என் மலர்

  நீங்கள் தேடியது "3 person suicide"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடும்ப பிரச்சினையில் 3 பேர் தற்கொலை
  • இது குறித்து பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  தேனி:

  தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் செல்வக்குமார் (வயது29). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

  பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் குடும்பம் நடத்த வரவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வக்குமார் விஷ மருந்தை குடித்து மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் அருண்குமார் (30). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்து அருண்குமார் வீட்டில் தூக்கு போட்ட நிலையில் இருந்தார். அவரை மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அருண்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  பெரியகுளம் அருகே டி.கள்ளிபட்டியை சேர்ந்தவர் பிச்சைமணி மனைவி மாரியம்மாள் (50). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த மாரியம்மாள் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கினார்.

  பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்ைச பலனின்றி மாரியம்மாள் உயிரிழந்தார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தேனி:

  தேனி அருகே கோடாங்கி பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 52). இவர் குடிபழக்கத்திற்கு அடிமையானதால் வயிற்றுவலி ஏற்பட்டு அவதிக்குள்ளாகினார். இதனால் விரக்தி அடைந்த மணிகண்டன் விஷம் குடித்து மயங்கினார்.

  தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசெட்டி பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  தேனி சிவராம்நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (44). இவர் நோய் கொடுமையால் பாதிக்கப்பட்டார். மேலும் குடிபழக்கத்தினால் உணவு மற்றும் தண்ணீர் அருந்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வகுமார் தூக்கு ப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பெரியகுளம் அருகே கைலாசபட்டியை சேர்ந்த வர் சின்னகைலாசம் மனைவி கூடம்மாள் (65). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். தனது மகளுடன் ஆஸ்பத்திரிக்கு சென்றவர் கைலாசபட்டியில் உள்ள தோப்பில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி அருகே பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
  • சம்பவங்கள் குறித்து போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  தேனி:

  தேனி அருகே தாடிச்சேரியை சேர்ந்தவர் பரமன் (வயது 36). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் காலில் அடிபட்டது. அதன் பின்னர் வேலைக்குச் செல்லாமல் குடிபழக்கத்திற்கு அடிமையானார்.

  இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று அவரது மனைவி வெளியூர் சென்ற நிலையில் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பெரியகுளம் அருகே பங்களாபட்டியை சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அண்ணாத்துரையை பிரிந்து சென்றுவிட்டார்.

  தனது மகனுடன் வசித்து வந்த அண்ணாதுரை அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  கடமலைக்குண்டு அருகே தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் சேகர் மகள் கவிதா (30). இவருக்கும் கல்லுப்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 1 மகன் உள்ளார்.

  ரமேஷ் கேரளாவிற்கு வேலைக்கு சென்று வந்த நிலையில் கவிதா வயிற்று வலியால் அவதிப்பட்டு விஷ மருந்தை குடித்தார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
  சேலம்:

  சென்னை, சூளமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 60). இவரது மனைவி அனுராதா (50). இவர்களுடைய மகள்கள் ஆர்த்தி (22), ஆஷிகா(20).

  இவர்கள் 4 பேரும் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து நேற்று இரவு தங்கியிருந்தனர்.

  இன்று காலை அந்த அறை கதவு திறக்கப்படவில்லை. உள்பக்கமாக பூட்டியிருந்தது. அறையில் தங்கியிருந்த ஆர்த்தி வரவேற்பு அறையில் இருக்கும் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு கதவை திறந்துவிடுமாறு தகவல் தெரிவித்தார்.

  இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள், விரைந்து சென்று கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு விஜயகுமார், அனுராதா, இளைமகள் ஆஷிகா ஆகியோர் பிணமாக கிடந்தனர்.

  மூத்த மகள் ஆர்த்தி மட்டும் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த சம்பவம் குறித்து புதிய பஸ் நிலையத்தில் இருக்கும் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  உடனடியாக இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு வந்து, பிணமாக கிடந்த விஜயகுமார், அனுராதா, ஆஷிகா ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இதனை தொடர்ந்து அறை முழுவதும் சோதனை செய்யப்பட்டது. அப்போது ஒரு குளிர்பான பாட்டில் கிடந்தது. அந்த குளிர்பான பாட்டிலை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் வி‌ஷம் கலந்து 3 பேரும் குடித்து தற்கொலை செய்து இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

  தற்கொலை செய்து கொள்ளும் முன்பு அறையில் அவர்கள் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளனர். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், அந்த கடிதத்தில் கடன் தொல்லையில் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதி இருக்கிறார்கள் என தெரிவித்தனர். மேற்கொண்டு கடிதத்தில் உள்ள தகவலை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

  ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்கள் உறவினர்கள் மத்த்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  கொண்டலாம்பட்டி:

  சேலம் மாவட்டம் பூலாவாரியை அடுத்த ஆத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது43). ஆம்னி பஸ் டிரைவர். இவரது மனைவி சாந்தி (35).

  இவர்களது மகள் ரம்யாலோஷினி (17). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகன் தீனதயாளன் (17) பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்றிரவு தீனதயாளன் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு தூங்க சென்றார்.

  இன்று காலை 7 மணியளவில் தீனதயாளன் மீண்டும் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு பூட்டி கிடந்ததை பார்த்த அவர் வீட்டு கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.

  இதனால் சந்தேகம் அடைந்த அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் வந்து தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படாததால் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் கடப்பாறை உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

  அப்போது ராஜ்குமார் சேலையிலும், சாந்தி மற்றும் ரம்யாலோஷினி ஆகியோர் நைலான் கயிற்றிலும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுது புரண்டனர். இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

  இதற்கிடையே தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த 3 பேரின் உடலையும் மீட்ட போலீசார் பிரதே பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் ஏன்? தற்கொலை செய்தனர் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது.

  அவர்கள் தற்கொலைக்கான காரணம் என்ன? கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்தனரா? அல்லது ஏதாவது மிரட்டல் காரணமா? தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  ×