என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மியான்மரில் சிக்கித் தவிக்கும் வளர்ப்பு மகன் கவலையில் தாய் தூக்கு போட்டு தற்கொலை
  X

  மியான்மரில் சிக்கித் தவிக்கும் வளர்ப்பு மகன் கவலையில் தாய் தூக்கு போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வடிவேல், ஆட்சியம்மாள் 2 மகன்களின் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
  • வழக்கம் போல், வீட்டு மாடியில் தூங்கசென்றுவிட்டார்.

  புதுச்சேரி:

  காரைக்கால் கிளிஞ்சல் மேடு, சுனாமி குடியிருப்பு மீனவ கிராமத்தைச்சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ஆட்சியம்மாள்(வயது 62). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வடிவேல், ஆட்சியம்மாள் 2 மகன்களின் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். வடிவேலின் தம்பி சுப்பிரமணி மகன் தீபமணியை வடிவேல்ஆட்சியம்மாள் சிறு வயது முதல் வளர்த்து வருகின்றனர்.

  கடந்த சில தினங்களாக, தீபமணி, மியான்மர் உள்நாடு கலவரத்தில் சிக்கி தவித்து வருகிறார். இது குறித்து, தீபமணியை மீட்டு தருமாறு காரைக்கால் மாவட்ட கலெட்கரிடம் பெற்றோர் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில், தீபமணி பற்றி கவலையில் இருந்துவந்த ஆட்சியம்மாள், தீபமணியை இனி எப்போது பார்ப்பேன் என புலம்பி வந்துள்ளார். தொடர்ந்து, வழக்கம் போல், வீட்டு மாடியில் தூங்கசென்றுவிட்டார். நேற்று முன்தினம் காலை, ஆட்சியம்மாள் மாடியில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட விபரம் அறிந்து, அனைவரும் சென்றுபார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காரைக்கால் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×