கணவன்-மனைவியை பிரித்த பூண்டு, வெங்காயம்

தகராறு முற்றியதால் கேசவ் மனைவி தனது குழந்தையை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது.
கணவன்-மனைவியை பிரித்த பூண்டு, வெங்காயம்
Published on

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த கேசவ் என்பவருக்கு கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு கேசவ் மனைவி உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்க்காமல் சமையல் செய்ய ஆரம்பித்தார். இது கேசவ் குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை.

வெங்காயம், பூண்டு இல்லாமல் சமையல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

தகராறு முற்றியதால் கேசவ் மனைவி தனது குழந்தையை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு கேசவ் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி அகமதாபாத் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. அதோடு மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்கவும் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த குஜராத் ஐகோர்ட்டு இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. வெங்காயம், பூண்டால் திருமண தம்பதி பிரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு இணையத்தில் விவாதப்பொருளாகவும் மாறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com