என் மலர்
நீங்கள் தேடியது "விவாகரத்து"
- இந்த அத்தியாயத்தை நான் கோபத்துடனோ அல்லது வருத்தத்துடனோ முடிக்கவில்லை; ஒரு தெளிவோடு முடிக்கிறேன்.
- அதிக அறிவோடும், சுய விழிப்புணர்வோடும், எனக்குத் தகுதியான வாழ்க்கையை அமைப்பேன் என்ற உறுதியோடும் நான் முன்னோக்கிச் செல்கிறேன்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர், தனது மனைவி இஷானி ஜோஹரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துள்ளதாக அறிவித்துள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"நான் என்னைப்பற்றியோ, எனது மதிப்பு குறித்தோ அல்லது நான் விரும்பிய வாழ்க்கையைப் பற்றியோ முழுமையாகப் புரிந்துகொள்ளாத இளம் வயதிலேயே திருமண வாழ்க்கையில் இணைந்தேன். அதைத் தொடர்ந்து நான் எதிர்பார்க்காத பல பாடங்களைக் கற்றேன். கடந்த பதினைந்து மாதங்களாக நீதிமன்ற அறைகளில் பொறுமையையும், மீண்டு வரும் குணத்தையும், உண்மையால் கிடைக்கும் வலிமையையும் அறிந்துகொண்டேன்.
இன்று, என் வாழ்வின் அந்த அத்தியாயம் முறைப்படி முடிவுக்கு வருகிறது. உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு, பெரும் விலைகொடுத்து இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இது என் வாழ்வின் இந்த நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளதோடு எனக்கு ஒரு தெளிவையும் தந்துவிட்டது.
இந்த அத்தியாயத்தை நான் கோபத்துடனோ அல்லது வருத்தத்துடனோ முடிக்கவில்லை; ஒரு தெளிவோடு முடிக்கிறேன். சில உறவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிப்பதற்கல்ல; அவை நம்மை விழிப்படையச் செய்யவும், பாடம் கற்பிக்கவும், நம்மை மாற்றியமைக்கவுமே வருகின்றன.
அதிக அறிவோடும், சுய விழிப்புணர்வோடும், எனக்குத் தகுதியான வாழ்க்கையை அமைப்பேன் என்ற உறுதியோடும் நான் முன்னோக்கிச் செல்கிறேன். இது ஒரு முடிவல்ல; இது ஒரு விடுதலை. ஒரு புதிய தொடக்கம். இனி நான் உருவாக்கும் அனைத்தும் சுயமரியாதை, அமைதி மற்றும் சிறந்த தேர்வுகளின் அடிப்படையில் அமையும் என்ற உறுதிமொழி. என்னிடம் கசப்பான உணர்வுகள் எதுவுமில்லை, கற்றுக்கொண்ட பாடங்களும், கண்ணியமும், மீண்டும் தொடங்குவதற்கான துணிச்சலும் மட்டுமே உள்ளன." எனக் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாகக் காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த மார்ச் 9, 2022 அன்று கோவாவில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது ராகுல் சாஹரின் வயது 22. தற்போது ராகுல் சாஹர், வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட உள்ளார்.
- மகேஷ் கனடாவில் இருந்து வந்து தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.
- மரம் அறுக்கும் ரம்பம், பாறை வெட்டும் எந்திரம் மூலம் கொலை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டார்.
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் மந்தாணியை சேர்ந்தவர் தேவரகொண்டா மகேஷ் (வயது 32). இவர் கடந்த 2022-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டம், திலக்வாட்டை சேர்ந்த சுனிதா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு மகேஷ் மற்றும் சுனிதா ஆகியோர் கனடா சென்றனர். கனடாவிற்கு சென்ற பிறகு கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் 8 மாதத்திற்கு பிறகு சுனிதா இந்தியா திரும்பினார். கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாக மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் மகேஷுக்கு அவுட்லுக் நோட்டீஸ் அனுப்பினர்.
