என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை கொலை"

    • கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு அருகே கவின் பிரசாத் என்பவரின் மனைவி அமராவதி தனது குழந்தையை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை கொல்லப்பட்டது தொடர்பாகவும், தாய் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • புகாரை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    நீலாங்கரை:

    சென்னை நீலாங்கரையில் பிறந்து 43 நாட்களே ஆன பெண் குழந்தையை 2-வது மாடியில் இருந்து வீசிக் கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கார் ஓட்டுநர் அருண் - பாரதி தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனிடையே இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் தாய் பாரதி போலீசில் புகார் அளித்துள்ளார்.

    புகாரை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    குழந்தைகளை கவனிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்ததால், 2-வது மாடியில் இருந்து ஒரு குழந்தையை மட்டும் கீழே வீசியதாக பாரதி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றினர்.
    • குழந்தையின் தலையை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் இரண்டரை வயது பெண் குழந்தையை தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    குழந்தை லெமோரியாவை தனது சொந்த மாமா சஞ்சய் கொலை செய்து தலையை துண்டித்துள்ளார். குழந்தையின் கழுத்தறுத்து கொலை செய்து தலையை குளத்தில் வீசிவிட்டு தப்பியுள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றினர்.

    பிறகு, குழந்தையின் தலையை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், குளத்தில் வீசப்பட்ட குழந்தையின் தலையை போலீசார் மீட்டனர்.

    கொலைக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகாத நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கழிவறைக்குள் இருந்து குழந்தையின் குரல் கேட்டு அங்கு நின்றவர்கள் திரண்டனர்.
    • மருத்துவமனை போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கண்டிராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் லாரா.

    நிறைமாத கர்ப்பிணியான இவர் இன்று காலை அரியலூர் அரசு மருத்துவமனையில் இருக்கும் தனது உறவினரை பார்ப்பதற்காக வந்தார்.

    அரசு மருத்துவமனை வார்டு பகுதிக்கு வந்ததும் லாராவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவர் அங்கிருந்த கழிவறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. உடனே அவர் குழந்தையை கழிவறைக்குள் வைத்து அமுக்கியுள்ளார்.

    கழிவறைக்குள் இருந்து குழந்தையின் குரல் கேட்டு அங்கு நின்றவர்கள் திரண்டனர்.

    அங்கு கதவை திறந்ததும் உள்ளே கழிவறை குழிக்குள் இறந்த நிலையில் குழந்தை கிடந்தது. உடனே லாரா அங்கிருந்து தப்ப முயன்றார். இதையடுத்து அப்பகுதியினர் அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். மருத்துவமனை போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தை பிறந்ததுமே அந்த குழந்தையை லாரா துடிக்க துடிக்க கொலை செய்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக லாராவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தவறான உறவில் பிறந்ததால் குழந்தையை லாரா கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    • காலையில் கிராம மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் (வயது 35). இவர் அப்பகுதி ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா(27). இவர்களுக்கு 1 ஆண் குழந்தையும் 1 பெண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில் இவர்களது வீட்டு அருகே கடந்த 7-ந்தேதி எரிக்கப்பட்ட குப்பையில் ஆண் குழந்தை உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் செந்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    செந்துறை போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார்.

    குழந்தை அன்று இரவு பிறந்த நிலையில் இறந்து கிடந்ததால் அந்த குழந்தை எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதையடுத்து சம்பவ இடம் அருகே உள்ள வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    திவ்யாவிடம் விசாரணை செய்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. முதலில் போலீசாரிடம் திவ்யா கூறுகையில், தனக்கு கடந்த சில மாதங்களாக மாதவிடாய் சரியாக வந்துள்ளதாகவும் ஆனால் வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்து மருத்துவம் செய்து வந்ததாகவும் இந்த நிலையில் அன்றைய தினம் இரவு தனக்கு குழந்தை இறந்து பிறந்தது .

    திடீரென குழந்தை பிறந்ததால் சந்தேகப்படுவார்கள் என்று அதிகாலை 5 மணியளவில் எனது உறவினர் ஒருவர் குப்பையை எரித்து கொண்டு இருந்தார். அப்போது யாருக்கும் தெரியாமல் தனக்கு பிறந்த குழந்தையை எரிந்த நெருப்பில் வீசிவிட்டு சென்றதாக நாடகம் ஆடினார்.


    அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    சிகிச்சை முடிந்த நிலையில் திவ்யா மற்றும் அவரது கணவர் மதிவண்ணன் ஆகியோரை பிடித்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது குழந்தையை எரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் கூறினர். இதையடுத்து கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். கைதான மதிவண்ணன் போலீசில் அளித்து ள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திவ்யா 3-வதாக கர்ப்பம் ஆனார். தான் கர்ப்பம் ஆனதை திவ்யா மறைத்து வந்தார். மாதம் ஆக ஆக வயிறு பெரிதாகி விட்டது. அது குறித்து கேட்டதற்கு வயிற்றில் கட்டி உள்ளதாக பொய் கூறினார்.

    இந்த நிலையில் அவருக்கு வீட்டில் குழந்தை பிறந்தது. அப்போது அந்த குழந்தையின் முகம் மற்றும் உருவத்தை பார்த்தபோது யாருக்கோ கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்று சந்தேகம் அடைந்தேன். இதனால் இருவருக்கும் இடையே அன்று இரவு சண்டை ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த நான் குழந்தையை தூக்கி கீழே வீசினேன். இதில் அடிபட்டு குழந்தை அழுதது. அழுகை சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக திவ்யா துணியால் குழந்தையின் வாயை அடைத்தார்.

    இதனால் குழந்தை இறந்து விட்டது. அதன் பிறகு இறந்த குழந்தையை அருகே இருந்த குப்பை தொட்டியில் போட்டு விட்டு வந்து விட்டோம். ஆனால் அந்த குழந்தை பாதி மட்டுமே எரிந்த நிலையில் காலையில் கிராம மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைதான மதிவண்ணன், திவ்யா ஆகிய 2 பேரும் செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்னஸ் ஜெப கிருபா திவ்யாவை போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கவும் மதிவண்ணனை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.

    • உறவினர் மேஸ்திரி மாணிக்கம் என்பவருடன் ஜெயசுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியது.
    • மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி நதியா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் காங்கரனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது27). இவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னை தனியார் மருத்துவமனையில் நர்ஸ்சாக பணிபுரிந்து வந்தார்.

    அப்போது அதே மருத்துவமனையில் சென்னை பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் எலக்ட்ரீஷனாக பணிபுரிந்து வந்தார். இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

    கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஜெயசுதா கருவுற்ற நிலையில் குணசேகரன் ஜெயசுதா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

    தாய் வீடான சந்தவாசல் காங்கரனந்தல் கிராமத்திற்கு ஜெயசுதா வந்தார். பின்னர் ஜெயசுதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    தனது குழந்தையான ஏனோக்ராஜ்னுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது ஜெயசுதாவின் உறவினர் மேஸ்திரி மாணிக்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி நதியா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    மாணிக்கம் தன்னுடைய குடும்பத்தினரை கைகழுவி விட்டு கள்ளக்காதலியான ஜெயசுதாவுடன வாழ்ந்து வந்தார். மற்றும் ஜெயசுதாவின் குழந்தையுடன் ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தார்.

    மாணிக்கம் தினந்தோறும் மது குடித்து விட்டு ஜெயசுதாவிடம் உன் குழந்தை எனக்கு பிறக்கவில்லை உன் முதல் கணவர் குணசேகரனுக்கு பிறந்தது என்று தினந்தோறும் 2 வயது குழந்தை ஏனோக்ராஜை தாக்கியும் கொடுமைபடுத்தியும் சூடு வைத்தும் தண்ணீர் தொட்டில் 2 கால்களை பிடித்து மூழ்கடித்து மற்றும் கட்டையால் தாக்கியும் கொடூரமான முறையில் கொடுமைபடுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    மேலும் கடந்த மாதம் 21ந் தேதி மேஸ்திரி மாணிக்கம் வழக்கம் போல் மது குடித்துவிட்டு ஜெயசுதாவிடம் வாக்குவாதம் செய்தார். ஆத்திரத்தில் 2 வயது குழந்தை ஏனோக்ராஜை கட்டையால் தாக்கியுள்ளார்.

    இதில் படுகாயமடைந்த குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இச்சம்பவம் குறித்து ஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர். 

