மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கில் மகன்களை போலீசார் கைது செய்ததால் தாய் தற்கொலை

சீனிவாசன் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தற்கொலை குறித்து வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கில் மகன்களை போலீசார் கைது செய்ததால் தாய் தற்கொலை
Published on

திருவள்ளூர்:

பூந்தமல்லி அடுத்த கொத்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி அமுதா (40). இவரது 2 மகன்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே சீனிவாசன் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மகன்கள் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் கணவரும் மதுகுடித்து வந்தால் மனவேதனை அடைந்த அமுதா விட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com