search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "தற்கொலை"

  • நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரையும் பொதுமக்கள் சடலமாக மீட்டனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆலங்காயம்:

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 35), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி அனிதா(32) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

  இவர் கூலி வேலை செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருக்கு சென்றார். அங்கு சந்திரசேகருக்கு ஆந்திர மாநிலம், ஆவலங்குப்பம் பகுதியை சேர்ந்த தேவராஜ் மனைவி பூஜா (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

  நாளடைவில் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், கள்ளத்தொடர்பாக மாறி தனிமையில் சந்தித்து வந்தனர்.

  இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சந்திரசேகர், பூஜாவை தனியாக வாணியம்பாடிக்கு அழைத்து வந்தார். வாடகை வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

  இதனை அறிந்த பூஜாவின் உறவினர்கள் இன்று காலை வாணியம்பாடி வந்தனர். வாணியம்பாடி தேங்காய்பட்டரை பகுதியில் சந்திரசேகருடன் தங்கியிருந்த பூஜாவை காரில் அவரது உறவினர்கள் அழைத்து செல்ல முயன்றனர்.

  அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது காரின் கண்ணாடி உடைத்து, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.

  அப்போது ஆத்திரமடைந்த சந்திரசேகர் ஓடிச் சென்று அருகில் இருந்த விவசாய கிணற்றில் குதித்தார். இதனைப் பார்த்த பூஜாவும் மற்றொரு விவசாய கிணற்றில் ஓடிப்போய் குதித்தார். இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

  நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரையும் பொதுமக்கள் பிணமாக மீட்டனர்.

  இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தேனி அருகே குடும்ப பிரச்சினையில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
  தேனி:

  தேனி அருகே கோட்டூரை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி அம்பிகா (வயது36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

  இதனால் மனமுடைந்த அம்பிகா விஷ மாத்திரை  தின்று மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அம்பிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  உத்தமபாளையம் அருகே சின்ன ஓவுலாபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜா (27). கடந்த சில ஆண்டுகளாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  தேவாரத்தை சேர்ந்தவர் சிவராமன் (40). இவர் கடந்த சில வருடங்களாக சென்னையில் டிரைவராக வேலை பார்தது வந்தார். குடி பழக்கத்திற்கு அடிமையானதால் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்த அவர் திடீரென வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  சத்தியமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சத்தியமங்கலம்:

  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் அழகிரிகாலனி பகுதியை சேர்ந்தவர் ரகு. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் சவிதா (23). கடந்த 2015-ம் ஆண்டு சவிதா வெங்கடாசலம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அரியப்பம்பாளையம் பகுதியில் உள்ள ரோஜா நகரில் சவிதா கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.

  இந்நிலையில் நேற்று ரகுவின் செல்போனிற்கு தொடர்பு கொண்ட வெங்கடாசலம் உங்கள் மகள் சவிதா தூக்கு மாட்டி இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

  இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடாசலம் சவிதா வீட்டிற்கு சென்று பார்த்தபோது மகள் மூச்சுப் பேச்சில்லாமல் இறந்த நிலையில் சோபாவில் படுக்கவைக்கப்பட்டு இருந்தார்.

  வீட்டில் உள்ள படுக்கை அறையில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சவிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்நிலையில் சவிதாவின் தந்தை ரகு தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  வேலகவுண்டன்பட்டி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன் பட்டி அருகே இளநகர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது 50) .பெயிண்டர். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.  

  இதில் மூத்த மகள் நளினியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாசக்கல்பட்டி இளங்கோநகர் பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். 2 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தைகள் இல்லை .இந்நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் நாளினி இருந்து உள்ளார். 

  கடந்த வாரம் ஞாயிற்றுக்கி–ழமை சுந்தரத்தின் உறவினர் பெருமாள் இறந்ததின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நளினியும், ரகுபதியும் சொந்த ஊரில் இருந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் சுந்தரத்தின் மனைவி வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டு போடப்பட்டு இருந்தது.  

  கதவை தட்டியும் திறக்காததால்  சந்தேகம் அடைந்த தாய், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு மகள் நளினி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு கதறி அழுதார்.  அக்கம்பக்கத்தினரை அழைத்து நளினி உடலை மீட்டனர். 

