குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை- மாரடைப்பால் இறந்ததாக நாடகம்

குடித்து விட்டு ஊர் சுற்றி வந்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.கொலை குறித்து திட்டக்குடி டி. எஸ். பி. காவியா விசாரணை நடத்தி வருகிறார்.
கைது செய்யப்பட்ட ஆறுமுகம்.
கைது செய்யப்பட்ட ஆறுமுகம்.
Published on

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொடிக்களம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவரது மகன் விநாயகம் (28). இவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆறுமுகத்துக்கும் விநாயகத்திற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடித்துவிட்டு வீடு திரும்பிய விநாயகத்துடன் சண்டை ஏற்பட்டு மோதலாக மாறியது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் தனது மகன் விநாயகம் நெஞ்சில் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த விநாயகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் விநாயகம் மாரடைப்பால் இறந்ததாக கூறி உடலை அடக்கம் செய்ய தயார் செய்து கொண்டிருந்த நிலையில் ஆவினங்குடி போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் விநாயகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மகனை கொலை செய்து நாடகமாடிய ஆறுமுகத்தை கைது செய்தனர். இதுகுறித்து திட்டக்குடி டி. எஸ். பி. காவியா விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com