என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Divorce"
- கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தாலும், சரியான காரணத்தை அவர்கள் கூறவில்லை.
- சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவே காரணம் என்றார் தெலுங்கானா மந்திரி.
ஐதராபாத்:
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017-ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன்பின், ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தாலும், சரியான காரணத்தை அவர்கள் வெளிப்படையாக கூறவில்லை.
தற்போது, நாக சைதன்யா நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய உள்ளார். சில மாதத்துக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்தின் மந்திரியான கோண்டா சுரேகா சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவ் தான் காரணம். அவர் செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே போய்விட்டார்கள் எனக்கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இந்நிலையில், தெலுங்கானா மந்திரி சுரேகாவின் இந்தப் பேட்டிக்கு நடிகர் நாகர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நாகர்ஜுனா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை எதிரிகளை விமர்சிக்கப் பயன்படுத்தாதீர்கள். தயவுசெய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள், குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- கணவர் தன்னுடன் அடிக்கடி சண்டைபோடுகிறார் என கூறி சென் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
- 'எனது தவறின் விளைவுகளை நான் புரிந்துகொண்டேன். இனி இந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன்'
திருமணங்களின் எண்ணிக்கையை விட விவகாரத்துக்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் சீனாவில் நடந்த சம்பவம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சீனாவை சேர்ந்த லீ [Li] மற்றும் சென் [Chen], ஆகிய இருவர் 20 வருடங்களாக கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது கணவர் தன்னுடன் அடிக்கடி சண்டைபோடுகிறார் என கூறி சென் சமீபத்தில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
ஆனால் கணவர் லீ மனைவியை பிரிய துளியும் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்டது சிறிய பிரச்சனைதான் என்றும் அவர்கள் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்றும் அறிவுரை கூறி நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. ஆனால் தனக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டும் என்று மனைவி சென் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இதுதொடர்பான விசாரணைக்கு கணவன் மனைவி ஆகிய இருவரும் நீதிமன்றத்துக்கு வந்த நிலையில், விசாரணையை நடக்கவிடாமல் செய்ய தனது மனைவி கணவர் துண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு நீதிமன்ற கட்டடத்தை விட்டு வெளியே ஓட முயற்சித்துள்ளார்.
மனைவியை கையில் ஏந்திக்கொண்டு சத்தமாக கூச்சலிட்டபடி சென் நீதிமன்றத்தை விட்டு ஓட முயற்சித்ததை பார்த்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். கணவனின் காதலை பார்த்து வியந்த நீதிபதி, இனிமேல் மனைவியிடம் சண்டை போட மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்க உத்தரவிட்டுள்ளனர். அதனபடி, 'எனது தவறின் விளைவுகளை நான் புரிந்துகொண்டேன். இனி இந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன்' என்று கணவர் லீ எழுதிக்கொடுத்துள்ளார்.
- நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மகள் ஆயிராவை முகமது ஷமி சந்தித்தார்.
- மகளுடன் ஷாப்பிங் சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகமது ஷமி பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளராக முகமது ஷமி திகழ்ந்து வருகிறார். ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியர்களின் பட்டியலில் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார்.
கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் முகமது ஷமியின் திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது. முகமது ஷமியுடன் சேர்ந்து வாழ முடியாது என அவரது மனைவி ஹசின் ஜஹான் விவாகரத்து பெற்றார். இந்த தம்பதிக்கு ஆயிரா என்ற ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மகள் ஆயிராவை முகமது ஷமி சந்தித்துள்ளார். தந்தையும் மகளும் ஒன்றாய் சேர்ந்து ஷாப்பிங் சென்றுள்ளனர். மகளுடன் ஒன்றாக ஷாப்பிங் சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகமது ஷமி பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளை மீண்டும் பார்த்தபோது என்னுடைய நேரம் நின்றது. வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு உன்னை நேசிக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமி விரைவில் இந்திய அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
- கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து உள்ளார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "இது எனது கவனத்துக்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு'' என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.
ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விவாகரத்து விவகாரம் தொடர்பாக ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், நடிகர் ஜெயம் ரவியுடன் விவாகரத்துக்கு விருப்பம் இல்லை என்றும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன் என்று மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், "இத்தனை நாள் நான் அமைதியாக இருந்தது என் குற்றவுணர்ச்சி என்றோ, என் பலவீனம் என்றோ நினைக்க வேண்டாம். திருமணத்தின் புனிதத்தை நான் ஆழமாக மதிக்கிறேன், யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் விவாதங்களில் ஈடுபடமாட்டேன். எனது கவனம் எங்கள் குடும்பத்தின் நலனில் உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Amidst Jayam Ravi and Aarti Ravi's ongoing divorce, Aarti issues a new statement on her social media profile. She clarifies that her family's well-bbeing is her sole focus, and she chooses to stay silent and dignified. She also wrote in the capion, "When they go low, we go high."… pic.twitter.com/f3ArnXOFJS
— JFW (@jfwdigital) September 30, 2024
- மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
- ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாக தகவல் வெளியானது.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து உள்ளார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "இது எனது கவனத்துக்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு'' என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.
ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது கெனிஷா DT NEXT நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் "ஜெயம் ரவிக்கும் தனக்கும் இருக்கும் நட்பு என்பது தொழில்முறை சார்ந்தது மட்டும் தான். ஜெயம் ரவி என்னுடைய நண்பர், எனது வாடிக்கையாளர் அவ்வளவு தான். அவர்கள் விவாகரத்துக்கு நான் காரணம் என சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். ஜெயம் ரவி அவரது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பும் வரை அவரை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.
இது உங்க வீட்டு பிரச்சனை இல்லை, வேறொருவரின் குடும்ப பிரச்சனை. அதில் இருந்து விலகி இருங்கள். என்னை இந்த விவகாரத்தில் இழுக்காதீர்கள். எனக்கு வேலை இருக்கிறது, அதற்கு நேரம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
- ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாக தகவல் வெளியானது.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து உள்ளார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "இது எனது கவனத்துக்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு'' என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.
ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத்தர வேண்டும் ஜெயம் ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.
விவாகரத்து விவகாரம் சர்ச்சையான நிலையில் மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த 2022-ம் ஆண்டு பிரபல நடிகரான பென் அப்லெக்கை ஜெனிபர் லோபஸ் திருமணம் செய்து கொண்டார்.
- ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக அவர்கள் வலம் வந்தனர்
பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபசும், பிரபல நடிகரான பென் அப்லெக்கும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக அவர்கள் வலம் வந்தனர்
இந்நிலையில் பென் அப்லெக்கிடம் இருந்து விவாகரத்து கோரி ஜெனிபர் லோபஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் தாங்கள் கடந்த ஏப்ரல் 26-ந்தேதி முதல் பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனிபர் லோபஸ் விவாகரத்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், பென் அப்லெக்கை பிரிவதற்கு ஜெனிபர் லோபஸ் தயாராக இல்லை என்றும், இந்த பிரிவை நினைத்து அவர் தினமும் மது வருந்துவதாக அவரது நெருங்கிய நண்பர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பென் அப்லெக்குடன் இணைந்து வாழவே ஜெனிபர் லோபஸ் விரும்பியதாகவும், ஆனால் பென் அப்லெக் அதற்கு தயாராக இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதன் விளைவாக எப்போதாவது மது அருந்தி வந்து ஜெனிபர் லோபஸ் இப்போது தினமும் மது அருந்துகிறார் என்று சொல்லப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நான் எடுத்த விவாகரத்து முடிவு தனக்கு தெரியாது என்று அவர்கள் சொல்வது தவறாக தோன்றுகிறது.
- நான் ஊதாரித்தனமாக சுற்றுகிற நபர் இல்லை
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து உள்ளார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "இது எனது கவனத்துக்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு'' என்றார். ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.
சென்னையில் நிருபர்களை சந்தித்த ஜெயம் ரவியிடம் இதுகுறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
நான் எடுத்த விவாகரத்து முடிவு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும் வேறுவழியில்லை. இது எனது வாழ்க்கையில் ஒரு வேகத்தடை மாதிரிதான். ஒன்றரை மாதங்களுக்கு முன்பே கோர்ட்டுக்கு சென்றுவிட்டேன். அப்போதே விவாகரத்து செய்யப் போகிறேன் என்று கிசுகிசுக்கள் வந்தன.
நான் எடுத்த விவாகரத்து முடிவு தனக்கு தெரியாது என்று அவர்கள் சொல்வது தவறாக தோன்றுகிறது. அதில் லாஜிக்கும் இல்லை. ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அதை பெற்றுக்கொண்டதாகவும் எனக்கு தகவல் வந்துள்ளது. அவர்கள் தரப்பில் பேசினார்கள். எங்கள் வீட்டில் வைத்தும் பஞ்சாயத்து நடந்தது.
இவ்வளவு நடந்த பிறகும் எனக்கு தெரியாது என்று சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. தெரியாமல் எப்படி இருக்க முடியும். எனக்கு புரியவில்லை. நான் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் இருந்ததாக சொல்வதும் சரியல்ல. எனது மகன்களுடன்தான் இருந்தேன். மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக செல்கிறேன்.
பாடகியுடன் என்னை இணைத்து பேசுவது தவறு. அந்த பெண்ணுக்கு அம்மா, அப்பா இல்லை. அவருடன் இணைத்து பேசினால் அது பேசியவர்களுக்குத்தான் அசிங்கம். அந்த பெண் லைசன்ஸ் பெற்ற சைக்காலஜிஸ்ட். நிறைய பேருக்கு உதவிகள் செய்து இருக்கிறார். மன அழுத்தத்தில் இருந்த எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார். அவரை என்னோடு இணைத்து பேசுவது ரொம்ப தவறு. நான் அவரோடு ஒரு ஆன்மிக மையம் ஆரம்பிக்க முடிவு செய்தேன். அதை தகர்ப்பதற்காக இப்படி பேசப்படுகிறதா என்று புரியவில்லை. ஏற்கனவே இன்னொரு பெண்ணுடன் இணைத்து பேசினர். அவருக்கு நிச்சயமாகி போய் விட்டார்.
