search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panruti suicide"

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அழகப்ப சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பெரியநாயகம் (வயது 38), விவசாயி. இவரது மனைவி அருள்ஜெயா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை பெரியநாயகம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பெரியநாயகம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து பெரியநாயகம் எதற்காக வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி அருகே காதலன் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து காதலியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கரும்பூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன்(வயது 26). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் செல்வகுமாரி(20). கடலூரில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இந்த நிலையில் பார்த்தீபனுக்கும் செல்வகுமாரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இவர்களின் காதல் விவரம் செல்வகுமாரியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் செல்வகுமாரிக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

    பார்த்தீபனுக்கு தெரிய வந்தது. அவர் மனம் உடைந்தார். நேற்று முன்தினம் இரவு பார்த்தீபன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தனது காதலன் தற்கொலை செய்து கொண்டது பற்றி தகவல் அறிந்த செல்வ குமாரி மிகுந்த மனவேதனை அடைந்தார்.

    வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    வீட்டில் இருந்தவர்கள் செல்வகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    பண்ருட்டியில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி வி.எஸ்.பி. நகரில் வசித்து வருபவர் பழனி (வயது 50) பெயிண்டர். இவரது மகன் வினோத் (25) என்பவருக்கும், கல்குணம் கிராமத்தை சேர்ந்த சூர்யா (21) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

    திருமணத்துக்கு வரதட்சணையாக 20 பவுன் நகை, ரூ.2.50 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை வாங்கி கொடுத்துள்ளனர்.

    மேலும் வரதட்சனை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் சூர்யாவை கொடுமைப்படுத்தி தாக்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு விரட்டியுள்ளனர்.

    இது குறித்து பண்ருட்டி மகளிர் போலீசில் சூர்யா புகார் செய்தார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. வீட்டுக்கு போய் நகை வாங்கி வா என கணவன், மாமனார், மாமியார் ஆகியோர் சூர்யாவிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சூர்யா துப்பட்டாவால் கடந்த 14-ந் தேதி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி டி.எஸ்.பி. சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்பிரியா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடலூர் சப்-கலெக்டர் சரயுவும் விசாரணை நடத்தினார்.

    இதனை தொடர்ந்து சூர்யாவின் கணவர் வினோத், மாமனார் பழனி (50), மாமியார் ராஜேஸ்வரி (45) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்

    அவர்கள் அனைவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கணேஷ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    புளூவேல்கேம் விளையாடிய என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குச்செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சேஷாத்திரி (வயது 22). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார்.

    புதுவை மேட்டுக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சேஷாத்திரி அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு 7 மணி அளவில் பணிமுடிந்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் பெற்றோர் யாரும் இல்லை. பின்பு தனது அறையில் சேஷாத்திரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து புதுபேட்டை போலீசில் புகார் செய்யப்பட் டது. இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய சேஷாத்திரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    பின்பு தற்கொலை செய்து கொண்ட சேஷாத்திரியின் அறையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஆவி மற்றும் பேய்கள் பற்றிய கதை புத்தகங்கள் ஏராளமாக இருந்தன. அவற்றை போலீசசர் கைப்பற்றினர்.

    மேலும் சேஷாத்திரி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தனர். அதில் புளூவேல் (நீலதிமிங்கல விளையாட்டு) விளையாடியதற்கான அடையாளங்கள் தெரிந்தது. புளூவேல்கேம் விளையாடிய சேஷாத்திரி மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    புளூவேல்கேம் விளையாடிய என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேஷாத்திரிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ×