என் மலர்

    செய்திகள்

    சேலம் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து கார் டிரைவர்  தற்கொலை
    X

    சேலம் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து கார் டிரைவர் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலம் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #suicidecase

    சேலம்:

    சேலம் கோரிமேடு ஜெயாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் மகன் தினேஷ்பாபு (வயது 35). கார் டிரைவர். இவரது மனைவி அருணா. இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. தினேஷ் பாபு நேற்று மது அருந்தி வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் அருணா கோபத்தில் வீட்டின் வெளியே இருந்தார். அப்போது வீட்டை பூட்டி கொண்டு தினேஷ்பாபு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து அவரது மனைவி கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விசாரணை நடத்தியதில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டம் லால்குடிக்கு காரில் 2 பேரை அழைத்து சென்றார். அப்போது கார் விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் பலியானார்கள். இந்த வழக்கு விசாரணை விரைவில் வர உள்ளது. இதற்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    Next Story
    ×