என் மலர்
நீங்கள் தேடியது "Mother Suicide"
- பாலகுமார், வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக தமிழ்ச்செல்விக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- மனமுடைந்த தமிழ்ச்செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்:
நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்தவர் பாலகுமார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயசு 35). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்த நிலையில் பாலகுமார், வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக தமிழ்ச்செல்விக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த தமிழ்ச்செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
- சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ஆத்துவழி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த முருகன்(வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவரும், மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த மீனா(27) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா முமீனாள்(6), முகிஷா முமீனாள்(2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே முருகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். சிறிது நேரம் கழித்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு மீனாவையும், 2 குழந்தைகளையும் காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர் வீடுகளில் சென்று தேடிப்பார்த்தார். ஆனால் அவரை காணவில்லை. அவரது வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள ஒருவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தேடிப்பார்த்தார். அப்போது அவரது மூத்த மகள் தியா கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று மிதந்து கொண்டிருந்த தியா உடலை மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிணற்றில் தேடியபோது அதில் இருந்து மீனாவும், 2-வது மகளான முகிஷாவும் பிணமாக மீட்கப்பட்டனர்.
இதுதொடர்பாக கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், குடும்ப தகராறில் மீனா தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வி.கோட்டா தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், வி.கோட்டா அருகே உள்ள ஜிவனி பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ரமணா. ஆட்டோ டிரைவர். இவருக்கும் ராம தீர்த்தம் பகுதியை சேர்ந்த சின்னப்பா மகள் அருணா (வயது 30) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
தம்பதிக்கு ஹரிஷ் (12), ஜித்தின் (9) என 2 மகன்கள் இருந்தனர். வெங்கட்ரமணாவின் தம்பி மனைவி காயத்ரி. நிலப் பிரச்சனை சம்பந்தமாக அருணாவுக்கும், காயத்ரிக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதுகுறித்து அருணா தனது கணவரிடம் தெரிவித்த போது அவர் ஏதும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.
நேற்று காலை அருணாவுக்கும், காயத்ரிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருணா தனது 2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கிணற்றில் இருவரையும் தள்ளிவிட்டு தானும் குதித்தார்.
மாலை வீட்டிற்கு வந்த வெங்கட்ரமணா மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வெங்கட்ரமணா மற்றும் உறவினர்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
அப்போது அங்குள்ள கிணற்றின் கரை மீது நித்தின் அணிந்திருந்த செருப்பு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வெங்கட்ரமணா உறவினர்கள் கிணற்றில் குதித்து அருணா மற்றும் அவரது பிள்ளைகளில் உடல்களை தேடினர்.
இதுகுறித்து வி.கோட்டா தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக தாய் 2 பிள்ளைகளை கிணற்றில் தள்ளி விட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வடிவேல், ஆட்சியம்மாள் 2 மகன்களின் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
- வழக்கம் போல், வீட்டு மாடியில் தூங்கசென்றுவிட்டார்.
புதுச்சேரி:
காரைக்கால் கிளிஞ்சல் மேடு, சுனாமி குடியிருப்பு மீனவ கிராமத்தைச்சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ஆட்சியம்மாள்(வயது 62). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வடிவேல், ஆட்சியம்மாள் 2 மகன்களின் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். வடிவேலின் தம்பி சுப்பிரமணி மகன் தீபமணியை வடிவேல்ஆட்சியம்மாள் சிறு வயது முதல் வளர்த்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக, தீபமணி, மியான்மர் உள்நாடு கலவரத்தில் சிக்கி தவித்து வருகிறார். இது குறித்து, தீபமணியை மீட்டு தருமாறு காரைக்கால் மாவட்ட கலெட்கரிடம் பெற்றோர் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில், தீபமணி பற்றி கவலையில் இருந்துவந்த ஆட்சியம்மாள், தீபமணியை இனி எப்போது பார்ப்பேன் என புலம்பி வந்துள்ளார். தொடர்ந்து, வழக்கம் போல், வீட்டு மாடியில் தூங்கசென்றுவிட்டார். நேற்று முன்தினம் காலை, ஆட்சியம்மாள் மாடியில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட விபரம் அறிந்து, அனைவரும் சென்றுபார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காரைக்கால் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கணவர் குடித்துவிட்டு தகராறு செய்ததால் மனம் உடைந்த சிவசங்கரி பூச்சி மருந்தை குடித்து விட்டு, 11 மாத கைக்குழந்தையான சர்வின் குமாருக்கும் கொடுத்தார்.
- மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தாயும், குழந்தையும் சிகிச்சை பெற்று வந்தனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் துர்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரி (24). இவரது கணவர் நவீன்குமார் குடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போடுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி கணவர் நவீன் குமார் குடிபோதையில் மனைவி சிவசங்கரியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த சிவசங்கரி பூச்சி மருந்தை குடித்து விட்டு, 11 மாத கைக்குழந்தையான சர்வின் குமாருக்கும் கொடுத்தார். இதில் மயக்கம் அடைந்த நிலையில் இருந்த சிவசங்கரியையும், குழந்தையையும் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தாயும் குழந்தையும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் தாய் சிவசங்கரி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்துக்குட்பட்ட டாலூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலம் தேவி. பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துவந்த இவரது மகன் ஆண்டிறுதி தேர்வில் தோல்வியடைந்ததால் நீலம் தேவி மிகுந்த வேதனையடைந்தார்.
