என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சேலம் அஸ்தம்பட்டியில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை
  X

  சேலம் அஸ்தம்பட்டியில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சுல்தானா மற்றும் சம்சு ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து இறந்தனர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.
  • வறுமையால் தாய்-மகள் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  சேலம்:

  சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு முதல் கிழக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது அப்பாஸ், இவரது மனைவி சுல்தானா (வயது 45). இவர்களுக்கு சம்சு ( 22), ஜாமியா( 21 ) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

  மகள்களுக்கு 5 வயதாக இருக்கும் போது முகமது அப்பாஸ் சுல்தானாவை பிரிந்து சென்று விட்டார். இதனால் வறுமையில் தவித்த சுல்தானா கூலி வேலைக்கு சென்று பிள்ளைகளை வளர்த்து வந்தார். மேலும் கடுமையான வறுமையால் குடும்பம் நடத்தவே சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

  அதன்படி கடந்த 9-ந்தேதி இளைய மகள் சம்சுவும், சுல்தானாவும் பாலில் விஷம் கலந்து குடித்தனர். இதனால் வீட்டில் மயங்கி கிடந்த அவர்களை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

  2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சுல்தானா மற்றும் சம்சு ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து இறந்தனர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.

  இதுபற்றி அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணை நடத்திய போது கணவர் பிரிந்து சென்ற நிலையில் சுல்தானா வறுமையில் வாடிய நிலையில் திருமண வயது ஆகி விட்டதே, அவர்களுக்கு எப்படி திருமணம் செய்து வைப்பது என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதும், இதில் ஒரு மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் அந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

  மற்றொரு மகளான ஜாமியா வீட்டில் இல்லாததால் அவர் தப்பினார் .இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்த தாய்-மகள் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வறுமையால் தாய்-மகள் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×