என் மலர்

  செய்திகள்

  சேலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
  X

  சேலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  கொண்டலாம்பட்டி:

  சேலம் மாவட்டம் பூலாவாரியை அடுத்த ஆத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது43). ஆம்னி பஸ் டிரைவர். இவரது மனைவி சாந்தி (35).

  இவர்களது மகள் ரம்யாலோஷினி (17). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகன் தீனதயாளன் (17) பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்றிரவு தீனதயாளன் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு தூங்க சென்றார்.

  இன்று காலை 7 மணியளவில் தீனதயாளன் மீண்டும் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு பூட்டி கிடந்ததை பார்த்த அவர் வீட்டு கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.

  இதனால் சந்தேகம் அடைந்த அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் வந்து தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படாததால் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் கடப்பாறை உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

  அப்போது ராஜ்குமார் சேலையிலும், சாந்தி மற்றும் ரம்யாலோஷினி ஆகியோர் நைலான் கயிற்றிலும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுது புரண்டனர். இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

  இதற்கிடையே தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த 3 பேரின் உடலையும் மீட்ட போலீசார் பிரதே பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் ஏன்? தற்கொலை செய்தனர் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது.

  அவர்கள் தற்கொலைக்கான காரணம் என்ன? கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்தனரா? அல்லது ஏதாவது மிரட்டல் காரணமா? தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×