என் மலர்
நீங்கள் தேடியது "father arrested"
- வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ததை பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற காரணத்தால் பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வருணை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை:
சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே காரணை பெரியார் நகரில் வசித்து வருபவர் வருண். இவரது மனைவி விஜயலட்சுமி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வருணின் பெற்றோருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்துள்ளது.
திருமணத்துக்கு முன்பே வருணுடன் நெருங்கி பழகியதால் விஜயலட்சுமி கர்ப்பமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வருணை அழைத்து பேசி இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். அப்போது வருண் இந்த திருமணத்தில் எனது பெற்றோருக்கு விருப்பம் இல்லை. அவர்கள் வரமாட்டார்கள். பின்னர் பேசி சமாதானம் செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளார். வருணின் பெற்றோர் இல்லாமலேயே திருமணம் அரங்கேறி உள்ளது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜயலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது பெற்றோருக்கு தெரியாமலேயே வருண் இந்த குழந்தையை வளர்த்து வந்தார். திருமணத்துக்கு பின்னர் மாமனார் வீட்டின் ஆதரவுடனேயே வருண் வசித்து வந்த நிலையில் மாமனார் குடும்பத்தினருடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது பெற்றோருடன் சென்று விடலாம் என்று வருண் எண்ணியுள்ளார்.
வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து குழந்தையையும் பெற்றுவிட்டது தெரிந்தால் தனது பெற்றோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைத்த வருண் தான் பெற்றெடுத்த குழந்தை என்றும் பாராமல் 4 மாத ஆண் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டார். இதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குழந்தையை வெளியில் அழைத்துச் சென்ற வருண் வாய், மூக்கை பொத்தி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை சிறிய படுக்கை விரிப்பில் சுற்றி பெரும்பாக்கம் சுடுகாட்டு பகுதிக்கு உடலை தூக்கிச் சென்று புதரில் வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல இருந்துள்ளார். இதன் பின்னர் மனைவி விஜயலட்சுமியிடம் சென்று, தமது குழந்தை கூடுவாஞ்சேரியில் எனது தோழி மகாலட்சுமியின் வீட்டில் உள்ளது. எங்கள் வீட்டுக்கு சென்று நாம் காதலிக்கும் விஷயத்தை முதலில் சொல்வோம். குழந்தையை பற்றி எதுவும் கூறிவிடாதே என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். விஜயலட்சுமியும் இதனை சரி என கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார்.
இதன் பின்னர் விஜயலட்சுமியை அழைத்துக் கொண்டு தனது பெற்றோரை பார்க்க சென்ற வருண், இவர்தான் எனது காதலி, எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறியுள்ளார். இதனை நம்பி வருணின் பெற்றோரும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து விஜயலட்சுமி, வருணிடம் குழந்தையை வாங்கிக் கொண்டு வந்து விடலாம். நான் உங்கள் வீட்டில் பேசி சமாதானம் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் வருணோ குழந்தை இருக்கும் இடம் பற்றி முன்னுக்குப்பின் முரணாக பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விஜய லட்சுமி, தனது கணவரின் தோழியான மகாலட்சுமியின் வீட்டை தேடி கண்டுபிடித்து நேரில் போய் விசாரித்தார்.
அப்போது மகாலட்சுமி, விஜயலட்சுமியிடம் உங்கள் குழந்தையை 4 மாதங்களுக்கு முன்பே வருண் அழைத்து சென்று விட்டார். 3 நாட்கள் மட்டுமே எனது வீட்டில் குழந்தை இருந்தது என்று கூறி குண்டை தூக்கி போட்டுள்ளார்.
இதனை தொடர்ந்தே விஜயலட்சுமி உஷாராகி மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ரவி மற்றும் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
வருணிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் 4 மாத குழந்தையை கொலை செய்து உடலை முட்புதரில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து உடல் வீசப்பட்ட இடத்துக்கு வருணை அழைத்துச் சென்ற போலீசார் சம்பவ இடத்தில் இருந்து எலும்புக் கூடுகள் சிலவற்றை மீட்டுள்ளனர். குழந்தையின் உடலை சுற்றி வீசிய சிறிய படுக்கையும் கையில் அணிவிக்கப்பட்டிருந்த சிறிய வளையத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். வருணை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ததை பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற காரணத்தால் பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 13 வயது மாணவி ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- விமலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவையை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவியின் தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதனையடுத்து சிறுமியின் தாய் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விமல் (வயது 35) என்பவரை திருமணம் செய்தார்.மாணவியின் தாய் கூலி வேலை செய்து வருகிறார். அவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் மாணவியின் வளர்ப்பு தந்தை மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதனை வெளியே கூறினார் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் மாணவி தனது தாயிடம் சொல்லாமல் இருந்தார்.இதனை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்ட விமல் தொடர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் காரணமாக மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார்.