கடந்த 2024-ம் ஆண்டு மகேஷ், சுனிதா ஜோடி விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பிறகு சுனிதா ஐதராபாத் வந்து ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது வனஸ்தலிபுரம் கிரீன் சிட்டி காலனியை சேர்ந்த ஸ்ரீநாத் (32 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் கடந்த 2025-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சுனிதா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். முதல் திருமணம் குறித்து சுனிதா தனது கணவரிடம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் மகேஷின் தாயார் இறந்து விட்டதால் மகேஷ் கனடாவில் இருந்து வந்து தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். மீண்டும் கனடா செல்ல முயன்ற போது சுனிதா கொடுத்த புகாரின் பேரில் மகேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்ததால் அவரது விசா முடக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனால் சுனிதா மீது மகேஷுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. சுனிதாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஐதராபாத் வந்து விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
சுனிதாவின் இருப்பிடம் குறித்து சமூக வலைத்தளத்தில் தேடிய போது பேஸ்புக்கில் அவரது முகவரி இருந்தது. சுனிதாவை கொலை செய்வது எப்படி என்பது குறித்து யூடியூபில் படங்களை பார்த்தார்.
மரம் அறுக்கும் ரம்பம், பாறை வெட்டும் எந்திரம் மூலம் கொலை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டார். சில நாட்கள் கொலை செய்வது குறித்து ஒத்திகை பார்த்தார்.
பின்னர் கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். கடந்த 5 நாட்களாக சுனிதாவின் வீட்டை நோட்டமிட்டு வீட்டில் அவரது கணவர் எப்போது வெளியே செல்வார், எப்போது சுனிதா தனியாக இருப்பார் என்பதை அறிந்து கொண்டார்.
நேற்று மதியம் கொலை செய்வதற்கான ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஒரு கேனில் பெட்ரோல் பிடித்துக் கொண்டு 4-வது மாடியில் உள்ள சுனிதா வீட்டிற்கு சென்றார்.
கதவை தட்டியபோது சுனிதா கதவை திறந்தார். உடனடியாக கதவை உள் பக்கமாக பூட்டிய மகேஷ் தன்னிடம் இருந்த சுத்தியலால் சுனிதாவின் தலையில் பலமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சுனிதா மயங்கி கீழே விழுந்தார்.
பின்னர் தன்னிடம் இருந்த ரம்பத்தை எடுத்து கழுத்தை அறுத்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
சுனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது மாமியார் வந்து பார்த்த போது சுனிதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அடுக்குமாடி குடியிருப்பாளர்களை அழைத்தார்.
குடியிருப்பாளர்கள் வந்த போது மகேஷ் ஓடி சென்று கழிவறையில் கதவை உள்புறமாக பூட்டி கொண்டார். பலமுறை கதவை தட்டியும் திறக்காததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மகேசை கழிவறையில் இருந்து வெளியே வர கூறினர். ஆனால் மகேஷ் தன்னை பிடிக்க வந்தால் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொள்வேன் என மிரட்டினார்.
போலீசார் கதவை உடைக்க முயல்வதை அறிந்த மகேஷ் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டார். போலீசார் அதிரடியாக கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது மகேஷ் லைட்டரால் உடலில் தீ வைக்க முயன்றார். போலீசார் மகேஷை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஐதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- 42 வயதான மத்திய அரசு ஊழியர் உடன் பணிபுரியும் 54 வயது பெண்ணை காதலித்தார்.
- அப்பெண்ணும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.
மத்தியப் பிரதேசத்தை சேர்த்த 42 வயதான மத்திய அரசு ஊழியர் ஒருவர் கடந்த 23 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் திருமண பந்தத்தில் இருந்து வந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவர் தன்னுடன் பணிபுரியும் 54 வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், இதனால் குடும்பத்தை அவர் கண்டுகொள்வதில்லை என்றும் மனைவி போபால் குடும்ப நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றம் மூன்று பேரையும் அழைத்து ஆலோசனைகளை வழங்கியது. ஆனால், கணவர் தனது காதலியுடன்தான் வாழ்வேன் என்று கூறிவிட்டார். எனவே நீதிமன்றம் தம்பதிக்கு விவாகரத்து அளித்தது.