இந்நிலையில், வீட்டில் நேற்று மயங்கிய நிலையில் கிடந்த நீலம் தேவியை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர்கள் தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் குடித்திருந்த விஷத்தின் வீரியத்தால் வரும் வழியிலேயே நீலம் தேவியின் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் டாலூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், வாங்கல் அருகே உள்ள சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மகள் மனோபிரியா (வயது 28). இவருக்கும், நாமக்கல் மாவட்டம் மோகனூர் செவந்தபாளையத்தை சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மோகிதா என்ற 11 மாத குழந்தை இருந்தது. மகேஷ் பெங்களூருவில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
மனோபிரியா தனது குழந்தையுடன் நாமக்கல்லில் உள்ள மாமனார் வீட்டில் இருந்து வந்தார். அப்போது தன்னையும், குழந்தையையும் பெங்களூருக்கு அழைத்து செல்லுங்கள் என கணவர் மகேஷிடம் போனில் மனோபிரியா அடிக்கடி கூறி வாக்குவாதம் செய்திருக்கிறார். எனினும் குழந்தை சற்று வளர்ந்ததும் கூட்டி செல்கிறேன் என மகேஷ் தெரிவித்ததாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த மனோபிரியா தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு தனது குழந்தையுடன் கரூர் மாவட்டம், சங்கரன்பாளையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். பின்னர் குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் குறித்து அவர் பெற்றோரிடம் முறையிட்டார். அப்போது அவர்கள் தங்களது மகளுக்கு ஆறுதல் கூறினர். இந்த நிலையில் மனோபிரியா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, திடீரென அங்கிருந்த சிமெண்டு தண்ணீர் தொட்டிக்குள் தனது குழந்தை மோகிதாவை அமுக்கி கொலை செய்தார். அதனை தொடர்ந்து அவர் வீட்டின் அறையில் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த குடும்பத்தினர் வீட்டுக்கு வந்ததும், மனோபிரியா, அவரது கைக்குழந்தை மோகிதா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் கதறி துடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், மனோபிரியா, மோகிதா ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு வரும்போதே விபரீத முடிவினை தேடிக்கொள்ளும் எண்ணத்திலேயே மனோபிரியா வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே மனோபிரியா தற்கொலை செய்து கொண்டதால், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தியும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அம்மாபேட்டை உடையார் காலனியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி ரேவதி (வயது 54). இவர்களது மகன் சண்முகபிரியன் (25). இவர்களுக்குள் குடும்பத்தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு ரேவதியும், அவரது மகன் சண்முகபிரியனும் பஸ்சில் சென்னைக்கு புறப்பட்டனர். இன்று காலை அவர்கள் சென்னை வந்தனர்.
பின்னர் அவர்கள் மெரினா கடற்கரைக்கு சென்றனர். அங்குள்ள கல்லுக்குட்டை பகுதியில் கடலில் குதித்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் ஒடிச் சென்று கடலில் குதித்த அவர்களை காப்பாற்ற முயன்றனர்.
இதில் சண்முகபிரியனை போலீசார் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். ரேவதியை கடல் அலை இழுத்து சென்றது. இதில் அவர் கடலில் மூழ்கி இறந்தார். போலீசார் ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுக்கூர்:
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள காடந்தங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார். இவருடைய மனைவி அபிநயா (வயது 26). இவர்களுடைய மகன் துரைமுருகன் (7), மகள் ஜெயவந்தினி (4). சரவணக்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
துரைமுருகன், மற்றும் ஜெயவந்தினி ஆகியோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என தெரிகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளையும் வைத்துக்கொண்டு அபிநயா மிகுந்த சிரமம் அடைந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அபிநயா, 2 குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இரவு தனது மனதை கல்லாக்கிக்கொண்டு வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து தனது மகன் துரைமுருகன், மகள் ஜெயவந்தினி ஆகியோருக்கு குடிப்பதற்காக கொடுத்தார்.
விஷத்தை குடித்த துரைமுருகனும் ஜெயவந்தினியும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதன் பின்னர் அபிநயாவும் விஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அபிநயாவும் அவருடைய மகன் துரைமுருகனும் பரிதாபமாக இறந்தனர். ஜெயவந்தினி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தாள்.
இந்த நிலையில் அபிநயா வீட்டுக்கு வந்த அக்கம், பக்கத்தினர் அங்கு பார்த்த காட்சியால் அதிர்ச்சியில் அடைந்தனர். அங்கு அபிநயாவும் அவரது மகன் துரைமுருகனும் பிணமாக கிடப்பதும், ஜெயவந்தினி உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. உடனடியாக ஜெயவந்தினியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினம் காவல் சரகம் கத்தரிப்புலம் கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி ராதிகா (வயது 25). இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை, 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
ராதிகா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.