விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஏப்ரலில் விசாரணை!

விஜய் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லைகடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஏப்ரலில் விசாரணை!
Published on

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிரபல நடிகை ஒருவருடன் விஜய்க்கு தகாத உறவு இருப்பதே இந்த முடிவுக்கு காரணம் எனவும் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், சுமூகமாகப் பிரிய பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்ததால் நீதிமன்றத்தை நாடியதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போதுவரை இந்த குற்றச்சாட்டுக்கு விஜய் தரப்பிலிருந்து எந்தப் பதிலும், மறுப்பும் வரவில்லை. இந்த வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் ஏப்.20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

விஜய் மற்றும் சங்கீதா ஆகியோருக்கு 1999-இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com