என் மலர்

    நீங்கள் தேடியது "Family Dispute"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாய் அழுது கொண்டிருப்பதை கண்ட பிரேம்குமாருக்கு தந்தை மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது.
    • மணல்மேல்குடி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணல்மேல் குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்( வயது 46) மீன்பிடி தொழிலாளி.

    இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பிரேம்குமார் (23) சிவகங்கை மாவட்டத்தில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு ஆளான வேல்முருகன் அவ்வப்போது குடிபோதையில் அவரது மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனை அவரது மகன்கள் கண்டித்தனர்.

    இருந்த போதிலும் வேல்முருகன் குடிபோதையில் மனைவியிடம் ரகளை செய்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம் போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த வேல்முருகன் மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் அவரை தாக்கினார். இதனால் வலி தாங்க முடியாமல் அவர் கதறி அழுதார். தாய் அழுது கொண்டிருப்பதை கண்ட பிரேம்குமாருக்கு தந்தை மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து தந்தையின் வயிற்றுப் பகுதியில் ஓங்கி குத்தினார். இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    பின்னர் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு வேல்முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த மணல்மேல்குடி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தாயை தாக்கியதால் தந்தையை மகன் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணவன், மனைவி இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்
    • இதனால் மனமுடைந்த தாட்சாயினி தற்கொலை செய்து கொண்டார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை கூறைநாடு வடக்கு சாலியத்தெருவை சேர்ந்தவர் குமரன் மனைவி தாட்சாயினி (வயது 43). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், 9 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    குமரனுக்கும், தாட்சாயணிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன், மனைவி இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாட்சாயினி புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்ட அவரது கணவர் குமரன், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாட்சாயினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக தாட்சாயினியின் சகோதரி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த யோகாம்பாள் (41) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 மகள்களின் கழுத்தை அறுத்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • ஜோமோனின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் (வயது 40). இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஜோமோன், தனது மகள்கள் அனன்யா (13), அனாமிகா (10), அமேயா (7) ஆகிய 3 பேரையும் பராமரித்து வந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவு ஜோமோன் தனது 3 மகள்களின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயன்றுள்ளார். பின்பு அவர், வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தையால் கழுத்து அறுக்கப்பட்ட சிறுமிகள் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.

    இதனை அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இன்று காலை பார்த்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 சிறுமிகளையும் மீட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    ஜோமோனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர், எதற்காக 3 குழந்தைகளையும் கழுத்து அறுத்து கொல்ல முயன்று தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அது தொடர்பாக ஜோமோனின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் 3 பேரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். 3 மகள்களின் கழுத்தை அறுத்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோட்டயத்தை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.
    • ஒரே நேரத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் சோகத்துடன் கதறி அழுதது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அப்பிபட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கும் ஐஸ்வர்யா (24) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பிரபாகரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினர். இதைப் பார்த்ததும் அவரது 2 குழந்தைகளும் கதறி அழுதனர்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஓடைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஒரே நேரத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் சோகத்துடன் கதறி அழுதது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் பிணத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் அடுத்த தேயநகர் காலனி சேர்ந்தவர் பிரவீன் (வயது 50). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி லாவண்யா (42). டெய்லர் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு கல்யாணி என்ற மகள் உள்ளார். இவர் கரீம் நகரில் உள்ள விடுதியில் தங்கி இருந்து 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    பிரவீன் குடும்பத்தினர் கீழ்த்தளத்திலும், அவரது பெற்றோர் முதல் தளத்திலும் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பிரவீன் வீட்டில் இருந்த கல்லை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் லாவண்யா பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வீட்டில் மறைத்து வைத்தார்.

    நேற்று முன்தினம் காலை கரீம் நகர் வந்த பிரவீன் விடுதியில் தங்கி இருந்த மகளை பார்த்துவிட்டு நலம் விசாரித்தார். பின்னர் வீட்டிற்கு வந்த பிரவீன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தற்கொலைக்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதினார்.

    அந்த கடிதத்தில் எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களது சடலங்களை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குங்கள். சடங்குகள் எதுவும் செய்ய வேண்டாம். யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது. பிறப்பைப் போலவே இறப்பும் இயற்கையானது என கூறியிருந்தார்.

    இதனையடுத்து பிரவீன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பிரவீனின் நண்பர்கள் பலமுறை போன் செய்தோம் பிரவீன் எடுக்காததால் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது மனைவி ரத்த வெள்ளத்திலும், பிரவீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பிரவீனின் நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் பிணத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடும்ப தகராறு
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    திருச்சி மாவட்டம், டால்மியாபுரத்தை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 53) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக வந்து ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரத்தில் சர்ச் அருகில் உள்ள குடியிருப்பில் தங்கி வசித்து வந்தார்.