அடுத்து என்னை மார்பிங் செய்து போட்டோ வெளியிடுவார்களா என்று தெரியவில்லை. அம்மா, அப்பா எனது ஆதரவாக இருக்கிறார்கள். நான் ஊதாரித்தனமாக சுற்றுகிற நபர் இல்லை. உண்மை எல்லாம் விரைவில் கோர்ட் மூலம் வெளிவரும்.
நான் சட்டத்தை நம்புகிறேன். நியாயம் கிடைக்கும். மகன்களுடன் சேர்ந்துதான் இருக்கிறேன். நோட்டீஸ் அனுப்பும் முன்பே முத்த மகனிடம் விஷயத்தை சொன்னேன். காலை உடைத்து கையை உடைத்து எல்லாமே நான் சம்பாதித்தது. மக்கள் கொடுத்தது. எனது இமேஜை அவ்வளவு சீக்கிரம் உடைக்க முடியாது. ஒரு நாள் உண்மை தெரியவரும்போது சாணியை திருப்பி அடிப்பார்கள் என்றார்.
இந்த நிலையில், தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்க விடுங்கள். எனது விவாகரத்து விவகாரத்தில் யாரையும் இழுக்க வேண்டாம்" என்று ஜெயம் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- கணவர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது 2 முறை மட்டுமே குளிக்கிறார்.
- கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் ஆகி 40 நாட்களே ஆன நிலையில் தனது கணவரின் வித்தியாசமான குளியல் பழக்கத்தால் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆக்ராவை சேர்ந்த பெண் கூறுகையில், அவரது கணவர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது 2 முறை மட்டுமே குளிக்கிறார். இதனால் அவர் மீது பொறுத்துக்கொள்ள முடியாத உடல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அரதிருமணமாகி நாற்பது நாட்களுக்கு பிறகு திருமணத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.
அந்த பெண்ணின் கணவரான ராஜேஷ் புனிதமான கங்கை நதியில் (கங்காஜல்) வரும் தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை தெளித்துக் கொள்கிறார். திருமணமாகி மனைவியின் வற்புறுத்தலால் 40 நாட்களில் 6 முறை குளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணை துன்புறுத்தல் புகாரை போலீசில் பதிவுசெய்து விவாகரத்து கோரி உள்ளனர்.
இதற்கிடையில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இறுதியில் கணவர் மனந்திருந்தி, அவரது தனிப்பட்ட சுகாதாரத்தை மேம்படுத்த ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், அந்த பெண் கணவருடன் இனி வாழ விரும்பவில்லை என்று கூறியதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து தம்பதியினர் ஆலோசனை மையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
- என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன்.
- நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம்.
நடிகர் ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து இருந்தார்.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி வந்த நிலையில் தற்போது, நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன்.
என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல....
ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது.
தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமன்றி நல்வழி காட்டி வரும் பத்திரிக்கை ஊடக மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
#JayamRavi divorce - Aarti Ravi issues a statement. #kollywood pic.twitter.com/RXCSBZifKc
— Latha Srinivasan (@latasrinivasan) September 11, 2024
- இன்ஸ்டாகிராமில் விவாகரத்து செய்வதாக கடந்த ஜூலை மாதம் பகிரங்கமாக அறிவித்தார்.
- மஹ்ரா எம்1 பிராண்டின் கீழ் டைவர்ஸ் வாசனை திரவியத்தை விற்பனை செய்கிறது.
துபாய் ஆட்சியாளரின் மகளான ஷைக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமிடம் இருந்து இன்ஸ்டாகிராமில் விவாகரத்து செய்வதாக கடந்த ஜூலை மாதம் பகிரங்கமாக அறிவித்தார்.
இன்ஸ்டா பதிவில் விவாகரத்து அறிவித்த ஷைக்கா உலகளவில் பிரபலம் அடைந்தார். இந்த நிலையில், தற்போது "டைவர்ஸ்" என்ற பெயரில் வாசனை திரவிய நிறுவனத்தை ஷைக்கா துவங்கியுள்ளார். இந்நிறுவனம் மஹ்ரா எம்1 பிராண்டின் கீழ் டைவர்ஸ் வாசனை திரவியத்தை விற்பனை செய்கிறது.
புது வகை வாசனை திரவியம் அவரது விவகாரத்தை ஒட்டி நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. விவகாரத்தை போன்றே புதிய வாசனை திரவிய விளம்பரத்தையும் ஷைக்கா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
- ஜெயம் ரவி, ஆர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார்.
- ஆர்த்தி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார்.
ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜெயம் ரவி, ஆர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து செல்வதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.
ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது.
என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும் திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரைத்துறை நண்பர்கள், பத்திரிகை, ஊடகத் துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள் என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.
எனவே மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலன்களை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.
இந்த நேரந்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும் படியும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
என்னுடைய முன்னுரிமை எப்போதும் என் நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.
நான் என்றும் எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆர்த்தி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Grateful for your love and understanding. Jayam Ravi pic.twitter.com/FNRGf6OOo8
— Jayam Ravi (@actor_jayamravi) September 9, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்