இதனையடுத்து மாணவியை அவரது தாய் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 2 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர். இது குறித்து டாக்டர்கள் அவரது தாயிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் தனது மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரித்தார்.
அப்போது மாணவி வளர்ப்பு தந்தை விமல் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாகவும், அவர் தான் கர்ப்பத்துக்கு காரணம் என தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் 13 வயது மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தை விமலை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது உறுதியானது.
- பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த அப்பாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் புகார் கொடுத்தார். இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் மகேஷ் ஆலோசனையின்பேரில், மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.
அந்த சிறுமி கூறுகையில், நான் ஜெய்ஹிந்த்புரம் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறேன். என் தந்தை பெயிண்டராக உள்ளார். அவர் எனக்கு ஒரு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்தார். இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். நான் உயிருக்கு பயந்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்தேன். அவரது தொல்லை சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. வேறு வழியின்றி தாயாரிடம் விஷயத்தை தெரிவித்தேன் என்றார்.
இதனையடுத்து போலீசார் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது உறுதியானது. பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த அப்பாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- தர்மராஜ் தனக்கு உடல்நிலை சரியாகி விட்டதாக கூறி மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டார். இதுபற்றி அபிஷா மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
- நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி குழந்தையை கொலை செய்ய முயற்சி செய்த தர்மராஜை கைது செய்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கீழகோடன்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். கட்டிட தொழிலாளி.
இவருக்கும் பரப்பாடி அருகே உள்ள பாண்டிச்சேரியை சேர்ந்த அபிஷா (வயது 23) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு எட்வின் (3), செல்லம் (2) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று இவரது 2-வது ஆண் குழந்தை செல்லத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அபிஷா, தர்மராஜிடம் பணம் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அபிஷா குளிப்பதற்காக அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த போது, ஆண் குழந்தை செல்லம் அழுதபடி இருந்தது. இதுபற்றி கணவர் தர்மராஜிடம் கேட்டதற்கு அவர் குழந்தைக்கு எறும்பு பொடியை பாலில் கலந்து கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அபிஷா உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக முனைஞ்சிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
அப்போது தர்மராஜ் தானும் எறும்பு பொடியை குடித்து விட்டதாக கூறி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ளார். அங்கிருந்து 2 பேரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே தர்மராஜ் தனக்கு உடல்நிலை சரியாகி விட்டதாக கூறி மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டார். இதுபற்றி அபிஷா மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி குழந்தையை கொலை செய்ய முயற்சி செய்த தர்மராஜை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், தர்மராஜின் பெற்றோருக்கு சொந்தமாக வீடு, தோட்டம் உள்ளது. இதில் தர்மராஜிக்கு இதுவரை பங்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவருக்கும், அவரது பெற்றோருக்கும் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் தர்மராஜின் தாயார் செல்வகனிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அபிஷா, மாமியார் வீட்டிற்கு சென்று வீட்டு வேலைகள் செய்து கொடுத்தார். இது தர்மராஜிக்கு பிடிக்கவில்லை. இதையொட்டி அவர் மனைவியிடமும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
அந்த ஆத்திரத்தில் குழந்தைக்கு விஷம் குடித்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- வர பிரசாத்தின் மூத்த மகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார்.
- விரக்தியில் இருந்த வர பிரசாத் தனது 2-வது மகள் நன்றாக படிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் வர பிரசாத். இவர் சவ ஊர்வலம் வாகன டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருந்தனர். 2-வது மகள் லிகிதா ஸ்ரீ (வயது 16).
இவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வந்தார். பிரசாத்தின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஆனாலும் தனது மகள்களை நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என அவர் எண்ணினார்.
ஆனால் அவருடைய மூத்த மகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த வர பிரசாத் தனது 2-வது மகள் நன்றாக படிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் லிகிதா ஸ்ரீயும் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இவரது காதல் விவகாரம் தந்தை வரப்பிரசாத்திற்கு தெரியவந்தது. அப்போது தனது மகளிடம் நீ காதலிக்கும் வாலிபர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளது. எனவே அவனை நீ காதலிக்க கூடாது என கட்டுப்பாடு விதித்தார்.
இருப்பினும் லிகிதா ஸ்ரீ வாலிபர் உடன் தொடர்ந்து பழகி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வரப்பிரசாத் நேற்று மாலை மகள் கல்லூரியில் இருந்து வந்தவுடன் வாலிபர் உடனான காதலை கைவிடும்படி எச்சரித்தார்.
இதற்கு லிகிதாஸ்ரீ மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த வரபிரசாத் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகளின் கழுத்தை அறுத்தார். கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. வலி தாங்க முடியாமல் லிகிதா கதறி துடித்தார்.
சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இறந்து போன மகள் உடலுடன் செல்போனில் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
அப்போது அவர் தனது பேச்சை கேட்காமல் வாலிபரை காதலித்ததால் மகளை கழுத்து அறுத்துக் கொண்டதாக வீடியோவில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசில் சரண் அடைந்தார்.
