ஈரோடு அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை

கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஈரோடு அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை
Published on

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு அருகே கவின் பிரசாத் என்பவரின் மனைவி அமராவதி தனது குழந்தையை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை கொல்லப்பட்டது தொடர்பாகவும், தாய் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com