குருவாயூரில் லாட்ஜூக்கு அழைத்துச்சென்று 2 மகள்களை கொன்றவர் கைது

சந்திரசேகர் மணிகட்டு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.ஒரு மகள் வாயில் நுரை தள்ளிய நிலையிலும், மற்றொரு மகள் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையிலும் பிணமாக கிடந்தார்.
சந்திரசேகர்
சந்திரசேகர்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அம்பலவயல் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு சிவானந்தனா (வயது 12), தேவனந்தனா (9) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

கடந்த மாதம் (ஜூன்) 12-ந்தேதி மகள்கள் 2 பேரையும் குருவாயூர் பாடிச்சேரே நாடாவிற்கு அழைத்துச்சென்றார். அங்குள்ள லாட்ஜில் மகள்களுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் அவர்கள் தங்கி இருந்த அறை திறக்கப்படாமல் இருந்ததால் சோதனை செய்யப்பட்டது. அப்போது சந்திரசேகர் மணிகட்டு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவரது மகள்கள் அதே அறையில் இறந்து கிடந்தனர்.

ஒரு மகள் வாயில் நுரை தள்ளிய நிலையிலும், மற்றொரு மகள் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையிலும் பிணமாக கிடந்தார். காயத்துடன் கிடந்த சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகள்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிகிச்சையில் இருந்த சந்திரசேகரிடம் விசாரித்தபோது 2 மகள்களில் ஒருவருக்கு ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்தும், மற்றொரு மகளை தூக்கில் தொங்க விட்டும் கொன்றது தெரியவந்தது. மேலும் தனது கையை பிளேடால் அறுத்தும் தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சந்திரசேகர் டிஸ்சார்ஜ் ஆனார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். எதற்காக மகள்களை கொன்றார்? என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com