ஆனால் மனைவி தனது கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு பதிலாக தனது கணவரை விட்டுக்கொடுக்க ரூ.1.5 கோடி இழப்பீடு வேண்டும் என்று அப்பெண்ணிடம் கோரினார். அப்பெண்ணும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.
கணவன் மனைவி மற்றும் காதலிக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு வீடு, மற்றும் ரூ.27 லட்சம் என மொத்தம் ரூ.1.5 கோடியை காதலி வழங்க உள்ளார்.
- 6 மாத காத்திருப்புக்கு பிறகு தம்பதி விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.
- கொரோனா பரவலுக்கு பிறகு திருமணம், நிச்சயதார்த்தம் போன்றவை காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது.
கனடாவில் வேலை பார்க்கும் தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் மிரா ரோட்டில் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் அவர்களின் குடும்ப வாழ்க்கை இனிமையாக சென்றது. இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள், 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி முதல் கனடாவில் வெவ்வேறு பகுதியில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
எனவே பிரிந்து வாழும் 31 வயது கணவர், 24 வயது மனைவி விவாகரத்து கேட்டு தானே குடும்பநல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். 2 பேரும் வெளிநாட்டில் இருப்பதால் காணொலி காட்சி மூலம் விவாகரத்து வழக்கு மீதான விசாரணை நடந்தது. 6 மாத காத்திருப்புக்கு பிறகு தம்பதி விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.
இதையடுத்து கோர்ட்டு தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இதுகுறித்து நீதிபதி ஆர்.எஸ்.பகரே அவரது தீர்ப்பில், "பயிற்சி பெற்ற மத்தியஸ்தரால் பேச்சுவார்த்தை நடந்த போதிலும் தம்பதி இணைந்து வாழ ஆர்வம் காட்டவில்லை. மனுதாரர்கள் பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம், நிகழ்கால, எதிர்கால பிரச்சனைகள் குறித்து பரஸ்பரம் தீர்வு கண்டுள்ளனர். அவர்களுக்கு இடையேயான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுள்ளன" என கூறியுள்ளார்.
கொரோனா பரவலுக்கு பிறகு திருமணம், நிச்சயதார்த்தம் போன்றவை காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது. இந்தநிலையில் குடும்ப நல கோர்ட்டு வெளிநாட்டில் வாழும் தம்பதிக்கு காணொலி காட்சி மூலம் விவாகரத்து வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- முன்னாள் கணவர், மேரி கோம் கடந்த காலங்களில் தமக்குத் துரோகம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
- நிதி தொடர்பான அனைத்து புகார்களும் பொய்யானவை என்றும் ஓன்லர் திட்டவட்டம்
குத்துச்சண்டையில் ஆறுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் இந்திய வீராங்கனை மேரி கோம். மேரி கோமிற்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் ஓன்லர் கோம். இந்த தம்பதி கடந்த 2023ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். இதனிடையே சமீபத்தில் விவாகரத்து குறித்துப் பேசியிருந்த மேரி கோம், தனது முன்னாள் கணவர் தன்னை பணரீதியாக ஏமாற்றியதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மேரி கோமின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள அவரது முன்னாள் கணவர், மேரி கோம் கடந்த காலங்களில் தமக்குத் துரோகம் செய்ததாக தெரிவித்துள்ளார். மேரி கோம் 2013-ல் ஒரு ஜூனியர் குத்துச்சண்டை வீரருடனும், 2017 முதல் வேறொருவருடனும் உறவில் இருந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மேரி கோமின் கோடிக்கணக்கான பணத்தையோ அல்லது சொத்துக்களையோ தான் ஏமாற்றவில்லை என்றும், அவர் சுமத்தியுள்ள நிதி தொடர்பான அனைத்து புகார்களும் பொய்யானவை என்றும் ஓன்லர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும் "நான் அவரை மன்னிக்க முடியும், ஆனால் அவர் எனக்குச் செய்ததை என்னால் மறக்க முடியாது" என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். ங்களின் நான்கு குழந்தைகளும் தற்போது விடுதியில் தங்கிப் படிப்பதாகவும், மேரி கோம் அவர்களுக்குக் கல்விக்கட்டணம் செலுத்தினாலும், அவர்களை வளர்த்ததில் தனக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