   இதுகுறித்து சுந்தரம் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்து தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
  கடலூர் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கடலூர்:

  கடலூர் அருகே நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி சேர்ந்தவர் ஆனந்த குமார் (வயது 37). வெல்டிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் தனக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத நிலையில் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

  சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த ஆனந்த குமார் மண்ணெண்ணையை திடீரென்று தன் மீது தானாக ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது அக்கம் பக்கத்தினர் தீயணைத்து ஆனந்த குமாரை மீட்டு கடலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். ஆனால் ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

  இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே கங்கநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 72) .இவரது மகள் மணிமேகலை( 46) . இவர் குடும்பத்தினருடன் தனது தந்தை வீட்டில் குடியிருந்து கூலி வேலைக்குச் சென்று வருகிறார். 

  மணிமேகலைக்கு திருமணமாகி ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர் .ராமசாமி ஒரு வாரத்திற்கு முன் சாலை விபத்து ஏற்பட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 26-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துவிட்டார் .இந்நிலையில் இவருக்கு தோள்பட்டையில் வலி இருந்து வந்தது. அது சரியாகததால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்திருந்த போது திடீரென மாயமனார். 

  மணிமேகலை மற்றும் குடும்பத்தினர் அவரை தேடிப் பார்த்தபோது அங்கிருந்த கார் ஷெட்டில் இரும்பு கம்பியில் கயிற்றை கட்டி ராமசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினரை அழைத்து ராமசாமி உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 

  பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மணிமேகலை மோகனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  ஆதம்பாக்கத்தில் திருமணமான 20 நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  ஆலந்தூர்:

  ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணாபுரம், 3-வது தெருவை சேர்ந்தவர் விஜயன்(வயது29). கால் டாக்சி டிரைவர். இவருக்கு திருமணமாகி 20 நாட்கள் ஆகிறது. விஜயனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்நிலையில் புது மாப்பிள்ளையான விஜயன், அக்காள் வீட்டுக்கு விருந்துக்காக சென்று வந்தார். அப்போதும் அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனை அவரது அக்காள் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த விஜயன் வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  பால் சொசைட்டி நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  சேலம்:

  சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பூலாவரி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36).இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி (வயது 25) என்ற மனைவி உள்ளார்.

  சக்திவேல் அந்த பகுதியில் பால் சொசைட்டி வைத்து நடத்தி வந்தார். கடந்த 3 மாதமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த சக்திவேல்  நேற்று வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார் .

  இதை கண்ட உறவினர்கள் சக்திவேலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். 

  இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  வில்லிவாக்கத்தில் கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை வழக்கில் பைனான்சியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கொளத்தூர்:

  வில்லிவாக்கம் அடுத்த தாதங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மாரி (வயது28). இவர் அதே பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.

  தற்போது சரியாக வேலை இல்லாததால் மாரியால் கடனை சரியாக கட்டமுடியவில்லை. ரூ.35 ஆயிரம் பாக்கி வைத்து இருந்ததாக தெரிகிறது. இதனால் பணம் கொடுத்தவர் மாரிக்கு நெருக்கடி கொடுத்தார். இதில் மன வேதனை அடைந்த மாரி இதுகுறித்து வீடியோவில் பேசி அதை தனது நண்பர்களுக்கு அனுப்பி விட்டு கடந்த 23-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  இதுதொடர்பாக வில்லிவாக்கம் அடுத்த ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் வடிவேலை போலீசார் கைது செய்தனர்.

  திருவள்ளூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருவள்ளூர்:

  திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம், நல்லாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மேகநாதன்(வயது36). இவரது மனைவி ஹேமலதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

  மேகநாதன் கடந்த சில மாதங்களாக மதுகுடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த ஹேமலதா 2 குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

  இதனால் மனவேதனை அடைந்த மேகநாதன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  திருக்கழுக்குன்றம் அடுத்த அமிர்தபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஏகம்மாள்(60). கணவரை இழந்த இவர் மகனுடன் வசித்து வந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த ஏகாம்மாள் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.