என் மலர்

  செய்திகள்

  சேலம் தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை
  X

  சேலம் தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
  சேலம்:

  சென்னை, சூளமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 60). இவரது மனைவி அனுராதா (50). இவர்களுடைய மகள்கள் ஆர்த்தி (22), ஆஷிகா(20).

  இவர்கள் 4 பேரும் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து நேற்று இரவு தங்கியிருந்தனர்.

  இன்று காலை அந்த அறை கதவு திறக்கப்படவில்லை. உள்பக்கமாக பூட்டியிருந்தது. அறையில் தங்கியிருந்த ஆர்த்தி வரவேற்பு அறையில் இருக்கும் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு கதவை திறந்துவிடுமாறு தகவல் தெரிவித்தார்.

  இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள், விரைந்து சென்று கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு விஜயகுமார், அனுராதா, இளைமகள் ஆஷிகா ஆகியோர் பிணமாக கிடந்தனர்.

  மூத்த மகள் ஆர்த்தி மட்டும் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த சம்பவம் குறித்து புதிய பஸ் நிலையத்தில் இருக்கும் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  உடனடியாக இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு வந்து, பிணமாக கிடந்த விஜயகுமார், அனுராதா, ஆஷிகா ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இதனை தொடர்ந்து அறை முழுவதும் சோதனை செய்யப்பட்டது. அப்போது ஒரு குளிர்பான பாட்டில் கிடந்தது. அந்த குளிர்பான பாட்டிலை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் வி‌ஷம் கலந்து 3 பேரும் குடித்து தற்கொலை செய்து இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

  தற்கொலை செய்து கொள்ளும் முன்பு அறையில் அவர்கள் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளனர். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், அந்த கடிதத்தில் கடன் தொல்லையில் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதி இருக்கிறார்கள் என தெரிவித்தனர். மேற்கொண்டு கடிதத்தில் உள்ள தகவலை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

  ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்கள் உறவினர்கள் மத்த்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×