    • சுவாதி தனது கணவரிடம் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாததால் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறினார்.
    • கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காளஹஸ்தி வாட்டர் ஹவுஸ் நகரை சேர்ந்தவர் முனிராஜா (வயது 22). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுவாதி (19). தம்பதிக்கு நிகில் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த முனி ராஜா சுவாதியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் நிக்கிலுக்கு கடந்த 4 நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என சுவாதி கணவரிடம் தெரிவித்தார். ஆனால் அவர் குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்லாமல் காலம் கடத்தி வந்தார்.

    இன்று அதிகாலை சுவாதி தனது கணவரிடம் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாததால் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறினார். அப்போது கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மகன் உயிருடன் இருந்தால்தானே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல கூறுவாய் என ஆத்திரமடைந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் 2 கால்களையும் பிடித்து வெளியே தூக்கி வந்து அருகில் இருந்த பாறையில் ஓங்கி அடித்தார். இதில் குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை கண்ட சுவாதி கதறி துடித்தார்.

    முனிராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சுவாதி குழந்தையை தூக்கிக் கொண்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனை கேட்ட சுவாதி அங்கேயே மயக்கம் அடைந்து விழுந்தார்.

    இதையடுத்து டாக்டர்கள் சுவாதிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காளஹஸ்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள முனிராஜை தேடி வருகின்றனர்.

    • ராகுல் ஏன் குழந்தையை கொன்றான் என்ற விவரம் போலீசார் விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும்.
    • குழந்தை தருண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அவரது உறவினர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சீராப்பள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கபில் வாசன் (வயது 32). இவரது மனைவி ராஜாமணி (24). இந்த தம்பதிக்கு நவியா ஸ்ரீ (5) என்ற பெண் குழந்தையும், தருண் (2 1/2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

    கபில்வாசன் அந்த பகுதியில் உள்ள சேகோ ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் அவர்களது உறவினர் தியாகராஜன் என்பவரது வீட்டின் மாடியில் குடியிருந்து வருகின்றனர். கபில்வாசன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் மனைவி ராஜாமணி மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் குழந்தை தருண் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறான்.

    அப்போது அதே ஊரைச் சேர்ந்த கபில் வாசனின் உறவினர் பாலமுருகன் என்பவரது மகன் ராகுல் (23) என்பவர் நேற்று இரவு கபில் வாசனின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வாலிபர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். ராஜாமணி தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்றுள்ளார்.

    அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தருண் கழுத்தில் வாலிபர் ராகுல் கையால் அடித்தும் காலால் உதைத்தும் நெஞ்சில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தை தருண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். உடனடியாக குழந்தையை ராசிபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் காண்பித்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தருண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு குழந்தை தருணை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து டாக்டரிடம் காண்பித்தனர். அங்கிருந்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அதன் பேரில் குழந்தை தருண் உடல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராகுலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் இனஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ராகுல் ஏன் குழந்தையை கொன்றான் என்ற விவரம் போலீசார் விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும். குழந்தை தருண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அவரது உறவினர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். குழந்தையின் உடலை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது. 

    • ஹாசினி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது சுவற்றில் வீசி கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • தப்பியோடிய சக்திவேல்-ஹேமலதா ஆகியோரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் 3-வது தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், சென்னை பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என கூறி ஒரு தம்பதியினர் குடியேறினர்.

    அவர்கள் சக்திவேல் என்ற திலீப்குமார், ஹேமலதா என்ற பெயரில் ஹாசினி(வயது 2) என்ற குழந்தையுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் வேலைக்கு சென்று வந்தனர்.

    இந்நிலையில் குழந்தை ஹாசினி வீட்டு சுவரில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்ததாக கூறி, கடந்த மாதம் 31-ந்தேதி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், விளையாடிக்கொண்டிருந்தபோது ஹாசினி தவறி கீழே விழுந்துவிட்டதாக அந்த தம்பதி தெரிவித்தனர். சுமார் 4 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் கடந்த 4-ந்தேதி ஹாசினி உயிரிழந்தார்.

    இதனிடையே 3-ந்தேதி மாலை தங்களை பெற்றோர் என கூறி வந்த தம்பதி தலைமறைவாகினர். இதனால் ஆலங்குளம் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. தலைமறைவான 2 பேரும் ஹாசினிக்கு உண்மையான பெற்றோர் தானா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    இதற்கிடையே ஹாசினியின் உண்மையான தந்தையான பெங்களூருவை சேர்ந்த திலீப்குமார் தகவல் அறிந்து ஆலங்குளத்திற்கு வந்து ஹாசினி உடலை பெற்று அடக்கம் செய்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஹேமலதாவுக்கும், அவருக்கும் திருமணமாகி சில காரணங்களால் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

    • குழந்தை ஜெகநாதன் கடந்த மாதம் விளையாடி கொண்டிருந்த போது வீட்டு மாடி படியில் இருந்து தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக நந்தினி கூறினார்.
    • ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை டிஸ்சார்ஜ் ஆன நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி காலை இறந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஆலூரைச் சேர்ந்தவர் சக்தி (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கட்டிட பணியில் ஈடுபட்ட போது தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார். இவரது மனைவி நந்தினி (25).

