தாரமங்கலம் அருகேமகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை

லட்சுமி (50) கணவர் இறந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக தனது ஒரே மகன் விஜய் என்பவருடன் தனது அண்ணன் சுப்ரமணியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் விஜய் இறந்துள்ளார்.
தாரமங்கலம் அருகேமகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகி லுள்ள சிக்கம்பட்டி கிராமம்.சின்னகாடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (50) கணவர் இறந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக தனது ஒரே மகன் விஜய் என்பவருடன் தனது அண்ணன் சுப்ரமணியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் விஜய் இறந்துள்ளார். மகன் இறந்த வேதனையில் இருந்து மீளாத நிலையில் வேதனை யில் இருந்து வந்த லட்சுமி எலி மருந்தை சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்த லட்சுமியை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸபத் திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுபற்றி சுப்ரமணி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com