தனக்கு பிடிக்காத வாலிபரை காதலித்ததற்காக பெற்ற மகளையே தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நேற்றும் வழக்கம்போல் மகாராஜன் குடித்துவிட்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
- தந்தையுடன் தகராறில் ஈடுபட்ட மகாராஜன் மதுபோதையில் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). விவசாயி.
இவரது மகன் மகாராஜன்(24). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் அதன்பின்னர் மகாராஜன் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன்பின்னர் மகாராஜனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து போதையில் தனது பெற்றோரிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.
நேற்றும் வழக்கம்போல் மகாராஜன் குடித்துவிட்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தந்தையுடன் தகராறில் ஈடுபட்ட அவர் மதுபோதையில் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார்.
இதற்கிடையே தினமும் தகராறில் ஈடுபட்டு வருவதால் மனவேதனை அடைந்த ஆறுமுகம் ஆத்திரம் அடைந்தார். நள்ளிரவில் வீட்டில் இருந்த கடப்பாறையை எடுத்துச்சென்ற அவர், அங்குள்ள அறையில் தூங்கி கொண்டிருந்த மகாராஜனின் தலையில் சரமாரியாக தாக்கினார்.
இதில் மகாராஜனின் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. சிறிது நேரத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் ஆறுமுகம் மானூர் போலீசில் சரண் அடைந்தார். அவர் தெரிவித்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையிலான போலீசார் ஆறுமுகம் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.
அங்கு படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த மகாராஜன் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். கொலையான மகாராஜன் பெயர் மானூர் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
- தீபாவளி பண்டிகை நாளில் மது குடித்துவிட்டு தகராறு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவனியாபுரம் போலீசார், மகனை கத்தியால் குத்திக்கொன்ற செல்வராஜை கைது செய்தனர்.
அவனியாபுரம்:
மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). இரும்பு வியாபாரி. இவர் தனது மகன் கங்காதரன் (34), மருமகள், குழந்தைகள் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி தினமான நேற்று காலை முதலே கங்காதரன் பலமுறை மதுபானக்கடைக்கு சென்று மது குடித்து வந்துள்ளார். மது போதையில் வீட்டிற்கு வந்த கங்காதரன் தந்தையிடம் தொடர்ந்து மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். போதை அதிகரித்ததும் தந்தை, மனைவி ஆகியோரை அவதூறாக பேசி தகராறு செய்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கங்காதரன் நெஞ்சில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கங்காதரனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவனியாபுரம் போலீசார், மகனை கத்தியால் குத்திக்கொன்ற செல்வராஜை கைது செய்தனர்.
தீபாவளி பண்டிகை நாளில் மது குடித்துவிட்டு தகராறு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டு தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
- மாணவியின் தாய் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பெற்ற 2 மகளிடம் தந்தை ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவத்தில் முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதே போல் மற்றொரு சம்பவம் புதுவையில் நடந்துள்ளது. புதுவை முதலியார்பேட்டை போலீஸ் நிலைய எல்கைக்குட்டபட்ட பகுதியை சேர்ந்தவர் 45 வயது கட்டிட தொழிலாளி. இவருக்கு 40 வயது மனைவி மற்றும் 12 வயது மகள் உள்பட 2 மகள்கள் உள்ளனர். இந்த மாணவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி வீட்டில் குளித்துக்கொண்டிருந்தார். இதனை அந்த மாணவியின் தந்தையான கட்டிட தொழிலாளி எட்டிப்பார்த்துள்ளார். மேலும் அந்த மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் தாய் தனது கணவரிடம் கண்டித்துள்ளார். ஆனால் அவர் தவறை திருத்திக்கொள்ளவில்லை என தெரிகிறது.
இதையடுத்து அந்த மாணவியின் தாய் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே சில்லத்தூர் வெட்டிகாட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்தாண்டு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பட்டுக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் ஒரு வாலிபரை கைது செய்தனர். பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த சிறுமி, ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை யாருக்கு சொந்தம் என்பதை அறிவதற்காக சிறுமிக்கு மரபணு சோதனை செய்யப்பட்டது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்பில்லை என தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுமி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர் பாச்சூரை சேர்ந்த பொன்னையன் மகன் பால்ராஜ் (வயது 27) என தெரிவித்தார். இது தொடர்பாக விசாரித்து, பட்டுக்கோட்டை மகளிர் போலீசார் பால்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.
கைதான பால்ராஜூக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பாரண்டபள்ளி பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சான்பாஷா (52). பஞ்சுமிட்டாய் வியாபாரி. இவருக்கு மனைவி, 10 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த சான்பாஷா பஞ்சு மிட்டாய் தருகிறேன் வா எனக்கூறி அருகில் உள்ள தனது வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்றார்.
பின்னர் அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் சிறுமி அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சான்பாஷாவை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
அவரை திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து சான்பாஷாவை கைது செய்தனர்.
பின்னர், அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.