என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் அருகே 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை
    X

    வாசுதேவநல்லூர் அருகே 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
    • சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ஆத்துவழி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த முருகன்(வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரும், மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த மீனா(27) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா முமீனாள்(6), முகிஷா முமீனாள்(2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே முருகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். சிறிது நேரம் கழித்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு மீனாவையும், 2 குழந்தைகளையும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர் வீடுகளில் சென்று தேடிப்பார்த்தார். ஆனால் அவரை காணவில்லை. அவரது வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள ஒருவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தேடிப்பார்த்தார். அப்போது அவரது மூத்த மகள் தியா கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

    இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று மிதந்து கொண்டிருந்த தியா உடலை மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிணற்றில் தேடியபோது அதில் இருந்து மீனாவும், 2-வது மகளான முகிஷாவும் பிணமாக மீட்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், குடும்ப தகராறில் மீனா தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×