும்பல் அவர்கள் இருவரையும் திடீரென சரமாரியாக அடித்து உதைத்து தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட நேருஜிநகர் அருண்ராஜ் (33), நேசமணி நகர் பிச்சையா (20), சாமி நகர் முனியசாமி (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • முத்தையாபுரம் ஆனந்நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளர்
    • அதே பகுதியைச் சேர்ந்த இருவர் மது போதையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் ஆனந்நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது40). மெக்கானிக்.

    தீ வைப்பு

    இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளர். இன்று அதிகாலை மழை பெய்ததால் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது வெளியே தெருவில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    போலீசார் விசாரணை

    நேற்று தாமோதரநகர் தேவசிங் (46) வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கையநாதபாண்டியன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

    இதில் அதே பகுதியைச் சேர்ந்த பொன் செல்வம் (21), மைக்கேல் ராஜ்(26) ஆகியோர் மது போதையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்தார்.

    இதேபோல் தூத்துக்குடியில் உள்ள தென்பாகம், வடபாகம் உட்பட பகுதிகளில் தொடர்ந்து தீவைப்பு சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள், போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×