என் மலர்

  நீங்கள் தேடியது "RTO probe"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 3-ந்தேதி வட்டக்கானல் பகுதியில் மோனிஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.
  • இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் மோனிஷாவின் பெற்றோர் அளித்த புகாரில் தங்கள் மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், எனவே முறையாக விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்திருந்தனர்.

  கொடைக்கானல்:

  கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்த பீட்டர் சந்திரன் மகள் மோனிஷா (23). இவர் எம்.காம் பட்டதாரி, இவரும் வட்டக்கானல் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

  மோனிஷா முதுகலை பட்டம் படித்து உள்ளார். ஆரோக்கியசாமி இளங்கலை பட்டம் படித்து உள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே ஈகோ பிரச்சினை இருந்து வந்துள்ளது.

  இந்நிலையில் கடந்த 3-ந்தேதி வட்டக்கானல் பகுதியில் மோனிஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.

  இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் மோனிஷாவின் பெற்றோர் அளித்த புகாரில் தங்கள் மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், எனவே முறையாக விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 மாதமே ஆவதால் வரதட்சணை பிரச்சினை ஏதேனும் உள்ளதா என்று கொடைக்கானல் ஆர்.டி.ஓ முருகேசன் விசாரணை செய்தார்.

  இந்நிலையில் தாங்கள் அளித்த மனுமீது உரிய விசாரணை நடத்தவில்லை என்றும், போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக கூறி மோனிசாவின் உறவினர்கள் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் இன்று திடீர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

  இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இளம்பெண்ணின் சாவிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய கோரி உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நீண்ட நேரம் நாயுடுபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.
  மரக்காணம்:

  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஏந்தூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). புதுவையில் உள்ள ஜிம்பர் ஆஸ்பத்திரியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பவித்ரா (22).

  சுரேசுக்கும் பவித்திராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு. அது நாளடைவில் காதலாக மாறியது. அதை தொடர்ந்து அவர்களது பெற்றோர் சம்மதத்துடன் 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

  இந்த தம்பதிக்கு பிரித்திகா, பவித்ரா ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

  அடிக்கடி கணவன் - மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. நேற்று மாலை 5.30 மணியளவில் பவித்திராவின் தந்தை ரத்தின சபாபதிக்கு சுரேஷ் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதில் பவித்ரா பிரம்மதேசம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுளார் என்றார்.

  ஆஸ்பத்திரிக்கு ரத்தினசபாபதி விரைந்து சென்றார். அங்கு மகள் பவித்ரா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மகள் இறந்ததை கேட்ட தந்தை கதறி அழுதார்.

  சாவில் சந்தேகம் அடைந்த ரத்தினசபாபதி பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை அடுத்து இன்ஸ்பெக்டர் கலைமணி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பவித்ரா உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுரேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பவித்ரா அடித்து கொலை செய்யப்பட்டாரா ? அல்லது தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பவித்ராவிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆவதால். ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகின்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேப்பம்பட்டு அருகே குழந்தை இறந்த சோகத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  செவ்வாப்பேட்டை:

  வேப்பம்பட்டு ஆர்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் கார்த்திக். வெல்டர். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

  ஆனால் பிறந்த 7 நாட்களில் குழந்தை இறந்து விட்டது. இதனால் ரேவதி குழந்தை இறந்த துக்கத்தில் இருந்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரேவதி மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  ரேவதிக்கு திருமணமாகி 2 வருடங்கள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் திருமணமான 4 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.
  சேலம்:

  சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது26). சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு ஐ.டி.கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

  தாரமங்கலத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 26). அழகு கலை படித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அம்மாப்பேட்டை காமராஜர் காலனி பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தற்போது வசித்து வந்தனர்.

  இந்த நிலையில் நேற்று அந்த அப்பார்ட்மெண்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ரஞ்சிதா இறந்து கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதியினர் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

  அப்போது ரஞ்சிதா 3 மாத கர்ப்பிணியாக இருந்ததும், சில நாட்களுக்கு முன்பு அபார்‌ஷன் ஆனதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த ரஞ்சிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

  பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். திருமணம் ஆகி 4 மாதமே ஆவதால் அருண்குமார் மற்றும் ரஞ்சிதா உறவினர்களிடமும் அந்த பகுதியிலும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துகிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வியாசர்பாடியில் திருமணம் ஆன 4 மாதத்தில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பெரம்பூர்:

  வியாசர்பாடி காசிநகரை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் கார்த்திக் (வயது 30). சென்டிரிங் வேலை செய்து வருகிறார்.

  4 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கும், ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த கோட்டைசாமி மகள் கவாஸ்கி (26) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. கவாஸ்கி எம்.ஏ. பட்டதாரி. ராமநாதபுரத்தில் ரே‌ஷன் கடை கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். கார்த்திக்-கவாஸ்கி தம்பதியினர் காசிநகர் 15-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். 4 மாத விடுமுறையில் இருந்த கவாஸ்கி நாளை ரே‌ஷன் கடை கண்காணிப்பாளர் பணியில் மீண்டும் சேருவதற்காக ராமநாதபுரம் செல்ல வேண்டும்.

  இந்த நிலையில் கவாஸ்கி நேற்று வியாசர்பாடி காசிநகர் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்தி எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  மகள் கவாஸ்கி இறந்த தகவல் அறிந்ததும் அவரது தந்தை கோட்டைசாமி மற்றும் உறவினர்கள் சென்னை வந்தனர். அவர், தனது மகள் தற்கொலை செய்து கொள்ள மாட்டாள். சாவில் மர்மம் இருக்கிறது என்று போலீசில் புகார் செய்தார்.

  திருமணம் ஆகி 4 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெருந்துறை அருகே நடத்தையில் கணவர் சந்தேகமடைந்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பெருந்துறை:

  பெருந்துறை அடுத்த ஈரோடு ரோடு பழனிக்காட்டுப் புதூர் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த சிமான் சல்போதா என்பவர் தனது மனைவி சந்தோஷினி(21) மற்றும் அஸ்சின் போதா(3) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

  அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் தனது மனைவி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அது தொடர்பாக கேட்டுள்ளார்.

  இது குறித்து சந்தேகமடைந்த அவர் தனது மனைவியை திட்டினார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சந்தோஷினி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனது சேலையில் வீட்டின் மேற்கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  வீடு திரும்பிய கணவர் தூக்கில் தொங்கிய தனது மனைவியை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அவர்கள் உதவியுடன் தனது மனைவியை கீழே இறக்கி பார்த்த போது, அவர் ஏற்கனவே இறந்து போனது தெரிய வந்தது.

  இது தொடர்பாக பெருந்துறை போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  இறந்த சந்தோஷினிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை சூலூர் அருகே திருமணமாகி 2 வருடமாக குழந்தை இல்லாததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  கோவை:

  கோவை சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் கலைவாணன். இவரது மனைவி பிரியா (வயது 20). இவர்கள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

  இதனால் மனவேதனை அடைந்த பிரியா வி‌ஷத்தை குடித்தார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு தென்னம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிய பிரியா வீட்டுக்கு திரும்பினார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட பிரியாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 2 வருடத்தில் பிரியா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
  ×