ஹேப்பி மூடுல இருக்கேன்... விஜய் மன உளைச்சல்ல இருப்பார் - கருணாஸ் கிண்டல்

விஜய் இடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளள்ளார். பிரபல நடிகை உடனான தொடர்பே இந்த விவாகரத்து முடிவுக்கு காரணம் என சங்கீதா தெரிவித்துள்ளார்.
ஹேப்பி மூடுல இருக்கேன்... விஜய் மன உளைச்சல்ல இருப்பார் - கருணாஸ் கிண்டல்
Published on

முக்குலத்தோர் புதுப்படைத் தலைவர் கருணாஸ் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி குறித்து திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், "வரும் சட்டமன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று தெரிவித்தார்.

அப்போது விஜய் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அந்த கேள்வியால் கடுப்பான கருணாஸ், "ஹேப்பி மூடுல இருக்கேன்.. இப்ப எதுக்கு விஜய் பற்றி? அவரே மன உளைச்சல்ல இருப்பார்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

தவெக தலைவரான விஜய் இடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளள்ளார். பிரபல நடிகை உடனான தொடர்பே இந்த விவாகரத்து முடிவுக்கு காரணம் என சங்கீதா தெரிவித்துள்ளார். இதை குறிப்பிடும் வகையில் தான் கருணாஸ் அவரே மன உளைச்சல்ல இருப்பார் என்று தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com