    இவர்களுக்கு பிரவீன் (6), ஜெகநாதன் (3) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் பிரவீனை ஓசூர் அருகே உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நந்தினி சேர்த்து விட்டு குழந்தை ஜெகநாதனுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் குழந்தை ஜெகநாதன் கடந்த மாதம் விளையாடி கொண்டிருந்த போது வீட்டு மாடி படியில் இருந்து தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக நந்தினி கூறினார். ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை டிஸ்சார்ஜ் ஆன நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி காலை இறந்தது. இதையடுத்து குழந்தையின் உடல் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தனது பேரன் சாவில் சந்தேகம் உள்ளதாக நந்தினியின் தாயார் வள்ளி அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நந்தினியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலன் தனது மகனை கொன்றதை நந்தினி ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து நந்தினியின் கள்ளக்காதலனான ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    கணவர் இறந்த பிறகு நந்தினி 2 குழந்தைகளுடன் ஓசூர் தேர்பேட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவளுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நான் அடிக்கடி நந்தினியுடன் உல்லாசமாக இருந்து வந்தேன். கடந்த மாதம் 6-ந் தேதி நந்தினி வீட்டிற்கு சென்று அவளுடன் உல்லாசமாக இருந்தேன்.

    குழந்தை எங்களின் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்தது. அதனால் ஆத்திரத்தில் நான் பீர்பாட்டிலால் குழந்தையின் தலையில் தாக்கினேன். இதில் குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ஒரு நாள் கழித்து குழந்தையை ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் நந்தினி சேர்த்தாள். அங்கு குழந்தை படியில் இருந்து விழுந்ததில் காயம் அடைந்ததாக கூறி நாடகமாடினார். பின்னர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை 22-ந் தேதி டிஸ்சார்ஜ் ஆனது. அங்கிருந்து வீட்டிற்கு வந்த குழந்தை கடந்த 25-ந் தேதி காலை திடீரென இறந்து விட்டது. பின்னர் உடலை யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் நாங்கள் 2 பேரும் புதைத்து விட்டோம். நந்தினியின் தாய் கொடுத்த புகாரால் நான் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    • இசக்கியம்மாள் எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.
    • மாயமான குழந்தை ஊர் கிணற்றில் சடலமாக மிதந்தது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கட்டார்குளத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). ஆட்டோ டிரைவர்.

    இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற இந்து (23). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

    இசக்கியம்மாளுக்கு கடந்த 7 நாட்களுக்கு முன் 2-வதாக பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை ரமேஷ் சவாரிக்காக ஆட்டோவில் சேரன்மகாதேவி சென்று விட்டார்.

    இசக்கியம்மாள் எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் திடுக்கிட்ட அவர் தனது கணவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தை மாயமானது பற்றி தகவல் தெரிவித்தார்.

    இதற்கிடையே ஆட்டோ ஓட்டி சென்ற ரமேஷ் சேரன்மகாதேவி அருகே சென்றபோது விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இதனால் அவர் அந்த வழியாக வந்த ஒருவரது மோட்டார் சைக்கிளில் ஏறி வந்து கொண்டிருந்தார்.

    குழந்தையை காணவில்லை என்றதும் அவரும் பதறியபடி வீட்டிற்கு வந்தார். உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் குழந்தையை தேடினர். இதனிடையே மாயமான குழந்தை ஊர் கிணற்றில் சடலமாக மிதந்தது. இதைக்கண்ட உறவினர்கள் குழந்தையின் சடலத்தை மீட்டனர்.

    இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் குழந்தையின் தாயான இசக்கியம்மாளே குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    ஏற்கனவே இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையும் பிறந்து 20 நாட்களிலேயே தொட்டிலில் பிணமாக கிடந்துள்ளது. இசக்கியம்மாளுக்கு மனநிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    போலீசார் குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் குழந்தையின் வீடு, அது சடலமாக கிடந்த கிணற்றையும் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் களக்காடு பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ததை பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற காரணத்தால் பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • வருணை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சென்னை:

    சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே காரணை பெரியார் நகரில் வசித்து வருபவர் வருண். இவரது மனைவி விஜயலட்சுமி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வருணின் பெற்றோருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்துள்ளது.

    திருமணத்துக்கு முன்பே வருணுடன் நெருங்கி பழகியதால் விஜயலட்சுமி கர்ப்பமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வருணை அழைத்து பேசி இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். அப்போது வருண் இந்த திருமணத்தில் எனது பெற்றோருக்கு விருப்பம் இல்லை. அவர்கள் வரமாட்டார்கள். பின்னர் பேசி சமாதானம் செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளார். வருணின் பெற்றோர் இல்லாமலேயே திருமணம் அரங்கேறி உள்ளது.

    இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜயலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது பெற்றோருக்கு தெரியாமலேயே வருண் இந்த குழந்தையை வளர்த்து வந்தார். திருமணத்துக்கு பின்னர் மாமனார் வீட்டின் ஆதரவுடனேயே வருண் வசித்து வந்த நிலையில் மாமனார் குடும்பத்தினருடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது பெற்றோருடன் சென்று விடலாம் என்று வருண் எண்ணியுள்ளார்.

    வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து குழந்தையையும் பெற்றுவிட்டது தெரிந்தால் தனது பெற்றோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைத்த வருண் தான் பெற்றெடுத்த குழந்தை என்றும் பாராமல் 4 மாத ஆண் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டார். இதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குழந்தையை வெளியில் அழைத்துச் சென்ற வருண் வாய், மூக்கை பொத்தி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.

    பின்னர் உடலை சிறிய படுக்கை விரிப்பில் சுற்றி பெரும்பாக்கம் சுடுகாட்டு பகுதிக்கு உடலை தூக்கிச் சென்று புதரில் வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல இருந்துள்ளார். இதன் பின்னர் மனைவி விஜயலட்சுமியிடம் சென்று, தமது குழந்தை கூடுவாஞ்சேரியில் எனது தோழி மகாலட்சுமியின் வீட்டில் உள்ளது. எங்கள் வீட்டுக்கு சென்று நாம் காதலிக்கும் விஷயத்தை முதலில் சொல்வோம். குழந்தையை பற்றி எதுவும் கூறிவிடாதே என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். விஜயலட்சுமியும் இதனை சரி என கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார்.

    இதன் பின்னர் விஜயலட்சுமியை அழைத்துக் கொண்டு தனது பெற்றோரை பார்க்க சென்ற வருண், இவர்தான் எனது காதலி, எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறியுள்ளார். இதனை நம்பி வருணின் பெற்றோரும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து விஜயலட்சுமி, வருணிடம் குழந்தையை வாங்கிக் கொண்டு வந்து விடலாம். நான் உங்கள் வீட்டில் பேசி சமாதானம் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் வருணோ குழந்தை இருக்கும் இடம் பற்றி முன்னுக்குப்பின் முரணாக பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விஜய லட்சுமி, தனது கணவரின் தோழியான மகாலட்சுமியின் வீட்டை தேடி கண்டுபிடித்து நேரில் போய் விசாரித்தார்.

    அப்போது மகாலட்சுமி, விஜயலட்சுமியிடம் உங்கள் குழந்தையை 4 மாதங்களுக்கு முன்பே வருண் அழைத்து சென்று விட்டார். 3 நாட்கள் மட்டுமே எனது வீட்டில் குழந்தை இருந்தது என்று கூறி குண்டை தூக்கி போட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்தே விஜயலட்சுமி உஷாராகி மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ரவி மற்றும் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    வருணிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் 4 மாத குழந்தையை கொலை செய்து உடலை முட்புதரில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து உடல் வீசப்பட்ட இடத்துக்கு வருணை அழைத்துச் சென்ற போலீசார் சம்பவ இடத்தில் இருந்து எலும்புக் கூடுகள் சிலவற்றை மீட்டுள்ளனர். குழந்தையின் உடலை சுற்றி வீசிய சிறிய படுக்கையும் கையில் அணிவிக்கப்பட்டிருந்த சிறிய வளையத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். வருணை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ததை பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற காரணத்தால் பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×