    தன்ராஜ் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்தார். நேற்று முன்தினம் தன்ராஜ் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர் வீட்டை விட்டு வெளியேறி அக்ராவரம் அருகே மூடப்பட்டிருந்த தொழிற்சாலைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை பார்த்த அப்பகுதியினர் சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் தன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
    • மனவேதனை அடைந்த திவ்யா விஷம் குடித்து மயங்கினார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாட்டாணிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (35).

    கூலித்தொழிலாளி. இவரது மனைவி திவ்யா ( வயது 27).இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது.

    6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த திவ்யா விஷம் குடித்து மயங்கினார்.

    அவரை உறவினர்கள் மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி திவ்யா நேற்று உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து திவ்யாவின் தாய் சுமதி, பேராவூரணி போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சில மாதங்களுக்கு முன்பு சந்தனக் கருப்புவுக்கும், மனைவி சுமித்ராவும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • ஆத்திரமடைந்த மகாலிங்கம், அங்கு கிடந்த விறகு கட்டையை எடுத்து மகனின் தலையில் பலமாக அடித்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணி பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருடைய மனைவி பேச்சியம்மாள். இவர்களுடைய மகன் சந்தன கருப்பு(வயது 23)

    கடந்த 2 ஆண்டுகளுக்கு சந்தன கருப்பு, தனது தந்தையின் சகோதரி மகள் சுமித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    சில மாதங்களுக்கு முன்பு சந்தனக் கருப்புவுக்கும், மனைவி சுமித்ராவும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கணவரை பிரிந்து சுமித்ரா தாய் வீடான சாத்தங்குடிக்கு குழந்தையுடன் சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று சந்தன கருப்பு தனது மகனை பார்க்க சாத்தங்குடிக்கு சென்றார். அப்போது அவரது மனைவி சுமித்ரா, மாமியார் மாரியம்மாள் ஆகியோர் தகராறு செய்து உள்ளனர். மேலும் சந்தன கருப்பு கண்களில் மிளகாய் பொடியை தூவி அவரை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தினர்.

    அப்போது அங்கு வந்த அவரது தந்தை மகாலிங்கம் சமாதானம் செய்து மகனை அழைத்து செல்ல முயன்றார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகாலிங்கம், அங்கு கிடந்த விறகு கட்டையை எடுத்து மகனின் தலையில் பலமாக அடித்தார். இதில் நிலை குலைந்து விழுந்த சந்தன கருப்பு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறிந்து சந்தனகருப்புவின் தாய் பேச்சியம்மாள் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி சுமித்ரா, மாமியார் மாரியம்மாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மகாலிங்கத்தை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செ.புதூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி.

    இவருடைய மனைவி மீனா(வயது 23). இவர்களுக்கு 4 வயதில் சிவக்குமார் என்ற மகன் உள்ளான்.

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த மீனா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குமாரசாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த மீனா சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருநீலக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீனா உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மீனாவின் தாயார் மணிமேகலை, திருநீலக்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அறிந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர்.
    • சசிகலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வெட்டுக்காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 30). இவரது மனைவி சசிகலா (26). இவர்களுக்கு தீபித் (5), தர்ஷன் (3) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

    இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவும் தம்பதி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சசிகலா, மிகுந்த சோகத்தில் இரவு முழுவதும் அழுதபடி படுத்திருந்துள்ளார்.

    இந்த நிலையில், இன்று காலையில் கணவர் தனசேரன் தூங்கிக் கொண்டிருந்தபோது, சசிகலா தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவருக்கு சொந்தமான விவசாய கிணறு இருக்கும் இடத்திற்கு வந்தார்.

    பின்னர் 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில், சசிகலாவின் தந்தை கரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, இன்று காலை சசிகலாவுக்கு போன் செய்துள்ளார். மகள் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர், வெட்டுக்கட்டு புதூருக்கு விரைந்து வந்தார். சசிகலாவை வீட்டில் பார்க்க முடியவில்லை. குழந்தைகளையும் காணவில்லை.

    இதனால் மகள் மற்றும் பேரன்களை தேடி, பழனிச்சாமி விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள விவசாய கிணற்றில் 2 குழந்தைகளையும் வீசிவிட்டு, சசிகலாவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து, உடனடியாக அப்பகுதி இளைஞர்களை வரவழைத்து, கிணற்றில் இறங்கி 2 குழந்தைகள், சசிகலாவை தண்ணீருக்குள் இருந்து மீட்டு வெளியே எடுத்துவந்தனர். பின்னர் இதுகுறித்து நல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில், நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சசிகலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அறிந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு குவிந்தனர். மேலும் அவரது உறவினர்கள் கதறி அழுதது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதனிடையே சசிகலாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், நாமக்கல் மாவட்ட வழங்க அலுவலரும், திருச்செங்கோடு உதவி கலெக்டருமான (பொறுப்பு) ரமேஷ் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram